Sunday, February 17, 2019

எனக்கு எழுத தடையாக இருப்பவை எவை? கவிஞர் தணிகை

எனக்கு எழுத தடையாக இருப்பவை எவை? கவிஞர் தணிகை


Related image

தினமும் பணி ,பயணிகள் ரயில் மறு அறிவிப்பு வரும் வரை ஓடாது என நிறுத்தம், பேருந்தில் சென்று வருவது அவலமாக சோர்வாக மாற்றம்,வந்து உடல் நிலை பேண அலுவலக பையை எடுத்து மதிய உணவு டப்பாக்களை திறந்து வைத்து விட்டு நீர்க் குடுவையை திறந்து வைத்து விட்டு நடைப்பயிற்சி ஆறு மணிக்கும் மேல் சென்றால் எட்டு மணி சுமாருக்கு வீடு திரும்பல். அதன் பின் ஒரு சிறு உடல் கழுவும் குளியல்.

உடல் நலம் இருந்தால்தானே தியானம்..கட்டுகளிலிருந்து விடுபடல், இணையத்தின் தொடர்பு எழுதல் படிப்பு யாவுமே...எனவே  கையில் கட்டிய சுகாதாரப் பட்டை ஹெல்த் பேண்ட் அவசியம் நடைப்பயிற்சி மேற்கொள்ள உதவிட  சுமார் 10000 முதல் 20000 ஆயிரம் அடிகள் குறைந்தபட்சம் 6 கி.மீ முதல் அதிகபட்சம் 10 கி.மீ வரை ஒரு நாளுக்கான நடை...

அதன் பின் எளிய இரவு உணவு.

செய்தி பார்ப்பது இணையத்தில்

இடையே ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் சில அத்தியாயங்கள் படிக்க முயற்சி செய்வது அதுவும் படிக்க முடியாதது சில நாட்களில்

துணைவியின் தொலைக்காட்சி தொடர் தொல்லைகள்

சுமார் 10 மணியானதும் தூக்கம் சொக்க‌

10. 30 மணிக்கு அல்லது 11 மணி வரை தாக்குப் பிடிக்க முயற்சி செய்தாலும் எதுவும் எழுதவே முடிவதில்லை

மறுபடியும் அதிகாலை 4 மணிக்கு தூக்கத்துடன் போராடியபடி  விழித்து எழுந்து விடியல் துணையாக‌ தினமும் எழும் துணைவியின் உணவு தயாரித்தளித்த உதவியுடன் எல்லா உடல் ஓம்பும் முறைகளையும் அனுசரித்து விட்டு சுமார் 6.25 மணிக்கு பேருந்து ஏறி பணிக்கு  பயணம்...மறுபடியும் ஒரு நாள் ஓட்டம்..

கல்லூரியில் அலுவலகப் பணி, நோயாளிகள் குறை தீர்ப்பு, மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரிகளில் முகாம் பல் பரிசோதனை முகாம்கள் விழிப்புணர்வுக் கூட்டங்கள் ....நண்பர்கள் தரும் அரிய புத்தக இணைவுகள்.. முதல்வருக்கு கல்லூரியில் மேம்பாட்டுக்கு உதவிகரமாக இருத்தல், தமிழில் தேவைப்பட்டால் கடிதங்களின் தேவையை செய்து கொடுத்தல்

இப்படியாக  ஒரு நாளின் ஓட்டம் உடன் மத்திய ரிசர்வ் போலீஸ் 44 பேரின் மரணம், தேர்தலில் நிற்க மாட்டேன் என்னும் ரஜினி, ஸ்டாலினை தன்னை காப்பி அடிப்பதாகச் சொல்லும் கமல்,   வழக்கறிஞர் ஸ்னேகா மும்தாஜ் ஜென்னிபர் இப்படி கேள்விப்படும் செய்தி பற்றி எல்லாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும், எதிர்ப்பு  தெரிவிக்க வேண்டும் அதைப்பற்றி இதைப்பற்றி எல்லாம் எழுத வேண்டும் என நினைத்துக் கொண்டே நாள் ஓடி மறைய சூட்டோடு சூடாக எழுதினாலே கொஞ்சம் பேர்தான் படிப்பர் சூடு ஆறிய பின் எத்தனை பேர் படிப்பார்கள் இந்த வலைப்பூவில் என்ற நினைவுடன் எழுதாமலே போய்க்கொண்டிருக்கிற நாட்கள்
Related image
இடையே கீதகோவிந்தம் , துப்பாக்கி முனை, மிடில் கிளாஸ் ஆம்பள, ஆண் தேவதை என சினிமாக்கள் தேவையான பணிக்கு மின்னஞ்சல்

சனிக்கிழமையானால் சனி நீராட எண்ணெய்க் குளியல், விட்டுப் போன தியானம், அமைதி சூழல் கண்டு அமர்தல், ஞாயிறு கண்டால் முகமழித்தல் சிகை சீர் செய்தல், கற்றாழை சாப்பிடல், பணிக்குத் தேவையான ஆடைகளை சலவை செய்து வைத்தல், பெரிய காரியம், திருமணம் போன்றவற்றுக்கு தவிர்க்க முடியாதிருந்தால் செல்லல்...

மகன் வந்திருந்தால் அவனோடு சிறு நேரப் பகிர்வு...

என்னை கல்லூரி உள் வாங்கி விட்டது. விடுமுறை என செல்லாமல் இருந்தாலும் அந்த  4 மணி சுமாருக்கு கல்லூரி நினைவோட்டமே மூளையில் ஓட விழித்தபடியே படுத்துக் கிடக்க பிடிக்காமல் இடையே எழுந்து ஏதாவது ஆக்க பூர்வமாக செய்ய முனைவது புழக்கடைப்பக்கம் நாய் மலம் சுத்தம் செய்வது, கீழே விழுந்து கிடக்கும் மர இலைகளைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வது  இடையில் கொஞ்சம் நேரம் வாட்ஸ் அப் பார்ப்பது அதையும் தொடர்புக்காக சாதனமாக பயன்படுத்துவது

இப்போது கல்லூரி கொடுக்கும்  அந்த ஊதியம் போதாமையால் அவர்கள் கொஞ்சம் கூட இந்த மூன்று ஆண்டுகளில் கல்லாக நின்று கனியாததால் ஒரு நல்ல மனிதரின் தொடர்பாக வாரத்தில் சில மணிகள் ஒரு போலந்திலிருந்து இஸ்கான் வந்துள்ள ஒரு அயல் நாட்டு மனிதருக்கு தமிழ் பயிற்றுவிக்க ஏற்பாடும் செய்ய முனைந்துள்ளேன்...அதனால் கிடைக்கும் சிறு வருவாய் விழுங்கி வரும் பேருந்து செலவுக்கு ஈடு கட்டட்டுமே என்று...மேலும் சகோதரியின் வீடுகளின் வாடைகையும் மாதமொரு நாள் கொண்டு சென்று கொடுக்க சில மணி நேரமும்

இடையே பொது நல போராட்டங்களை கையில் எடுக்க விருப்பமும்...ஆக‌

நாளை நரியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மேச்சேரி அருகே மல்லிகுந்தம் வழியில் பாலமுருகன் கலை அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவர் சேவைத்திட்டத்தின் கீழ் எமது பல் பரிசோதனை முகாமை நடத்தச் செல்ல இருக்கிறோம். விழிப்புணர்வை ஊட்டிக் கொண்டே இருக்கிறோம் அதிக நேர விழிப்புடன் போதுமான ஊதியமோ வரவோ சிறப்பாக பெரிதாக இல்லாமல்...இதன் பேர் என்ன சேவைதானே....எப்போதுமே பராமரிப்புக்கென கிடைப்பது மட்டுமே இயற்கையின் கொடை எனக்கு.
Related image
இடையே வங்கிகள் , அரசு, தொலைபேசி நிறுவனங்கள் கொடுக்கும் தொல்லைகளை களைய முனையும் முயற்சிகள் அதற்கான பயணங்களும்

அட நீ எழுதி மட்டும் என்னய்யா ஆகப்போகிறது என்ன கிழிக்கப் போகிறீர் என்ற உங்களில் சிலர் கேட்பதும் சரிதான். ஆனால் எழுதுவதை சுமார் 50 ஆண்டுக்கும் மேலாக கடைப்பிடித்து வருகிறேன் அதை விட்டு விட முடியாதே சுமார் 180 நாட்களுக்கு கடைபிடிப்பதே ஒரு பெரு வழக்கமாகிவிடும் எனச் சொல்ல இந்த அரிய பழக்கம் என்னை விட்டு விடுமா? எழுதாவிட்டால் எதையோ இழந்தது போல அல்லவா இருக்கிறது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment