சர்வதேச விண்வெளி நிலையம் கண்டேன் பெரு மகிழ்வடைந்தேன்: கவிஞர் தணிகை
ஏற்கெனவே சில முறை கண்ட நினைவுண்டு. இருப்பினும் எப்போதும் அறிவியல் பால் ஆர்வம் உண்டு.
வான் வெளியை அதன் தகவல்களை அறிவதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் உண்டு. அன்பு நண்பர்கள் பகிர்ந்த செய்தியை வைத்து நேற்று மாலை 07.07 மணிக்கு முயற்சி செய்தேன். என்னால் சர்வ தேச விண்வெளி நிலையத்தின் பயணத்தை காண முடியவில்லை. மேக மூட்டம்.
ஆனால் இன்று இப்போது அதிகாலை 5.00 மணிக்கு வட மேற்கிலிருந்து கீழ் வானில் தென் கிழக்கு நோக்கி மிக நன்றாக வெறுங் கண்களால் பார்க்குமளவு நல்ல வெளிச்சமாகவும் பெரியதாகவும் பயணம் செய்து மறைந்து போகுமளவு சென்றவரை நின்று பார்த்தேன் . கையில் வேறு தொலை நோக்கி ரஷியத் தயாரிப்பு என்னிடம் உண்டு அது மேலும் உதவிட அனுபவித்தேன்.
துணைவியாரையும் அழைத்துக் காண்பித்தேன்.
இனி நாளை 4.14 அதிகாலையிலும் முயல்கிறேன்.
அறிவியல் இயக்கம் அதன் விண் பயணத்தை நோக்கி குறிப்பிட்டுச் சொல்வார்கள். நமது நண்பர்கள் அனுப்பியிருந்த செய்தியில் நேரம் மட்டும் குறித்து இருந்தது. இருப்பினும் மிகத் தெளிவாகவே பார்க்க முடிந்தது
ஒரு நல்ல மகிழத் தக்க அனுபவமாக இருந்தது.
நன்றி தகவல் தந்த அன்பர்களுக்கு
மனித முயற்சி பார்ப்பதற்கே இவ்வளவு சுகம் எனில் முயற்சி செய்து வெல்வார்க்கு எவ்வளவு சுகம், மேலும் அதில் பயணம் செய்வார்க்கு எவ்வளவு பெருமை...மனிதம் வெல்கிற தருணம் பல...ஆனாலும் இயற்கையின் துளியை நாம் உணரவே முடிந்தாலும் மிஞ்ச வழியே இல்லையே....
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
பி.கு: இந்த விண்வெளி மையத்தை மிகப் பழையதானதால் நாசா அழித்து புவியில் விழ வைத்து வேறு புதிதாக ஒன்றை செய்து காலத்துக்கேற்ப தகவமைத்து புதிதாக அனுப்பப் போவதாகவும் ஒரு செய்தியை படித்த நினைவு உங்கள் தகவலுக்காக பகிர்ந்துள்ளேன்.
No comments:
Post a Comment