கோடையின் முதல் மழை: கவிஞர் தணிகை
எதற்கு இந்த சிறு பதிவு? இயற்கை ஏமாற்றுவதில்லை என்ற நிறைவுக்காக.நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யும் மழை என்பார். எனவே பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் எண்ணத் தீர்மானம்.
காத்தின் கூத்து, இரண்டு நாட்கள் ஊழித் தாண்டவம் , சில துளிகள் தூறலிட்டு சென்று மறைந்தது. அங்கே மழை இங்கே மழை காவேரிப் பட்டணத்தில் மழை என்றார்கள்.
வெறுப்பாகவும் விரக்தியாகவுமிருந்தது.
நேற்று நள்ளிரவில் நல்ல மழை. ஒரு உழவு அல்லது ஒரு வள்ளம், அல்லதுஒரு மரைக்கால் என்பார்களே அது... எங்கள் உரல் கல் முழுதும் நிரம்பி இருந்தது. வள்ளம் என்பது நாலு படி என்பதாகும்.
ஆனால் இன்னும் இது போல் இரண்டு மூன்று மழையாவது தேவை.
அக்னி நட்சத்திரத்தின் ஆரம்பத்தில் இப்படி நிகழ்ந்ததும், மேலாக
எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழா போடும்போது எல்லாம் திருவிழாவுக்குள் எப்படியும் நல்ல மழை பெய்வதை நான் கண்டிருக்கிறேன்.
இந்த மழை சினிமா கிளைமேக்ஸ் போல நெக் அன்ட் நெக்காக கடைசி நேரத்தில் பெய்து பேரைக் காப்பாற்றிக் கொண்டது.
ஏனெனில் இன்று அதிகாலை முதல் காவிரியாற்றில் சக்தி அழைக்க என எப்போதும் போல ஊரின் பெரும் கூட்டம் திரண்டு தீர்த்தம் கொண்டு வரல் வழக்கம் சிறுவர் சிறுமி, பெண்கள் , முதியவர் இப்படி வயது கணக்கின்றி...
அனைவரையும் காப்பாற்றி உள்ளது. இல்லையெனில் அடித்த வெய்யிலுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் கூட நிகழ்ந்திருக்கலாம்.ஏனெனில் அதிகாலையில் உணவு உண்ணாது சுமார் போக வர 5 கிலோமீட்டர்கள் நடந்து சென்று காவிரி நீர் எடுத்து நடந்து வருகிற வழக்கம்.
மீண்டும் நன்றி இயற்கையே!
நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் உயிர்க்கெல்லாம் நன்மை செய்வோம் என்பதை....
No comments:
Post a Comment