Monday, December 24, 2018

ஏன் இப்படி நடக்கிறது? சாஸ்தாவா சென்னையா ஸ்ரீ சாஸ்தாவா? கவிஞர் தணிகை

ஏன் இப்படி நடக்கிறது? சாஸ்தாவா சென்னையா ஸ்ரீ சாஸ்தாவா? கவிஞர் தணிகை

Image result for private college, company and government ...

ஏற்கெனவே ஸ்டெரிலைட் முதலாளிகள் இப்படி எல்லாம் செய்வார்கள் என்றும், அரசின் காவல்துறை தலையிலும், வாயிலும் காதிலும் அரசுப் பணி என‌ குறி வைத்து பொதுமக்களைச் சுடுவார்கள் என்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் மருத்துவமனைகளில் சொல்ல‌, விஜய்காந்த் கட்சியை எந்த அணியுமே சேர்த்துக் கொள்ளத் தயாரில்லை என்பதும், ரஜினி புதிய தொலைக்காட்சி ஆரம்பிக்கிறார் என்பதும், மேகதாது மேக்கே தாட்டு ஆடு தாண்டும் கால்வாய் பக்கம் வழிமறித்து கர்நாடாகா அணையை தமிழக அனுமதி இல்லாமல் கட்ட முடியாது என நிதின் கட்காரி சொல்வார் என்பதையும் ( மத்திய அரசு அதற்கு வரைவுக்கான அனுமதி அளிக்கப்பட்டும் கூட) ஆஸ்திரேலியாவின் அணிக்கு அரிதான இருதய நோய் உள்ள சிறுவன் பதினைந்தாம் நபராக இருந்து அணிக்கு உதவித் தலைவராக இருந்து உதவி செய்வான்  தெலுங்கானா எட்டு வயதுச் சிறுவன் ஒருவன் ஆஸ்திரேலியா சிகரத்தை தொட்டு விட்டான் என்றும் பல்வேறுபட்ட செய்திகளின் தாக்கத்திடையேயும் ஒரு கேள்விப்பட்ட உண்மைச் செய்தி நெஞ்சை  விட்டு விலகவே மறுக்கிறது...

எம்.ஐ.டியில் படித்த அந்த அரிதான மாணவர் விரிவுரையாளர் பணிக்காக சென்னை ஸ்ரீ சாஸ்தா என்னும் பொறியியல் கல்லூரியில் விண்ணப்பிக்கிறார். பணி கிடைக்கிறது இவரது அசல் சான்றிதழ்களை எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு பணியில் சேர்ந்து சுமார் 20 நாளில் இவருக்கு தாம் படித்த அதே எம்.ஐ.டியில் பணி ஆணை கிடக்கிறது அங்கு இவரால் நகல் சான்றிதழ்களை மட்டுமே சமர்ப்பிக்க முடிகிறது.

இனிதான் கதை ஆரம்பம். இந்தக் கல்லூரியை விட்டு இவர் அரசுக் கல்லூரி என்பதால் அங்கே வேலைக்கு மாறி செல்ல சென்று சேர‌ முனையும்போது அந்த தனியார் கல்லூரி 3 மாத ஊதியத்தைக் கேட்டிருக்கிறது . அதாவது பணி புரிந்த ஒரு மாதம் கழிந்தால் கூட இரண்டு மாத ஊதியத்தைக் கட்ட வேண்டும் என்கிறது.அப்போதுதான் அசல் சான்றிதழ்களைத் தர முடியும் அந்த நபர் பெற முடியும் என்கிறது

எம்.ஐ.டியோ விரைந்து உடனே அசல் சான்றிதழ்களை வந்து சமர்ப்பிக்கச் சொல்கிறது பணியில் சேர்ந்து கொண்டு எம்.ஐ.டியில் சற்று கால அவகாசம் கேட்டபடி இவர் முன் சேர்ந்த தனியார் கல்லூரியில் தமது ஏழமையை விளக்குகிறார்.

அதெல்லாம் இல்லை....முடியாது கட்டி விட்டு அசல் சான்றிதழ்களை பெற்றுச் செல்லுங்கள் என்கிறார்கள்... வீட்டுச் சூழ்நிலையோ என்னவோ, எவரிடமும் கடன் பெறவும் தயங்கிய அந்த படித்த மேதை  இந்தப் பொடித்தாக்குதலை சமாளிக்க முடியாமல்...
Image result for suicide
தற்கொலை செய்து கொண்டார்.

ஒரு வேளை காதல் தோல்வியாக இருக்குமா... எப்படியோ என்ன என்னவோ யோசித்து காரணம் சொல்லலம்...ஆனால் காரணம் இந்த அரசு தனியார் தனி மனித எதிர்ப்புக்கான தாக்குதல்தாம்.

எப்படியோ அந்த மேதையின் இழப்பு...ஒரு சட்டத்தை உருவாக்கி  இருப்பதாக செய்தி ...அதாவது இனி கல்லூரிகள் பணியில் சேர்வாரிடை அசல் சான்றிதழ்கள் கோரி கட்டாயப்படுத்தக் கூடாது என்று...வழிகாட்டிச் சென்றிருக்கிறார் இந்த மேதை தம் உயிரீந்து...டேய் நீ எல்லாம் பூமிக்கே பாரமடா...போய்ச் சேர்ந்ததே சரிதான்...வாழ்வே அனுபவம். போராட்டக் களமே வாழ்க்கை...

உன்னை நம்பிய குடும்பம், பெற்றோர் எல்லாம் என்னதான் செய்வார்கள்...

என்றுமே ஏட்டுச் சுரைக்காய்கள் கறிக்குதவுவதில்லை...

சரி அதை விடுங்கள்...இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கின்றன...ஒருவர் இறந்து செய்தி ஆன பின் தாம் இவை விழிக்குமா...தனியார் மயத்தால் என்ன என்ன விளைவுகள் என உண்மையிலேயே இதற்குத் தெரியாதா...
Related image
ஒரு பாமரன் என்னுடன் பேருந்தில் கோவையில் இருந்து சேலம் வந்தவர் சொல்கிறார் தனியார் இல்லை எனில் இலஞ்ச ஊழலில் முழுதுமே நாடு திருந்தி விடும் என்கிறார் அறியாப் பிள்ளை. ஆனால் அவர் கருத்து ஒன்றும் அப்படியே பிழையும் இல்லை.

கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும் வரை.


4 comments:

  1. நீங்கள் வாங்கும் நன்கொடைகளுக்கான வரவு செலவு கணக்கு விபரங்கள் வெளிப்படுத்தி இருக்கின்ரீர்களா ?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் யாரென்று தெரியவில்லை. தெரியப்படுத்தவும் இல்லை. தமிழக வரலாறு அவர்களுக்கு: வணக்கம். நீங்கள் கேட்ட கேள்விக்கு நன்றி. என் போன்றோரை எல்லாம் யார் அய்யா மதித்து நன்கொடை கொடுக்கிறார்கள்? எனக்கு எனது வலைப்பூ வழியாக எந்த நன்கொடையுமே வரவு செலவு கணக்குத் தாக்கல் செய்யுமளவு வரவில்லை. அப்படி வந்தால் பைசா கணக்குகளுடன் நான் வரவு செலவை சமர்ப்பிக்கத் தயாராக உள்ளேன்.

      பெயர் சொல்ல விரும்பாத அதாவது பெயர் வெளிப்படுத்த விருப்பப் படாத வெளிப்படுத்தக் கூடாது என்ற கட்டளையுடன் ஒரு திருவில்லிப் புத்தூர்க்கார பெரியவர் கடந்த 2016, 2017 ஆகிய ஆண்டில் ஒரு சிறு தொகையை கொடுத்து எமது மகனது படிப்புச் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று உதவினார் நான் கேட்காமலேயே. அதற்குண்டான வரவு செலவை நான் அப்போதே வலைதளத்தில் வெளியிட்டேன். அவர் அதைப்பற்றி வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த ஆண்டில் அப்படி ஏதும் வரவும் இல்லை . நான் எனது மகனது படிப்புச் செலவை ஏற்கவே ஒரு தனியார் கல்லூரிக்கு 3 ஆண்டுகளாக பணிக்குச் செல்ல ஆரம்பித்து சென்று வருகிறேன். எனவே வலைதளத்தை வலைப்பூவை விட்டு விடக்கூடாது என்றே சில சமயங்களில் எழுதியும் வருகிறேன்.

      மேலும் ஒரு கல்லூரிக் கால நண்பர் ஒருவர் தாம் கூட்டும் கூட்டத்தில் பேச வருமாறு எனை அழைத்து பேசிச் செல்ல உணவு, போக்குவரத்துச் செலவு என இரண்டு மூன்று முறை வாய்ப்பளித்தார். அதன் வழியாகவும் அங்கு எனது புத்தகங்கள் விற்பனை வழியாகவும் சில ஆயிரங்கள் ஈட்டி இருப்பேன் அது இந்த வரவு செலவுக் கணக்குடன் சேர்த்து என்றாலும் நான் சொல்லத் தயாராக இருக்கிறேன். அதில் ஒன்றும் ஒளிவு மறைவு இல்லை.

      நான் எனது ஒழுகும் ஓட்டுக் கூரையைக் கூட சரி செய்ய முடியாத நிலையிலேயே வாழ்க்கைத்துணையிடம் நிதம் பாட்டு வாங்கிக் கொண்டிருக்கும் இரு ஒரு மனிதன். சேவை செய்கிறேன் பேர்வழி என்று உடல்பிணிகளை நிறைய பெற்றிருப்பவன். எனது ஒரு கடமையாக தற்போது 3 ஆம் ஆண்டில் இருக்கும் எனது ஒரே மகனை இன்னும் ஒன்னரை ஆண்டுகள் படிக்க வைத்து முடித்து அவனது தேவையை அவனே பார்த்துக் கொள்ளுமளவு செய்துவிட்டால் போதும் என்ற நிலையில் இருப்பவன்.

      அதெல்லாம் ஒரு உத்வேகத்தில் ஏதோ சாதிக்கப்போகிறோம், சாதித்து விடுவோம் அனைவர்க்கும் பயன்பட்டோம் இன்னும் பயன்படுவோம் என்ற நிலையில் வலைப்பூவில் நண்பர் ஒருவர் தூண்டுதலுடன் பதிவு செய்து போட்டது உண்மையில் வலைதளப் பூவின் வரைவு பற்றியும் நான் தெளிவாகத் தெரிந்தவனில்லை. ஏதோ அவர் ஆரம்பித்துக் கொடுத்தார் எழுதி வருகிறேன்.

      ஒரு முறை ஸ்விஸ் என நினைக்கிறேன் ஒரு பெண் நண்பர் ஸகைப் வந்து வீட்டளவில் எல்லாம் உறவாடிக் கொண்டிருந்தார். அப்போது அகண்ட அலைவரிசை கட்டணத்தைக் கூட கட்ட முடியாதிருந்தபோது அவரிடம் மாதா மாதம் ஏதாவது ஒரு தொகை கட்டணம் கட்ட தர‌ முடியுமா என்று கேட்டேன். அத்தோடு அந்த நட்பு முடிந்தது. அவர் பி.எம்.டபுள்யூ கார் கம்பெனியில் பணிபுரிந்ததாகச் சொல்லி இருந்தார்.


      ஆக இந்த தனியார் கல்லூரி ஊதியமே போதவில்லை என்றுதான் தினம் நிர்வாகத்திடம் முதல்வரிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். அந்த ஊதியத்தில் தனிமனிதரே பிழைக்க முடியாது... எனக்கு இருக்கும் பக்கபலம் எனது உடன்பிறந்த இரு சகோதரிகள் அவர்கள் தாம் எனக்கு இக்கட்டான சமயங்களில் கை கொடுத்து குடும்பம் குழப்பமின்றி நகர்த்த உறுதுணை புரிகிறார்கள்... வாடகை இல்லாமல் குடி இருந்து வருகிறேன் அது எங்கள் குடும்பத்தாரும், பெற்றோரும் நான் பெற உதவிய புண்ணியம்.

      மற்றபடி உங்களுக்கு மேல் விவரம் ஏதும் வேண்டுமென்றாலும் தெரியப்படுத்த எப்போதும் தயாராக இருக்கிறேன். வேறு வழியின்றி காலையில் பேருந்திலும் மாலையில் 3 மாதத்துக்கு ஒரு முறை பெறும் சீசன் அனுமதிச் சீட்டிலும் தொடர்வண்டியில் பணிக்குச் சென்று வருகிற சாதாரண மனிதன் நான்.

      இவண்
      கவிஞர் சு.தணிகை.

      Delete
  2. துயரமான சம்பவம் தற்கொலை செய்து கொண்டது. தேவையான பதிவு.
    கல்வி மருத்துவதில் தனியார் மயத்தால் இந்தியாவில் அவர்கள் கொள்ளை நடக்கிறது என்பது உண்மை.
    வேலைக்கு மாறி செல்ல சென்று வேலை செய்ய முயன்றவருக்கு நடந்த கொடுமையை
    தனியார் மயத்தால் தான் இப்படி நடந்தது என்று குற்றம் சாட்டுவதை விடுத்து தனியார் மயம் பெருமளவில் உள்ள முன்னேற்றம் அடைந்த ஜனநாயகநாடுகளில் உள்ள வேலை செய்பவர்கள் நலன்களை பாதுகாக்கும் கண்டிப்பான அரசு முறைகளை நாமும் பின்பற்ற வேண்டும்.
    தனியார் நிறுவனமோ அரசு நிறுவனமோ வேலைக்கு சேரும் ஒருவர் அசல் சான்றிதழ்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டியதில்லை. அந்த நிறுவன நிர்வாக அதிகாரிடம் அசல் சான்றிதழ்களை காண்பித்து அவர் அவற்றினை காப்பி பிரதி எடுத்து தங்கள் நிறுவனத்திற்காக வைத்து கொண்டு, அசல் சான்றிதழ்களை வேலைக்கு சேர்ந்த உரியவரிடம் உடனே உடனேயே ஒப்படைத்து விடுவார்கள்.
    புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் தனது 6 மாதத்திற்குள் வேலையை விடுவதாடுவதானால் ஒரு மதம் முன் அறிவித்தல் கொடுக்க வேண்டும்.ஆனால் நிர்வாகமும் வேலைக்கு சேருபவரும் உடன்பட்டால் அதற்கு முன்பே வேலையை விடுவதற்கு அவர்கள் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். நான் இதை பயன்படுத்தி ஒருவாரத்தில் நிறுவனத்தின் சம்மதத்துடன் வேலையை விட்டு அதிக ஊதியத்தை தரும் வேறு வேலையில் சோந்து கொண்டேன்.
    விரிவுரையாளர் பணிக்காக சேர்ந்தவவர் ஒருவருக்கு எனது நாடு செய்த கொடுமைக்காக வருந்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. thanks for your feedback on this post Veganari.vanakkam. please keep contact.

      Delete