Monday, February 11, 2019

சேலம் மேட்டூர் மற்றும் சேலம் கரூர் ரயில்களின் ரத்து அப்பட்டமான தனியாருக்கான சுரண்டல்: கவிஞர் தணிகை

சேலம் மேட்டூர் மற்றும் சேலம் கரூர் ரயில்களின் ரத்து அப்பட்டமான தனியாருக்கான சுரண்டல்: கவிஞர் தணிகை


Image result for salem to mettur train cancelled?
56102 சேலத்திலிருந்து மேட்டூர் செல்லும் ரயில் முதலில் 5.30 மாலையில் நேரம் குறித்தபடி செல்ல முடியாமல் 6 மணி வரை கூட எடுக்கப்பட்டு வந்தது ஆனால் நிறைய கூட்டத்துடன்

உடனே அந்த ரயிலை மாலை 5 மணி என்று மாற்றினார்கள்...அதாவது ரயில்வே நேரப்படி 17 .00 மணிக்கு புறப்பட்டு செல்ல ஆரம்பித்தது. அப்போதே இப்படி கால நேரத்தை முன்னதாக வைத்து போக்கு காட்டி விட்டு ஒரு நாள் நிறுத்த இருக்கிறார்கள் என்பது முன் கூட்டியே யூகித்ததுண்டு.

அதே போல கடந்த 4 பிப்ரவரி முதல் சேலம் மேட்டூர் ரயில் மற்றும் சேலம் கரூர் ரயில் நிறுத்தப்பட்டுவிட்டது.

காரணம் ஏதேதோ சொல்லப்படுகின்றன. இயக்க...ஆப்ரேட்டிவ் சிஸ்டம் என்றும் நிறைய அனல்மின் நிலையத்துக்கான ரயில் பெட்டிகள் வந்தபடி இருக்கின்றன என்றும்...

ஆனால் வெட்டியாக காலையில் அந்த ரயிலை  மேட்டூருக்கு அனுப்பி விட்டு மேட்டூரில் வெட்டியாக காலை முதல் மாலை 7 மணி வரை நிறுத்தி அதன்பிறகு  இரவு சுமார்  7 மணிக்கும் மேல் ஏன் எடுத்துச் செல்கிறார் என்பதும் கேட்க வேண்டிய பதில் தெரியாக் கேள்வி.இது பற்றி ரயில்வே ஊழியர்களுக்கும் கேட்கீப்பர்களுக்கும் கூட புரியவில்லை தெரியவில்லை. அவர்களும் பயணிகளான எங்களைப்போலவே இருக்கிறார்கள்.

இதற்கிடையே எனக்கு வரும் 21.02.19 வரை கொடுத்த அனுமதிச் சீட்டு விரயமாகி வருகிறது. கடந்த 4 ஆம் தேதி பிப்ரவரி முதல் ரயில் மறு அறிவிப்பு வரும் வரை ஓடாது என தினசரிகள் மூலம் அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு ரயில் ஓடாது என்ற செய்திகள் தனியார் பேருந்து முதலாளிகளின் கை வண்ணமே இவர்கள் கட்சிக்காரர்களுக்கு கொடுக்க வேண்டிய தேர்தல் நிதியை இப்படி ரயிலை நிறுத்தி வைத்து கணிசமாக சம்பாதித்துக் கொண்டு கொடுக்கத் தயாராகி உள்ளனர் என்றும் அதற்கு ரயில்வே நிர்வாகம் உடந்தையாகி உள்ளது என்றும் இதுபோல்தான் திருச்சி ரயிலில் நிறைய கூட்டம் இருந்த போதும் அது நிறுத்தப்பட்டது என்றும் மேட்டூர் முதல் சேலம் செல்லும் ரயிலை காலையில் வேண்டுமென்றே கால தாமதம் செய்து கல்லூரி செல்லும் மாணவர்களையும்,அலுவலகம் செல்லும் அலுவலர்களையும் ஏற விடாமல் காலை 8. 40 மணி முதல் 9.15 மணி வரை எடுத்து காலதாமதப்படுத்தி சேலம் செல்லும்போது சுமார் 10.30 செய்துள்ளனர் என்றும் மக்கள் பரவலாக உண்மையை பகிர்ந்து கொள்கின்றனர்.

மேலும் இது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கவிஞர் தணிகையாகிய நான் அப்போதைய எம்.எல்.ஏ வேட்பாளர்கள் ஜி.கே. மணி, எஸ்.ஆர்.பார்த்திபன் முன்னிலையில் பேசியதை ஒலி ஒளி பரப்பினார்கள் என்பதும் செய்திகள்.

ரயிலில் தினசரி செல்லக் கட்டணம்  ஒரு நடைக்கு ரூ. 10, மாதம் ஒன்றுக்கு அனுமதிச் சீட்டு: 185 ரூ, 3 மாத அனுமதிச் சீட்டுக்கு ரூ.500. ஆனால் பேருந்தில் மேட்டூர் சேலம் சேலம் மேட்டூர் ஒரு நடைக்கு ரூ. 35. ஒரு நாளுக்கு சென்று வரவே ரூபாய்: 70.தெரிந்து கொள்ளுங்கள் தனியார் தில்லுமுல்லுகளையும் அரசியல் சேவையையும், ரயில்வே ஊழியத்தையும்.

மறுபடியும் பூக்கும் வரை\
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment