Wednesday, January 17, 2018

வாட்ஸ் அப் குப்பையில் சில நெல்மணிகள்: கவிஞர் தணிகை

வாட்ஸ் அப் குப்பையில் சில நெல்மணிகள்: கவிஞர் தணிகை

Image result for some good in a lot of wastage of whats app


வாட்ஸ் அப்பை நான் பயன்படுத்த ஆரம்பித்து பல மாதங்கள் இருக்கலாம். இதெல்லாம் காலத்தின் உபயம். ஒரு காலத்தில் பிறர் கேட்டுக் கொண்ட போதெல்லாம் என்னிடத்தில் அந்த உபயோகம் இல்லை எனச் சொல்லியதால் நான் அரிய தொடர்பு என்று நினைத்ததெல்லாம் கை நழுவிப் போயிற்று.

அதன் பிறகு இப்போது பார்த்தால் அதில் வருபவை யாவுமே பெரும்பாலும் வாரி வெளித் தள்ளிக் கொட்ட வேண்டிய குப்பையாகவே இருக்கிறது.அதை டெலிட் செய்வதே பெரிய வேலையாக தலைவலி கொடுக்கும் வேலையாகிவிட்டது.

திரும்பத் திரும்ப செய்திகள் ஏற்கெனவே படித்ததே திரும்பி வந்து கொண்டிருக்கின்றன.

சிலர் மட்டுமே அதை சரியாக பயன்படுத்துகிறார்கள் என்ற எண்ணம் உறுதிப்பட்டு விட்டது.

உண்மைதான் சில சிறு சிறு விஷயங்கள் கூட நமது கவனத்தில் பதியாமல் தெரியாமல் இருந்தவை எல்லாம் தெரிந்தன என்பது உண்மைதான். ஆனால் அவை சிலவற்றுக்காக நாம் செலவளிக்கும் நேரம் தேவையில்லா விரயம்

எலி மிச்சம் வைக்கும் பழம் தான் எலுமிச்சை , எலுமிச்சையை எலி தொடுவதே இல்லை போன்ற சிறு சிறு செய்திகளும்,

சிலர் வேலைவாய்ப்பு பற்றி பதிவு கொடுத்து பங்கிடும் செய்திகளும்,

சிலர் தரும் மருத்துவக் குறிப்புகளும் பயனாகின்றன  என்பதெல்லாம் உண்மைதான்
Image result for some good in a lot of wastage of whats app


ஆனால் குவிந்து கிடக்கும் குப்பையை கோழி சென்று கலைத்து அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் ஒரு சில தானியமணிகளை பொறுக்கி எடுப்பது போல்தாம் இருக்கிறது இந்த வாட்ஸ் அப் செய்திகள் யாவும் ....எனவே

ஒரு காலத்தில் இது வேண்டும், இதில்தாம் அரசு சார்ந்த செய்திகள் எல்லாம் முதலில் வருகின்றன என நாமும் பயன்படுத்த வேண்டும், நமக்கும் இது வேண்டும் என இருந்த நான் இப்போது நிரம்பிக் கிடக்கும் ஆண்ட்ராய்ட் செட்டை செயல்பட விடாமல் தடுத்து தேங்கிக் கிடக்கும் இந்த குப்பை போன்ற செய்திக் குவியல் யாவற்றையும் நீக்குவதே சலிப்பூட்டும் வேலையாக நினப்பதால் இதில் இருந்து வெளியேறி விடலாம் என எண்ணமிட்டு வருகிறேன்.

ஆனாலும் புகைப்படம் எடுத்து அனுப்புவது, அலுவலக முறைகளில் பயன்படுவது, தொடர்பு வழி சாதனமாக பயன்படுவது, தொலை தூரத்தில் இருக்கும் தொடர்புடைய நபர்களுக்கு உடனுக்குடன் செய்தி பரிமாற்றம் செய்து கொள்ள, புகைப்படம் பரிமாறிக் கொள்ள உதவுவது ...இப்படியாக இதன் பயன்பாடு அள்ளவும் முடியாமல் தள்ளவும் முடியாமல் பிடித்துக் கொண்டு விட்டது....உதறி விட வழியின்றி...

எதற்காக இது வேண்டும் இது வேண்டும் என மனம் அடம்பிடித்தபடி கிடந்ததோ அது கிடைக்காமல் இது மட்டும் காலம் தாழ்ந்து வந்து என்னுள் அப்பிக் கொண்டது...

Related image


ஏங்கியவை
எட்டிய போதும்

எட்ட மறுப்பதுவே

திருப்தி...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


       

2 comments: