தீப ஒளி சிறப்புச் செய்தி: கவிஞர் தணிகை
எந்த திட்டமானாலும் அதை மிகவும் நேர்மையாக பார பட்சமின்றி ஒரு தலைப் பட்சமின்றி தெளிவுடன், தூய்மையுடன் கண்டிப்புடன் இரும்புக் கரம் என்று சொன்னாலும் சரி என்று நிறைவேற்றுகிற தலைமையை ஊக்குவிக்க வேண்டும்.
DEEPA VALI...
1. குடும்பத்துக்கு அல்லது வீட்டுக்கு ஒரு மத்திய அரசுப் பணி அல்லது மாநில அரசுப் பணி ஏதாவது ஒன்று ஒருவர்க்கு மட்டும் இருந்தால் போதும். பொருளாதாரம் செழிக்கும். ( தகுதிகளுக்கேற்ப அல்லது படித்த கல்விப் படிப்புக்கு ஏற்ப)
2. அதனால் இலவசங்கள் குறைக்கப் பட்டு அரசுக்கு செலவினங்களை மடை மாற்றம் செய்து கல்வி, மருத்துவம் போன்றவற்றை இலவசமாக்கலாம்.
3. இதைப் பற்றிய புள்ளி விவரங்கள் அல்லது தரவுகள் அரசிடம் அதன் துறைகளிடம் ஏற்கெனவே நிரம்ப உள்ளன அதை வெகுவாகப் பயன்படுத்தலாம்.
4. வருவாய்த் துறை,பதிவுத் துறை, மின் துறை போன்ற எல்லாத் துறைகளிலும் தினக்கூலி அல்லது தற்காலிகப் பணியாளர்கள் சிறு வருவாயுடன் பணி செய்து வருகின்றனர் பல ஆண்டுகளாக அவர்கள் எல்லாம் கணக்கில் எடுக்கப் பட்டு குடும்ப பராமரிப்புக்காக போதுமான அளவு ஊதியம் நிரந்தரம் செய்ய வேண்டும்.அடிமட்ட அளவில் பணி புரிகின்ற அவர்கள் எல்லாம் அரசுப் பணியில் இருக்கின்றனர் ஆனால் அரசுப் பணியில் நிரந்தர ஊதியத்துடன் இல்லை.
5. நதி நீர் இணைப்பு பொருளாதரத்தின் ஒரு திறவு கோல் . அதற்கு காலாட் படை, விமானப் படை, கப்பற்படை பயன்படுத்தப் படலாம். அதற்கான ஆள் சேர்ப்பு இன்றைய வேலையில்லா இளைஞர்களுக்காய் இருக்கலாம்.
6. நாட்டின் கவனத்துக்குரிய பிரபலமான தலைமைப் பொறுப்பில் உள்ளார் கூட ஓய்வு பெற்ற பின் மீண்டும் பணிக்கோ பொறுப்புக்கோ, பதவிக்கோ ஆசைப்பட்டு தங்களது பணி வாய்ப்பை பதவி வாய்ப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்கலாம்.
7.எந்த திட்டமானாலும் அதை மிகவும் நேர்மையாக பார பட்சமின்றி ஒரு தலைப் பட்சமின்றி தெளிவுடன், தூய்மையுடன் கண்டிப்புடன் இரும்புக் கரம் என்று சொன்னாலும் சரி என்று நிறைவேற்றுகிற தலைமையை ஊக்குவிக்க வேண்டும்.
8. ஆபத்தான தொழில், பட்டாசு தயாரித்தல்,போன்ற தொழில்களை எல்லாம் செய்ய அறிவியல் செயற்கை ம நுண்ணறிவு, தானியங்கி ரோபோக்கள் பயன்படுத்தல் அல்லது அந்த தொழில்களை மடை மாற்றம் செய்ய வேண்டும். அந்த தொழிலாளர் வாழ்வை மேம்படுத்த வேண்டி மாற்றுத் தொழில்களை ஏற்படுத்தி தரல் வேண்டும் அல்லது வாழ்வின் உத்தரவாதமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அரசு உறு துணை புரிய வேண்டும் (உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் கல்வி)
இப்படி பலப் பல...இந்தியா வல்லரசாக நல்லரசாக...கலாம் கண்ட கனவுகளுடன் உள்ளன.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
பி.கு: இங்கு நேர்மறை எண்ணங்களுடன் மட்டுமே கருத்துகள் வைக்கப் பட்டுள்ளன.
No comments:
Post a Comment