Friday, August 28, 2026

சொல்லாமல் இருக்க முடியவில்லை: கவிஞர் தணிகை

 சொல்லாமல் இருக்க முடியவில்லை: கவிஞர் தணிகை



42 ஆண்டுகளாக அடியேனும் தியானப் பயிற்சியில் இருக்கிறேன்.


விரல் விட்டு எண்ணக் கூடிய அற்புத மனிதர்கள் அடியேன் மூலமும் தியானம் கற்றுக் கொண்டு நற் தொடர்பில் இருக்கின்றனர் ஒரு மருத்துவர் சில பொறியாளர்கள் உட்பட...


தியானம் என்பது கற்றுக் கொடுக்க முடியாதது, கற்றுக் கொள்வது என்பதே நியதி

கண்களை மூடி உலகைக் காணவும், கண்களைத் திறந்து உலகை மறக்கவும் சேதி சொல்லும் அற்புதக் கலை இது.

ஒரு ராத்திரியில்

ஒருவர் என் அருள் பெற தமிழக மக்களே  எனது ஒரு ருத்திராட்சத்தை இலவசமாகப் பெறுங்கள் என்றவர் மூளையில் ஒரு அறுவை சிகிச்சை தலைநகர மருத்துவ மனை ஒன்றில் எடுத்துக் கொண்டவர் இப்போது தமது வெளி நாட்டு சீடர்கள் நேபாள வெள்ளத்தில் காணோம் என்று கண்ணீர் வடித்துள்ளார்.


இவர் அருள் மூலம் இவரது சீடர்களைக் காப்பாற்றி இருக்கலாம்


இவனோ அவனோ எவனோ எதுவும் செய்ய முடியாது...இயற்கை என்பதில் யாவும் அடங்கும் அடக்கும்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment