Tuesday, May 8, 2018

ஒர் பயணத்தில்: கவிஞர் தணிகை

ஒர் பயணத்தில்: கவிஞர் தணிகை

Image result for lot of obesity travellers in a bus of Tamil nadu

அண்மைக் காலத்தில் பேருந்து பயணத்தை அதிகம் மேற்கொள்ள வேண்டிய நிலை. எங்கும் பரவலாக பார்ப்பது ...உடல் உழைப்பு செய்வோர் அதிகம் அல்ல...( மெல்லிய தேகமோ உடலை ஒட்டிய வயிறோ அல்ல...) எனவே பெரும் உடல் வாகுடன் இருக்கிறார்கள்.பெரிய பெரிய உடம்பு, தேவையற்ற வயிறு, தொந்தியும் தொப்பையுமாக...ஆங்கிலத்தில் ஒபிசிட்டி என்பார்களே அதுதான்...

ஒரு 9 ஆம் வகுப்பு மாணவர் வந்தார் அவரின் உடல் பளு மிக அதிகம், முன்னால் வந்திருந்த வயிறு நின்று கொண்டிருந்த என்மேல் உரசிக் கொண்டே வந்தது..

அடுத்து இடம் கிடைத்தவுடன் ஒரு கல்லூரி மாணவர் அருகே வந்து அமர்ந்தார். அவரும் தொந்தியும் தொப்பையுமாகவே இருந்தார்.


பேருந்தில் அமர்ந்திருந்த , வழியில் நின்று கொண்டிருந்த பெரும்பாலான மனிதர்கள் பெரிய உருவமாக சதைப் பிடிப்புடன் குண்டு குண்டாகவே இருந்தனர் ஒருவர்க்கொருவர் விலகி வழி விடவே முடியாதபடி அவ்வளவு மலை போல‌

 ஒரு மூவர் இருக்கையில் ஒரு பெரும் உடல் தேகமுள்ள பெண் காலை வெளியே வைத்து அமர முடியாமல் அமர்ந்தபடி அதில் வேறு அவ்வளவு கூட்டத்தில் கருமமே கண்ணாயிருக்கிறாராம், மல்லிகைப்பூவைக் கட்டிக் கொண்டே இருந்தார்...

மேச்சேரி வந்ததும் பின் இருக்கை காலியானதும் எழுந்து பின்னால் அமர்ந்து கொண்டார். 

இது போலவே அதிகம் காட்சிகளை ஒவ்வொரு பேருந்து பயணத்திலும் சகஜமாக காண்கிறேன்... எங்கெங்கும் எல்லா ஊர்களிலும் பரவலாக காணமுடிகிறது.

 காலம் மாறிவிட்டது. திடகாத்திரமான நல்ல உயரம் உருவி விட்ட உடம்பு, ஒட்டிய வயிறு ஆகியவற்றை பெரும்பாலும் காண்பதற்கு மாறாக இது போன்ற காட்சிகளே அதிகம் காணப்படுகிறது..
காரணம்...
1. உணவு முறை சரியில்லை
2. உடல் உழைப்பு போதுமான அளவு இல்லை
3. எல்லாமே தொலைக்காட்சி முன் அமர்ந்து நேரம் அதிகம் செலவளிப்பது.
4. மேலும் செல்பேசி அமர்ந்து கொண்டே இளைஞர், சிறுவர் என்ற வித்தியாசமின்றி நேரம் கடந்து பார்த்தபடியே உபயோகித்தபடியே இருப்பது..
5. எங்கும் நடந்து போகும் வழக்கமே இல்லாமல் போனது
6. எந்த விதத்திலும் உடற்பயிற்சி உடலை சரிசெய்யும் என்ற நினைவும் நம்பிக்கையும் இல்லாமல் வாழ்ந்து மடிவது...

இதில் வேறு வடக்கத்தி மனிதர்கள் நிறைய வந்து போகிறார்கள்.இங்கிதமே இல்லாமல் ஒருவர் போகிறார்கள் வருகிறார்கள் என்றா உணர்வே இல்லாமல் மரமே போல திரிந்து கொண்டே...


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: