Saturday, May 5, 2018

கார்ல் மார்க்ஸ்: இரு நூறு ஆண்டுகள்...கவிஞர் தணிகை


கார்ல் மார்க்ஸ்: இரு நூறு ஆண்டுகள்...கவிஞர் தணிகை
Image result for karl marx 200


இரு நூறு ஆண்டுகளுக்கும் முன்பே பிறந்து, இறந்து 135 ஆண்டுகள் ஆனபோதும் இந்த மனிதர் நம்முடன் இன்னும் இருப்பது போன்ற உணர்வுக்கு என்ன காரணம்?

1818 மே 5ல் மார்க்ஸ் பிறந்து 1883 மார்ச் 14ல் வாழ்வு முடிந்ததாக காலம் சொல்கிறது. சற்றேறக் குறைய 65 ஆண்டுகள். படைவீர்ர் போர் செய்வதன்றி வேறு அலுவல் எதிலும் ஈடுபட மாட்டார்..என்பது போல எழுதுவது மனித குலத்தை எழுச்சி ஊட்டுவது தவிர வேறு எதிலும் ஈடுபடாத மாமனிதம்...பசி, சோறு கிடைக்காதபோதும் கொள்கை மாறாத ஒரு மாபெரும் தத்துவத்தை உலகிற்கு அளித்து ஆயிரம் ஆண்டுகளின் சிறந்த மனிதராக உயர்ந்து நின்றவர்.ஜெர்மனியில் பிறந்து இலண்டனில் முடிந்து போன ஒரு வாழ்வு.

வறுமை என்றால் அப்படி ஒரு வறுமை தமது 7 குழந்தைகளில் 4 இளைமக் காலத்திலேயே மரணமடைந்தபோதும், தமது 25 வயதில் 29 வயது காதலியை மணமுடித்து குடும்பத்திற்கு வறுமையைத் தந்து உலகுக்கு நல்வாழ்வை ஏந்தி வர வேண்டும் என நினைத்த ஒரு தீர்க்க தரிசி....பால் கூட தாய்ப்பால் கூட தமது குழந்தைக்கு மாரில் சுரக்க சத்தான உணவை மனைவிக்கு ஜென்னிக்கு வாங்கித்தர முடியாமல் குழந்தை மாரை சூப்ப ரத்தம் பாலுக்கு பதிலாக சுரந்ததாக சொல்லும் நிலை... எப்படி இருந்தபோதும் உலகுக்கு இந்த மனித குலத்துக்கு மாற்றம் ஏற்பட ஒரு தத்துவம் அழியாத நெறியில் தந்து சென்றிருக்கிறார்.

அவாது எழுத்துகளைப் படித்தே நிறைய நாடுகளில் அவர் வழியில் இளம்படைகள் நாட்டை கொடுங்கோலாட்சியில் இருந்து அடிமைகளாய்க் கிடந்த மக்களை விடுவித்தன பொருளாதாரத் தீர்வையும் வழங்கின.

நான் அவரது எழுத்தை மூலதனம் என்று மொழிபெயர்க்கப்பட்ட வடிவத்திலும் ஆங்கிலத்தில் டாஸ்கேப்பிட்டல் என்ற நூல் வழியே படித்தேன்.

அவரை விட காந்தி அதிகம் அதாவது காந்தி 60,000 பக்கங்கள் எழுதி இருந்த போதிலும் இந்தியா என்ற ஒரு நாட்டில் மட்டுமே ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுபட இந்தியா விடுதலை அடைய காந்தியம் உதவி இருக்கிறது என்பது உண்மை எனிலும் பொருளாதார வழிகளுக்கு அவர் சொன்ன வழிகளை முறைகளை எவரும் கடைபிடிக்காததால் இந்தியாவின் நேரு ஆரம்பித்து வைத்த கலப்பு பொருளாதார முறை முதலாளித்துவ ஆட்சி முறைக்கு சென்றுவிட்டதை மாற்ற முடியவில்லை. மக்களாட்சி கட்சிகளாக, சாதிகளாக, மதங்களாக, வாக்கு வங்கிகளாக இலஞ்சம் ஊழல் குயுக்தி , சுய நல முறைகளால் தூர்ந்து கிடக்கிறது...

ஆனால் சோசலிச அல்லது கம்யூனிச நாடுகளைக் கடைப்பிடிக்கும் நாடுகளில் மனிதர்களின் குறைந்த பட்ச அடிப்படைத் தேவைகளாவது பூர்த்தி செய்யப்பட்டு கல்வி மருத்துவம், உணவு, உடை,இருப்பிடத்துக்கான தேவைகள் வாழ்வாதரங்களாக கிடைத்து வருகின்றன...

இந்த முறைகள் வழி லெனின் சாதித்த சோசலிஸ்ட் ரிபப்ளிக்  சோவியத் நாடு பல தலைமுறைகள் அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளித்துவ நாட்டுக்கு  சரி சமமாக தலை எடுத்து நின்று இப்போதும் ரசியாவில் இந்த ஆட்சி முறை விளங்கிவருகிறது என்னதான் லெனின் சிலை அகற்றப்பட்டாலும் அவரது நினவை அவரது ஆட்சி அடிப்படையை எவராலும் அகற்ற முடியாது.

சீனாவில்  இன்னும் செங்கொடி ஆட்சிதான் , கியூபாவில் இதன் ஆட்சிதான், கொரியா வியட்நாம் இப்படிப்பட்ட நாடுகளிலும்
லாவோஸ்,  போன்ற நாடுகளில் இதன் வீச்சு தான் இன்னும் விரவிக் கிடக்கிறது.
Image result for karl marx 200காந்திய ராமராஜ்ஜியக் கனவுகள், சோசலிஸ்ட் வளர்ந்து கம்யூனிஸ்ட் அல்லது பொதுவுடமை ஆட்சி முறைக்கு மாறி ஸ்டேட்லஸ் கவர்ன்மென்ட் ஆட்சி முறையில் இல்லாத ஆட்சி என்ற நிலை எல்லாமே கீழ் நிலையில் பொருளாதாரத்தில் உள்ள அடித்தட்டு மக்களை வாழவைக்கும் இலக்கு கொண்டதுதான். ஆனால் செய்முறையில் செயல் முறைகளில் வெகுவான வேறுபாடு உடையன.
 கார்ல் மார்க்ஸ் கூட எடுத்தவுடன் எல்லா முதலாளிமாரையும் வெட்டித்தள்ளி சுட்டுத் தள்ளி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கொண்டுவர வேண்டும் என்று சொன்னதாகத் தெரியவில்லை மாறாக நீ எந்த ஆய்தம் ஏந்த வேண்டுமென்பதை உன் எதிரிதான் தீர்மானிக்கிறான் என்கிறார்.

எனவே முதலாளிகள் கோடிக்கணக்கான கோடிகளில் ஆட்சியை விலைக்கு வாங்கி விட்டு, மருத்துவ முகாம் செய்கிறோம், படிக்க வைக்கிறோம் என கண்ணா மூச்சி செய்து ஏமாற்றிக் கொண்டிருக்க, நீரை விலை கொடுத்த வாங்க விலைவாசி பேருந்து கட்டணத்தை முடிவு செய்ய..
இங்கு எல்லாமே தனியார் மயம், தாரளமயம், உலகமயம்...எனவே இந்தியாவில் மார்க்ஸ் கொள்கை இன்னும் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரவிடாமல் ஏகப்பட்ட தடைகள்...


வேலை இல்லாத் திண்டாட்டம் பற்றியும், கல்வி தனியார் கைகளில் திண்டாடுவது பற்றியும் சொல்லவே வேண்டாம், அதிலும் இப்போது இருக்கும் நடக்கும் மதவாத ஆட்சி தேர்வு எழுதவும் மாணவர்களை ராஜஸ்தானுக்கும் கேரளாவுக்கும் இழுத்தடிக்கிறது...கேட்பார் இல்லை

கேட்கவும் நாதி இல்லை. ஐ.பி.எல் இடம் மாறுதல் நடந்தது. ஆனால் ஐ.பி.எல் ஒவ்வொரு வீடுகளிலும் இளைஞர்கள் வழி வந்து கொண்டுதான் இருக்கிறது. எவருமே அதன் நச்சுத்தனம் வியாபார உத்திகளை உணர்வதாகக் காணோம்.

வங்கிகள் ஏழைகளின் பணத்தைப் பிடுங்கி பணக்கார முதலைகளுக்கு வாய்க்கரிசி வாங்கிக் கொண்டு வாராக் கடனாக வாரி வழங்கி விடுகின்றன.

முதலில் நீரை, நிலத்தை, கட்டடங்களை, ஆலைகளை, தொழிற்சாலைகளை, கல்வி நிலையங்களை, அறக்கட்டளைகளை கோவில்களை மசூதிகளை, தேவாலயங்களை எல்லாம் பொதுவுடமையாக்கி அரசுடைமை செய்து நதி நீரை இணைத்து மக்களுக்கு கல்வி, மருத்துவம், இருப்பிடம், உடை உணவுக்கு உத்தரவாதம் Image result for karl marx 200செய்யும் அரசு வரவேண்டிய நிலை வேண்டும்.
காலம் எல்லா மாறுதலையும் உள்ளடக்கி இருக்கிறது. இந்தியாவிலும் கூட உலகெங்கிலும் இது போன்ற நல்ல மாறுதல் வரவேண்டும், அல்லதை அப்புறப்படுத்தி நல்லதை ஏற்படுத்தி மனித குலத்தை நிறைவாக வாழ வைக்கும் பாகுபாடற்ற ஆட்சி முறை வரவேண்டும் என்பதே நமது அவா.
அதற்கு உரிய மார்க்கமே இந்த கார்ல் மார்க்ஸ் சொன்னது.. . காந்தியத்தை கூட இவர்கள் பின் தொடர் வெகு காலம் ஆகும். ஆனால் கார்ல் மார்க்ஸ் லெனின் கண்ட வழியை மிக விரைவாகவும் எளிதாகவும் கொண்டு வர முடியும்தான். ஆனால் அதற்கும் சுயநலமற்ற தலைமை வேண்டும்.. நல்ல கல்வி அறிவும் புரிந்து செயல்படும் கல்வி தெளிவான சிந்தனை எல்லாம் வேண்டுமே... அதை நோக்கி இயற்கை இந்த உலகை கொண்டு செல்லட்டும்

மதம் அபின் மாதிரி, ஓப்பியம் மாதிரி என்பார் மார்க்ஸ் அதை முழுதாகச் சொல்லப் போனால் அவை போதை வஸ்து என்பதற்காக மட்டுமல்ல மனிதம் படும் வேதனையை அப்படிப்பட்ட ஒரு மனலயிப்பிலாவது இடைக்காலத்தில் கொண்டு செல்லட்டுமே என மார்க்ஸ் சொல்லி இருப்பதாக  ஒரு நண்பர் குறிப்பிட்டிருக்கிறார்...ஆனால் இவை ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிற கருத்துகள்...ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது.

பெரியார் சொல்லும் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்ற கூற்றை அவரின் மூடத்தனமின்றி காசு செலவின்றி யாரும் எந்தக் கடவுளையும் வணங்கலாம் என்று சொல்வது எப்படி ஒன்றுக்கு ஒன்று எப்படி முரணாகிறதோ அப்படி...


Image result for karl marx 200


பின்னால் வந்த காந்தியம் உயர்ந்த மார்க்கம் சொல்லியது நிறைய பேருக்கு அது விளங்குவதல்ல, சுலபமாக நடைமுறையில் கடைப்பிடிக்க முடிவதுமல்ல... மார்க்ஸியம் அறிவார்ந்த ஒரு உன்னதமான குழு நாட்டை நல்ல முறையில் கொண்டு செல்ல முடியும் என நிரூபித்த உண்மைகள் பலப் பல. அவை இப்போது நடக்கும் ஆட்சி முறைக்கு மாற்றாக வர வேண்டிய  ஒன்றுதான் அதில் ஏதும் ஊறு இல்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.No comments:

Post a Comment