Saturday, March 11, 2023

சர்வதேச மகளிர் தினத்தில் சோனா எப்.எம் பண்பலையில் கவிஞர் தணிகை

 


சர்வதேச மகளிர் தினத்தில் சோனா எப்.எம் பண்பலையில் கவிஞர் தணிகை



1. எர்ணாகுளத்தில் தென்னிந்திய பிரதிநிதிகள் அடங்கிய 40 பேர் குழுவில் தனியொருவனாய் மரக்கறி உணவாளனாய் நின்றபோது எனக்கென தனிக்கவனத்துடன் வாரக் கணக்கில் சலித்துக் கொள்ளாமல் அன்பான கரிசனையுடன் தாயினும் கனிவாய் உணவு தயாரித்தளித்த கன்னியாஸ்திரி


2. அன்னை தெரஸா: விமானக் கட்டணத்தை பெற்றுக் கொண்டு ரயில் பயணத்தின் வழி சென்று மீதப் பணத்தை தேவையானவர்க்கு செலவளித்து உயிரளித்த, நோபெல் பரிசின் பணத்தையும் அவர்க்கே செலவளித்த உன்னத ஆன்மா, தாயைக் கூட திரும்பவும் அவர் பிறந்த நாட்டில் சென்று காணாத முழுத் தியாகம்


3. படிப்பறிவில்லாவிட்டாலும் மணிக்கணக்கை சரியாகப் பார்க்கத் தெரிந்த, வரவு செலவை நடத்தத் தெரிந்த குழந்தை இல்லை என வேறு மணம் செய்யச் சொன்ன போதும் அமைதி காத்து அதன் பின் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்த அன்புத் தாய் தெய்வா(னை) ஒன்று தவற 5 பெண்கள், 3 ஆண்களை உருவாக்கிய அன்புத் தாய் நெசவுத் தொழில் செய்யப் பழகிய சிறுமி பெரும் குடும்பத்தின் தாயாக வளர்ந்த வளர்த்த கதை...ஐந்து பெண்கள் பெற்றால் அரசனும் ஆண்டி என்பதை மாற்றி 5 பெண்கள் பெற்றாலும் தமது அரசனை அரசனாகவே வைத்திருந்த அன்புத் தாய்,


4. இரட்டைப் பின்னலிட்டு, குளிக்க வைத்து, ஆடை அணிவித்து மறு தாயாய் இருந்த சகோதரி மல்லிகேஸ்வரி


5. தாயொடு அறுசுவை போம் என்ற பழமொழிக்கும் பின் மனைவி சுவையுடன் உணவு செய்து தந்து கோலம் தெரியாமல் வந்து கோலப் போட்டிகளில் பரிசை வெல்லுமளவு கை வண்ணம் தெரிந்த துணைவி 


இப்படி எனது நினைவிலாடிய சில பெண்களை நேரலையில் பகிர்ந்து பெருமைப் படுத்தினேன்.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment