Wednesday, August 10, 2022

வீணாகப் போகிறாள் காவிரி....கவிஞர் தணிகை

 


 போங்கடா நீங்களும் ஒங்க விவசாயமும் நீர்த் தேக்கமும் என்ற காவிரி ஒரே பாய்ச்சலாக பாய்ந்து கடலில் சென்று சேர விரைந்து ஓடிக் கொண்டிருக்கிறாள்.

தண்ணீ இல்ல தண்ணீ இல்லேம்பிங்க, குடிக்கிற தண்ணியைக் கூட அளவு பாத்து நிறுத்துவீங்க, காசை ஏத்தி ஏத்தி ஏழை பாளைங்களை குழப்புவீங்க இப்ப பாருங்க‌ அவனும் நிறுத்த முடியாமதான் அனுப்பறான், நீங்களும் நிறுத்த முடியாமதான் அனுப்புறீங்க...

என்னிக்கிடா என்னை பொக்கிஷமா நினைச்சு வீணாக்காம விளைச்சலுக்கு நீர் மேலாண்மை செய்யப் போறீங்க?

என்றபடி போங்கடா நீங்களும் ஒங்க விவ சாயமும் நீர்த் தேக்கமும் என்ற காவிரி ஒரே பாய்ச்சலாக பாய்ந்து கடலில் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறாள் தாயோட பிள்ளையாக....



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


வீணாகப் போகிறாள் காவிரி....கவிஞர் தணிகை

2 comments:

  1. அப்படி சொல்லிவிட முடியாது தணிகை!
    கடல் முகத்துவாரத்தில் இப்படி புதிய நீர் அவ்வப்போது சென்று அங்குள்ள சேறுகளை கடலுக்குள் செலுத்த இப்படி பொங்கி வரும் நீர் தேவை!
    ஏராளமாக தண்ணீர் வீணாகிறது என்ற ஆதங்கம் நமக்கு ! ஆனால், நமது தேவைக்கு உபயோகப்படுத்த பல நல்ல திட்டங்களை தீட்டி செயல்படுத்தினால் போதும். மனித குலம் தழைக்கும்.
    ஆனால் செய்ய மாட்டார்கள்.
    இயற்கை அதுபாட்டுக்கு தன் வேலையை செய்கிறது.

    அதற்காகத் தான் மகரிஷி அளவான, தேவையான மழை பொழியட்டும் என்ற பாடலை அர்த்தமுள்ளதாக பாடினார்.

    ReplyDelete
    Replies
    1. நமது தேவைக்கு உபயோகப்படுத்த பல நல்ல திட்டங்களை தீட்டி செயல்படுத்தினால் போதும். மனித குலம் தழைக்கும். ...yes you are right Naga....thanks for your feedback and comment on this post. vanakkam.

      Delete