Friday, June 15, 2018

காலா உன்னை சிறு புல்லென மதிக்கிறேன் எந்தன் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்: மகாக் கவி பாரதியார்...

https://youtu.be/AWrb6CW6iZU
https://www.youtube.com/watch?v=AWrb6CW6iZU


Nana patekar.jpgKaala Poster.jpg


காலா உன்னை சிறு புல்லென மதிக்கிறேன் எந்தன் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்: மகாக் கவி பாரதியார்...

இப்படி எழுதியவரை தனக்குப் பிரியம் என்று நினைத்துக் கொண்டு வாடிக்கையாக‌ அதற்கு பழம் கரும்பு, தேங்காய் கொடுத்த போதிலும் அந்தக் கோயில் யானை பிடித்து இழுத்துப் போட்டு காலால் மிதிக்க அதுவே காரணமாகி படுத்த படுக்கையாகி மகாக் கவி மரணம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

எனக்கு காலா பற்றி எழுதத் தோன்றவேயில்லை. அதே சமயம் அதை விட்டு விடவும் தோன்றவில்லை.முண்டோகபநிசத்தில் நசிகேதன் யமனை இறப்பின் இரகசியம், யமன் என்பவன் யார் யார் எனக் கேட்டுக் கொண்டே இருப்பதாக கதை சென்று கொண்டே இருக்கும்...

அப்படிப்பட்ட இரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை. சொல்லப்போனால் இதில் ஒன்றுமே இல்லை...பா. இரஞ்சித் பற்றி குறை சொல்லி விட்டால் எனது நண்பர் ஒருவர் வேறு கோவித்துக் கொள்வார்.

கரிகாலன் கட்டிய கல்லணையின் சரித்திரம் உலகறியும்...சர் ஆர்தர் காட்டனே இந்திய நீர்ப்பாசனத்தந்தையே கண்டு வியந்தது....அந்தப் பேரை இவர்கள் அசுத்தப்படுத்தி விட்டார்கள்.

நாயகன் கொஞ்சம்,கரிகாலன் கால் தீக்கிரையான கதையிலிருந்து கொஞ்சம் என எந்த சொந்தக் கதையோட்டமும் இழையோடாமல் எப்போதும் கூட்டம் கூட்டமாக எல்லோரையும் நிற்க வைத்து காட்சிகள்... மராட்டியர்கள் தேசத்தில் மும்பை தாராவியில் தமிழர்கள் தலைவனாக காலாவும் மராட்டிய மாநில செல்வாக்கு படைத்தவராக ஹரிதாதாவும் மோதுவதான கதை. உண்மையில் வில்லனான நானே படேகருக்கு கதாநாயகனுக்குரிய எல்லா தகுதிகளும் இருப்பதாக மஹாராஷ்ட்ரா மற்றும் பீஹார் மக்கள் தமரது வறுமையை தீர்க்கும் வள்ளலாக இவரை கருதுவதற்கான அடிப்படை செயல்பாட்டிற்கான தர்ம காரியங்களை இவர் நிறைய செய்திருக்கிறார் ஏன் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையைக் கூட அப்படியே தர்மம் செய்துவிட்டதாகவும் இவர் பால் மிக்க அபிமானத்துடன் இருக்கிறார்கள் என்பதும் செய்திகள்.

நானா படேகர் படத்தில் வந்த பிறகுதான் கொஞ்சமாவது பார்க்க முடிகிறது.
காலா என்கிற கரிகாலன் என்கிற பாத்திர வேடம்  ஏற்ற இந்த ரஜினிகாந்த் கையை அசைத்தாலே போதும் எல்லாம் தூர தள்ளி விழுகிறார்கள்...

அவர் பார்த்தாலே எல்லாம் பறந்து விட வேண்டும் என எதிர்பார்க்கும் இரசிகர் கூட்டம்...உண்மையிலேயே இவர் நடிக்க வேண்டியதே இல்லை, வந்து நின்றாலே போதும் என படத்தை ஓட்டி வசூல் எடுக்கவும் நினைக்கிறார்கள், வசூல் எடுத்து விட்டார்கள் என்றும் கேள்வி.

பேசாமல் இவர் ஆறிலிருந்து அறுபது வரை போன்ற கதையம்சம் உள்ள படங்களை இப்போது நினைவில் கொண்டு செயல்படுவது சிறப்பு. மகிழ்ச்சி.
பா.இரஞ்சித், தனுஷ், ரஜினிகாந்த் அனைவரது முயற்சியுமே பாராட்டும்படி இல்லை....

இவரைக் காப்பாற்றுவதில் உயிரிழப்பதாக வரும் மகனாக நடித்திருக்கும் நபர் மிக நன்றாக செய்திருக்கிறார். நல்ல பாடி பில்டர். அவருக்கு வாய்ப்புகள் இனி அதிகம் வரும்.

சமுத்திரக்கனி வீணடிக்கப்பட்டிருக்கிறார். இது போன்ற குடிகார பாத்திரங்கள் அவரின் எதிர்கால வளர்ச்சிக்குத் தடையே...

ஈஸ்வரி ராவ்,ஹுமா குரேசி நன்றாக நடித்திருக்கின்றனர் உதவாத பெரிய பட்ஜெட் படத்தில்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment