Tuesday, December 25, 2018

இது போன்று நடந்து விடக்கூடாதே என்றுதான்...கவிஞர் தணிகை

இது போன்று நடந்து விடக்கூடாதே என்றுதான்...கவிஞர் தணிகை

Image result for road accidents are very huge numbers in india
"எப்போதாவது இது போல் நடந்து விடக் கூடாதே என்றுதான் எப்போதும் பெற்றோர்களும் ஆசிரியப் பெருமக்களும் பிள்ளைகளுக்கு வலியுறுத்தி சொல்லி வருகின்றனர். என்றாலும் இது போன்று சிலரின் வாழ்க்கை செய்திகளாகி விடுகின்றன. இந்தியாவில் வியாதிகளால் இறப்பவர்களை விட விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கையே மிக அதிகம்.
எனவே எப்போதும் விழிப்புடன் இருங்கள் எப்போதும் கவனமாக இருங்கள்..."நன்றி வணக்கம்.

மேற் குறிப்பிட்ட வாசகங்கள்தாம் ஒரு தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து விபத்தில் இறந்த மாணவர் ஒருவரின் இரங்கல் கூட்டத்தில் நான் பகிர்ந்து கொண்ட சொற்கள்.

அந்த மாணவர் பல் மருத்துவக் கல்லூரி மாணவர். அவர் தந்தை எண்ணெய் வள நாடுகள் ஒன்றில் பணி புரிகிறார். மிகவும் சிறிய வசதியான குடும்பம்.அந்த மாணவர்க்கு இரு சக்கர மோட்டார் பைக் ஓட்டுவது என்றால் மிகவும் ஒரே பைத்தியம். அப்படிப்பட்ட அவருக்கு அவர் தந்தை கார் வாங்கிக் கொடுத்திருக்கிறார். கல்லூரியில் சில நாட்கள் வைத்திருந்து விட்டு தமது சொந்த ஊருக்குப் போய் பேருந்து நிலையத்திலிருந்து தமது தாயை வீட்டுக்கு அழைத்து வருகிறார். காரில் வரும் வழியில் கார் விபத்துக்குள்ளாகி இவர் அந்த இடத்திலேயே இறந்து விட இவரது தாய் ஐ.சி. யு... இன்டன்ஸிவ் கேர் யுனிட்...தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இது ஒரு உண்மைச் சம்பவம். இதற்காகவே நான் முன் சொன்னது பேசியது.எது எப்போது எப்படி நடக்கிறது என்பது தெரியாமலே நடந்தேறிவிடுகிறது எனவே எப்போதும் எச்சரிக்கையோடு இருப்பது அவசியமாகிறது.

அந்த பேச்சை அந்தக் கல்லூரி துணை முதல்வர்கள் இருவர்,செக்யூரிட்டி, ஓட்டுனர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் இரசித்து பாராட்டினர். ஆனால் பாராட்டு பெறுவதை விட அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்க்கு இனி இது போன்று நடந்து விடக்கூடாது என்று ஏற்படும் எண்ணம் ஏற்படுவதன்றோ சிறந்தது...

ஒரு மாணவி அன்று நீங்கள் பேசியதை வைத்தே நான் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது என வந்து நட்பு பாராட்டினார்

நேற்று நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன் அது ஒரு கிராமியப் பாதைதான். அங்கு ஒரு பெரிய பாலம் உண்டு. அதில் சுமார் 4 வாகனத்துக்கும் மேல் ஒரே நேரத்தில் பயணிக்கலாம் அவ்வளவு பெரிது. நான் இடது பக்கம் பாலத்தின் கைப்பிடி சுவர் அருகே வந்தபடி இருக்கிறேன் . அது இரவு நேரமும் கூட. திடீரென ஒரு இளைஞர் அவ்வளவு பெரிய சாலையில் வேறு வாகனம் ஏதும் இல்லாத நிலையிலும் எனக்கும் அந்த கைப்பிடிச் சுவருக்கு இடையே வந்து புகுந்து செல்கிறார். எனக்கோ பேரதிர்ச்சி.

அவர் குடிகாரரா, வேண்டுமென்றா செய்தாரா, தெரியாமல் செய்தாரா,  திட்டமிட்டு செய்தாரா,அவர்  எங்காவது மோதி சிதைந்து விடுவாரா என்றெல்லாம் என்னுள் எண்ண அலைகள்... இப்படி வாகனம் ஓட்டுகிறோம் என்ற பேரில் இந்த இளைஞர்கள் செய்யும் அட்டூழியம் கொஞ்சம் நஞ்சமல்ல...

இனி வரும் ஆங்கிலப் புத்தாண்டு செவ்வாய் இரவு இது போன்ற ஏராளமான விபத்துகளை காவல் துறை கையாள வேண்டி வரும். எனவே இது போன்ற ஆங்கிலப் புத்தாண்டில் இரவு நேரக் களியாட்டங்களுக்கு எல்லாம் தடை கூட விதிக்கலாம் . அதில் ஒன்றும் பெரிய தவறல்ல. அது ஒன்றும் நமது கலாச்சார விழாவல்ல.... ஆனால்  நல்லது சொல்வதை இந்த நாட்டில் யார் கேட்கப்போகிறார்கள்...தீபாவளி ஓரளவு கட்டுக்குள் இந்த ஆண்டு வந்துவிட்டது. அது போல் இது போன்ற திமிராட்டங்களும் கையாளத் தகுந்தபடி கட்டுக்குள் கொண்டு வரப்படல் வேண்டும்.

கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும் வரை.

No comments:

Post a Comment