சிவப்பு ரொட்டியூர் மேம்பாலத்தின் கல்வெட்டு மேல் பயில்வான் பல்பு படுத்துக் கிடந்தான். தலை தனியே தொங்கிக் கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு பட்டன் செல்பேசி இருந்தது. பார்ப்பார் எல்லாம் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் இவன் போதையில் தெரியாமல் புரளும்போது பாலத்திலிருந்து பல்பு கீழே விழுந்து விடுவானே என பயந்த படியே பரிதாபப் பட்டுக் கொண்டும் அனுதாபம் கொண்டும் சென்று கொண்டிருந்தனர்.
கொஞ்ச நாளுக்கும் முன்பு தான் , அந்தப் பக்கத்தில் இருந்த முட்டுக்கால் முனியப்பன் கோவிலில் சிசிடிவி இருந்த போதும், முகத்தை கறுப்புத் துணியை மூடிக் கொண்டு உண்டியலை கடப்பாரை கொண்டு நெம்பி கொள்ளை அடித்திருந்தான் ஒருவன், மேலும் பக்கமிருந்த மாரியம்மன் தாலியும் திருடப்பட்டது அங்கு பூட்டுகளை உடைக்க முடியாமல் போனதால்.
சில வருடங்களுக்கும் முன் அப்படி அந்தப் பகுதிகளின் கோவில்களில் நடந்திருந்த படியால் தாம் சிசிடிவி முனியப்பன் கோவிலில் வைத்தார்கள்...
இப்போது,அங்க அடையாளம் வைத்து காவல் துறை திருடனை, கொள்ளைக்காரனைப் பிடித்ததால், அவன் அதில் ஐந்தாயிரம் மட்டுமே இருந்தது என்றிருக்கிறான்
மாலை மயங்கியது, சிறுவன் வீரண்ணன் அந்தப் பக்கம் போகும் போது பயில்வான் பல்பு சுரணையின்றி பாலத்தில் படுத்துக் கிடப்பதைப் பார்த்து விட்டு அந்த செல்பேசியை எடுக்க கை நீட்டி தொட்டதுதான் தாமதம், கப்பென்று அவன் கையை பயில்வான் பல்பு பிடித்துக் கொண்டான்.
ஏன்டா? எங்கிட்டியே செல்போன் திருடப் பார்க்கிறியா? எடு என் பாக்கெட்டிலிருந்த எடுத்த அந்த இரண்டாயிரத்தை முதல்ல குடு , என்றான், நான் எதுவும் எடுக்கல என் சிறுவன் அழ ஆரம்பித்தான், வா, வா ஒங்க வீட்டுக்கு போலாம், பெத்தவங்க கிட்ட வந்து கேட்கிறேன் என, தர தர என வராத சிறுவனைப் பிடித்து இழுத்தபடியே சென்று கொண்டிருந்தான் பயில்வான் பல்பு...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment