Tuesday, June 6, 2023

எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கிய மலையேற்ற வீரரை காப்பாற்றிய நேபாள இளைஞர் -

 எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கிய மலையேற்ற வீரரை காப்பாற்றிய நேபாள இளைஞர் - நெகிழ்ச்சியான காட்சிகள்



நெகிழ்ச்சியான காட்சிகள்

எவரெஸ்ட் சிகர மலையேற்றத்தின்போது, ஆபத்தில் மாட்டிக்கொண்ட ஒரு மலையேற்ற வீரரை, நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவர் காப்பாற்றியிருக்கிறார் .அவருடைய பெயர் கெல்ஜி ஷெர்பா

இந்த மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக, எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தன்னுடைய பயணத்தை கெல்ஜி கைவிட்டிருக்கிறார்.ஆபத்தில் இருந்த மலையேற்ற வீரரை, கெல்ஜி ஷெர்பா தன்னுடைய தோளில் சுமந்துகொண்டு, கீழே பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்துள்ளார்.

இந்த மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக, எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தன்னுடைய பயணத்தை கெல்ஜி கைவிட்டிருக்கிறார்.ஆபத்தில் இருந்த மலையேற்ற வீரரை, கெல்ஜி ஷெர்பா தன்னுடைய தோளில் சுமந்துகொண்டு, கீழே பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்துள்ளார்.

எவரெஸ்ட்டின் மிக ஆபத்தான பகுதி ஒன்றில், இந்த மலேசிய மலையேற்ற வீரர் கயிற்றைப் பற்றிக்கொண்டு தொங்கிக்கொண்டிருப்பதை கெல்ஜி பார்த்தார். அப்போது அங்கு வெப்பநிலை -30டிகிரிக்கும் கீழே இருந்தது.அத்தனை பெரிய உயரத்தில், அங்கிருக்கும் நிலைமையைப் பார்க்கும்போது மீட்புப்பணியில் ஈடுபடுவது சாத்தியமில்லை என நேபாள அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கெல்ஜி அவரைக் காப்பாற்றிவிட்டார்.

மலேசிய வீரரைப் பார்த்தபோது, கெல்ஜி தன்னுடைய வாடிக்கையாளரான சீன மலையேற்ற வீரர் ஒருவருடன் மலையேறிக் கொண்டிருந்தார். ஆனால் மலேசிய வீரரின் நிலையை உணர்ந்த கெல்ஜி, அவரைக் காப்பாற்றுவதற்காக, தன்னுடைய வாடிக்கையாளரிடம் எவரெஸ்ட்டின் உயரமான பகுதியை எட்டும் முயற்சியை தற்போது கைவிடுமாறு கோரினார்.

”நான் அவருடைய உடல்நலம் குறித்து மிகக் கவனமாக இருந்தேன். அவருடைய உடல்நிலை மோசமாக இருந்தது, அவர் இறக்கும் தறுவாயில் இருந்தார். அதனால் அவருக்கு மேற்கொண்டு எதுவும் ஆகிவிடாமல், பத்திரமாகக் கீழே அழைத்து வந்தோம்.

அவரை கீழே அழைத்துவரும்போது, அவருக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பது தெரிந்தது. எனவே என்னிடமிருந்த நான்கு பாட்டில் ஆக்ஸிஜனை நான் அவருக்கு அளித்தேன்.

அவருடைய நிலையில் நான் இருந்திருந்தால் எப்படியிருக்கும் என நினைத்துப் பார்த்தேன். இப்படியொரு மோசமான நிலையில் என்னை யாராவது காப்பாற்றி இருந்தால் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பேன்.” என்று இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து குறிப்பிடுகிறார் கெல்ஜி.
thanks BBC Tamil
05.june.2023 



No comments:

Post a Comment