Thursday, May 23, 2024

NASA நாசா,ISRO இஸ்ரோ,ESA இஎஸ் ஏ : கவிஞர் தணிகை

 முரண்கள்: கவிஞர் தணிகை



தினமும் நான் ஆர்வமுறுகிறேன் என்ற நுட்பம் எனது கணினிக்கும் இணையத்துக்கும் தெரிந்த  கணக்கு இருப்பதாலோ என்னவோASTRONOMY அஸ்ட்ரானமி... விண்ணியல் பற்றிய செய்திகளை மைக்ரோசாப்ட்வேர் இண்டியா.காம் MSN India கொண்டு வந்து NASA நாசா, ESA,இஎஸ் ஏ   இஸ்ரோ   ..etc வழியாக என்னால் நினைவில் கொள்ள முடியா பிரமிப்பு ஏற்படுமளவு முக்கியமாக James Webb ஜேம்ஸ்வெப் காமிரா, இந்தியாவின் Astrosat அஸ்ட்ராசேட் இப்படி கொடுத்துக் கொண்டு இருக்கின்றதை என்னால் அதை திருப்பி சொல்ல முடியா அளவில்: மில்லியன் ஒளி ஆண்டுக்கும் தொலைவில் என்ன நடக்கிறது,கருந்துளைகள் இடித்து சேர்ந்தது பற்றி, வியாழன் கோளை விட இரு மடங்கு அதிகமாக நூலும் பஞ்சு பொதியுமான மென்மையுடன் இருக்கும் கிரகம் பற்றி, 1240 ஒளி ஆண்டுக்கும் பின் உள்ள விந்தைகள் இப்படி பலப் பல...நாசா சந்திரனில் ரோபோக்களை வைத்து ரெயில்வே பாதை அமைக்கப் போவது பற்றி எல்லாம்...


நண்பர்கள் பிரசன்ன வெங்கடேசனின் பகிர்வுக்கு "அணையா விளக்கு" என்பதற்கு உணவகம் என்றிருப்பதற்கு மாறாக வடலூரின் "அணையா அடுப்பு" பற்றி சொல்ல அவா! ஆனால் சொல்லவில்லை. பசி தீர்தத்லே ஜீவ காருண்யம் என்ற வள்ளலாரின் தத்துவம் : எம் மதம் எம் இறை என்பார் உயிர்த் திரள் அம்மதம் அவர்க்கருள்வாய் அருட் பெருஞ்சோதி, சாதி மத சமயம் பொய்யென்று ஆதியில் உணர்த்தினாய் அருட் பெருஞ்சோதி...


வசந்த குமாரின் பகிர்தலுக்கு: நாங்களும் எங்கள் குடும்பத்து சகோதர சகோதர் உட்பட அந்த ஜெயேந்திர சரஸ்வதி வருகையின் போது நீங்கள் செய்த மாதிரியே "இராம ஜெயம்" எழுதி சுவாமி உருவம் பதித்த கழுத்தணி பெற்றதாக எல்லாம் நினைவுண்டு. மேலும் பார்த்திபன் அம்மாவை அவர் அழைத்து தாமாகவே பிரசாதம் கொடுத்ததை அவர் பெருமையாக பேசிய நினைவெல்லாம் உண்டு. ஆனால் நண்பர்களே எழுத்தாளர் " அனுராதா இரமணன்" அவர்களை அவர்கள் அனுபவத்தை இவருடன் அவருக்கேற்பட்டிருந்த நிகழ்வை நீங்கள் எல்லாம் அறிந்ததுண்டா? என்றெல்லாம் கேட்க அவா! மேலும் சுந்தர ராமன் கொலை வழக்கு பற்றி எல்லாம் நினைவோட்டம். ஆனால் இதையெல்லாம் கேட்க விழையவில்லை.கிருபானந்த வாரியாரை விட எனக்கு கீரன் சொற்பொழிவே பிடித்தது என்பது பற்றி எல்லாம்...


நான் அவதாரம் நான் உயிரின் தொடர்பில் பிறக்கவில்லை என நம் நாட்டின் தலைவர் பேசுவது பற்றியும், ஒரிஸ்ஸாவில் நான் பணி புரிந்த பகுதி என்பதால் அதுபற்றி அவர் பேசியது பற்றி எல்லாம் எதையுமே நான் இப்போதெல்லாம் சொல்ல முனைவதே இல்லை...


ஏன் எனில் கருத்து கலந்துரையாடல் எல்லாமே இப்போது முரண்களாகி நபர்களை, மனங்களை, எண்ணங்களை அந்நியப்படுத்தி விடுகின்றன.  முரண்கள் இருப்பதே உலகே. ஆண் பெண் முரண், மூன்றாம் பால் முரண், ஒரே இன மணம்  ஆனால் நாம் சேர்ந்தே இயங்க வேண்டும் வாழ வேண்டும். அது இயற்கை நமக்கு கற்றுத் தரும் பாடம்.


வட துருவமும், தென் துருவமும் இணைந்தாற் போல இங்கே ஒரு இயக்கம் நடந்தபடி இருக்கிறது. நான் எனது கோவில் பணி பற்றிக் குறிப்பிடுகிறேன்.

 புவி சுழல்வது விண்ணின் கோள்கள் பயணங்கள், ஏன் இப்போது இரு கருந்துளைகள் இடித்துக் கொண்டது என்பது போன்ற செய்திகள்...மண்டையை உடைத்துப் பதம் பார்க்கும் அளவு ஆலங்கட்டியுடன் மாதம் மும்மாரி பொழியாமல் " மனிதப் பிழைகளால் விழையும் மாமழைப் பொழிவுகள்" தாக்குப் பிடிக்க முடியா வெப்பம், ஏன் எதிர்பார்க்க இயலா அளவில் அன்டார்டிக்காவின் பனி உருகல்கள்... இந்த நினைப்பையெல்லாம் அவ்வப்போது ஜி.கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல கழிக்க வேண்டிய 40 Years தியானப் பயிற்சி...ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறப்போம்...என்றாலும் சில நினைவுகளை அழிக்க முடிவதில்லை தொடர்கிறதே அந்த தொல்லையை சற்றே குறைக்கலாம் என்றே இந்தப் பதிவு. வணக்கமும், நன்றிகளும் என்றும் உரித்தாகட்டும் நண்பர்களே.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Monday, May 13, 2024

சர்வதேச விண்வெளி நிலையம் கண்டேன் பெரு மகிழ்வடைந்தேன்: கவிஞர் தணிகை

 சர்வதேச விண்வெளி நிலையம் கண்டேன் பெரு மகிழ்வடைந்தேன்: கவிஞர் தணிகை



ஏற்கெனவே சில முறை கண்ட நினைவுண்டு. இருப்பினும் எப்போதும் அறிவியல் பால் ஆர்வம் உண்டு.


வான் வெளியை அதன் தகவல்களை அறிவதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் உண்டு. அன்பு நண்பர்கள் பகிர்ந்த செய்தியை வைத்து நேற்று மாலை 07.07 மணிக்கு முயற்சி செய்தேன். என்னால் சர்வ தேச விண்வெளி நிலையத்தின் பயணத்தை காண முடியவில்லை. மேக மூட்டம்.


ஆனால் இன்று இப்போது அதிகாலை 5.00 மணிக்கு வட மேற்கிலிருந்து கீழ் வானில் தென் கிழக்கு நோக்கி மிக நன்றாக வெறுங் கண்களால் பார்க்குமளவு நல்ல வெளிச்சமாகவும் பெரியதாகவும் பயணம் செய்து மறைந்து போகுமளவு சென்றவரை நின்று பார்த்தேன் . கையில் வேறு தொலை நோக்கி ரஷியத் தயாரிப்பு என்னிடம் உண்டு அது மேலும் உதவிட அனுபவித்தேன். 


துணைவியாரையும் அழைத்துக் காண்பித்தேன்.


இனி நாளை 4.14 அதிகாலையிலும் முயல்கிறேன்.


அறிவியல் இயக்கம் அதன் விண் பயணத்தை நோக்கி குறிப்பிட்டுச் சொல்வார்கள். நமது நண்பர்கள் அனுப்பியிருந்த செய்தியில் நேரம் மட்டும் குறித்து இருந்தது. இருப்பினும் மிகத் தெளிவாகவே பார்க்க முடிந்தது

ஒரு நல்ல மகிழத் தக்க அனுபவமாக இருந்தது.


நன்றி தகவல் தந்த அன்பர்களுக்கு

மனித முயற்சி  பார்ப்பதற்கே இவ்வளவு சுகம் எனில் முயற்சி செய்து வெல்வார்க்கு எவ்வளவு சுகம், மேலும் அதில் பயணம் செய்வார்க்கு எவ்வளவு பெருமை...மனிதம் வெல்கிற தருணம் பல...ஆனாலும் இயற்கையின் துளியை நாம் உணரவே முடிந்தாலும் மிஞ்ச வழியே இல்லையே....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

பி.கு: இந்த விண்வெளி மையத்தை  மிகப் பழையதானதால் நாசா அழித்து புவியில் விழ வைத்து வேறு புதிதாக‌ ஒன்றை செய்து காலத்துக்கேற்ப தகவமைத்து புதிதாக அனுப்பப் போவதாகவும் ஒரு செய்தியை படித்த நினைவு உங்கள் தகவலுக்காக பகிர்ந்துள்ளேன்.

Tuesday, May 7, 2024

கோடையின் முதல் மழை(2024): கவிஞர் தணிகை

 கோடையின் முதல் மழை: கவிஞர் தணிகை



எதற்கு இந்த சிறு பதிவு? இயற்கை ஏமாற்றுவதில்லை என்ற நிறைவுக்காக.நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யும் மழை என்பார். எனவே பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் எண்ணத் தீர்மானம்.


காத்தின் கூத்து, இரண்டு நாட்கள் ஊழித் தாண்டவம் , சில துளிகள் தூறலிட்டு சென்று மறைந்தது. அங்கே மழை இங்கே மழை காவேரிப் பட்டணத்தில் மழை என்றார்கள்.


வெறுப்பாகவும் விரக்தியாகவுமிருந்தது.


நேற்று நள்ளிரவில் நல்ல‌ மழை. ஒரு உழவு அல்லது ஒரு வள்ளம், அல்லதுஒரு மரைக்கால் என்பார்களே அது... எங்கள் உரல் கல் முழுதும் நிரம்பி இருந்தது. வள்ளம் என்பது நாலு படி என்பதாகும்.


ஆனால் இன்னும் இது போல் இரண்டு மூன்று மழையாவது தேவை.


அக்னி நட்சத்திரத்தின் ஆரம்பத்தில் இப்படி நிகழ்ந்ததும், மேலாக‌

எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழா போடும்போது எல்லாம் திருவிழாவுக்குள் எப்படியும் நல்ல மழை பெய்வதை நான் கண்டிருக்கிறேன்.


இந்த மழை சினிமா கிளைமேக்ஸ் போல நெக் அன்ட் நெக்காக கடைசி நேரத்தில் பெய்து பேரைக் காப்பாற்றிக் கொண்டது.


ஏனெனில் இன்று அதிகாலை முதல் காவிரியாற்றில் சக்தி அழைக்க என எப்போதும் போல ஊரின் பெரும் கூட்டம் திரண்டு தீர்த்தம் கொண்டு வரல் வழக்கம் சிறுவர் சிறுமி, பெண்கள் , முதியவர்  இப்படி வயது கணக்கின்றி... 


அனைவரையும் காப்பாற்றி உள்ளது. இல்லையெனில் அடித்த வெய்யிலுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள்  கூட நிகழ்ந்திருக்கலாம்.ஏனெனில் அதிகாலையில் உணவு உண்ணாது சுமார் போக வர 5 கிலோமீட்டர்கள் நடந்து சென்று காவிரி நீர் எடுத்து  நடந்து வருகிற வழக்கம்.  


மீண்டும்  நன்றி இயற்கையே!

நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் உயிர்க்கெல்லாம் நன்மை செய்வோம் என்பதை....


Thursday, May 2, 2024

எல்லாமே எரிவதுதான்: கவிஞர் தணிகை

 எல்லாமே எரிவதுதான்



சுட்டெரிக்கும் வெய்யில்

சுடர் விடும் சூரியன்


ஆடை அணிவிக்கிறார்கள்

நீர் வார்க்கிறார்கள்


அறிவென்பதா? அழிவென்பதா?

இழிவென்பதா?இருளென்பதா?


நன்றியென்பதா?

நன்று என்பதா?


சிலை வணக்கத்தை விட 

இலை வணக்கம் தேவையெனும்போது


பசிக்கும் போதெல்லாம் சோறு

குருவிக்கு

குருவுக்கு.


       மறுபடியும் பூக்கும் வரை

         கவிஞர் தணிகை