வியப்பும் மலைப்பும் தந்த சில செய்திப் பூக்கள்: கவிஞர் தணிகை
1.தேன் வளைக் கரடி அல்லது தேன் வளைத் தரைக் கரடி என்ற ஒரு விலங்குதான் மிகுந்த அபாயகரமான பயமே இல்லா
விலங்கு.அதன் தோல் காட்டெருமைத் தோலை விட 6 மில்லி மீட்டர் அதிக கனமுடைய தடித்ததாக இருக்கிறதாம். இதை எந்த விலங்காலும் எந்த எதிர்ப்பு விலங்காலும் கடிக்கவே முடியாதாம். மேலும் எந்த பாம்பின் விஷமும் இதை ஒன்றும் செய்ய வழியில்லை.இது கீரியைப் போல ஒரு சிறு விலங்கே ஆனால் இதை எதிர்த்து யானை, சிங்கம் , புலி போன்ற காட்டின் பெருவிலங்குகள் கூட இதைப் பார்த்தால் விலகிச் சென்று விடுமாம்.அப்படி எந்த விலங்காவது இதை எதிர்த்தால் அதன் உயிர் நிலையைக் குறிவைத்தே அதைத் தாக்கி நிலை குலைய வைத்து வெற்றி பெற்று விடுமாம். இதன் உணவு அனைத்தும்.
2. ப்ரிஸ்டல் வேல்ஸ் இங்கிலாந்தில் கான்கார்ட் விமானத்தில் பணி புரிந்த 92 வயது இளைஞர் தினமும் 7 முதல் 10 கி.மீ ஓடுவதாகவும் எல்லா வகையான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வதாக ஆதாரப்பூர்வமாக அவரது படத்துடன் வெளியிட்ட செய்தி என்னை பிரமிக்க வைத்தது.அவர் பேர் மறந்து விட்டது. தேடிப் பாருங்கள் வேண்டுமெனில்.
3. ப்ரியன் ஜான்சன் என்ற அமெரிக்கர் வயதே ஆவதில்லை எனக்கு ஆண்டுகள் செல்வதால் எனது உடல் உறுப்புகளில் எந்த தேய்மானமும் நடக்கவில்லை . நான் அதை அப்படியே வைத்திருக்க முயற்சி செய்கிறேன் அவர் 2036ல் மரணமே இல்லை என்பதை நிரூபித்து விடுவேன் என அவரது நிறுவனத்தின் சார்பாக அந்த ஆய்வுக்காக இது வரை சுமார் 16 கோடி செலவளித்திருப்பதாக ஒரு செய்தி.
4. இதற்கு முரணாக அதிக காலம் வாழ்வெதென்பதே அறிவியல் முயற்சி., மரணம் இல்லை என்ற முயற்சி அழிவை நோக்கிச் செல்வது என்கிறார் மரு. எவி ராய் என்ற அறிவியல் அறிஞர். இந்தியாவில் பிறந்து உலகின் மேல் நாடுகளில் எல்லம் இவரது கல்வியை, பணியைத் தொடருபவர்.இவர் மருத்துவர் என பிணி தீர்க்கும் மருத்துவர்களையும், அவர்களுக்கு வழிகாட்டி மருந்துப் பொருட்களை கண்டறிய முடியும் மருத்துவம் சார்பான அறிவியல் படித்து முனைவர்களான மருத்துவர்களையும் மருத்துவர் என்றே குறிப்பிடுகிறோம் என்கிறார். இவர் மருத்துவர்களை மருத்துவத் துறை நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிறது. சுமார் எனது நினைவு சரியாக இருப்பின் ஓராண்டில் 10 இலட்சம் முதல் 30 இலட்சம் வரை மருத்துவ அறிக்கைகள் மனித மருத்துவத்தை மனித ஆயுளை மனித உடலை மேம்படுத்த வந்து கொண்டே இருக்கின்றன, அதை மருத்துவர்கள் படித்து தங்களை காலத்துக்கேற்ப மேம்படுத்திக் கொண்டு மருத்துவம் செய்ய நேர்ந்தால் இன்னும் மனித வளம் மேம்படும் என தமது இந்தியா டுடே பேட்டியில் சோனாலி என்பவருடன் பேசியிருக்கும் காணொளி மிக்க கருத்துச் செறிவுடன் அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது. பெரும் அறிஞர்கள் அந்த நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.
5. இரு கைகளையும் இழந்த பிஹாரி இளைஞர் ஒருவர்க்கு 8 பெண்கள் கொண்ட அரசு மருத்துவர்கள் அடங்கிய பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் வலது இடது கைகளை மாற்றி மொழியறியாத அந்த இளைஞரை சுமார் 4 + 14 நாட்கள் அரசு மருத்துவமனையிலேயே வைத்து அரிய அறுவை சிகிச்சைகள் மூலம் தமனி, சிறை, நரம்புகள் யாவற்றையும் இணைத்து கரஙக்ளை இணைத்து அவரை வாழ்வைத்திருக்கிறார்கள் அப்படிப்பட்ட அறுவை சிகிச்சைகளில் இது உலகிலேயே 4 முறைதான் செய்யப் பட்டிருக்கிறதாம். இது 4 வது முறை என்ற ஒரு காணொலியை தம்பி வேலாயுதம் அனுப்பிய காணொலி மூலம் அறிந்து கொண்டேன். மிக ஊக்கமுடைய , முயற்சியுடைய பெண் மருத்துவர்கள் மேல் மிக்க மரியாதையை ஊட்டும் காணொலியாக வல்லமையுடைய பெண்கள் என்ற தரத்தில் அது இருந்தது.
* சில நேரங்களில் விண்ணியல் மற்றும் இது போன்ற செய்திகளை உள் வாங்கும் போது நேரம் போதவில்லை. அவ்வளவு ஆர்வத்தை, உடலைக் கூட கெடுத்துக் கொண்டு படிக்க வேண்டிய செய்திகளை அறிவியலும் இணையமும் தந்து வருகின்றன.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment