Sunday, January 31, 2021
cinema சினிமா cinema:ஷிண்டலர்ஸ் லிஸ்ட்: கவிஞர் தணிகை
Saturday, January 30, 2021
வாஸ்து:" கவிஞர் தணிகை"
Friday, January 29, 2021
ஊழல் : கவிஞர் தணிகை
Thursday, January 28, 2021
இலஞ்சம்: கவிஞர் தணிகை
Wednesday, January 27, 2021
உணவு உண்ணுதல்: கவிஞர் தணிகை
Tuesday, January 26, 2021
நடைப் பயிற்சி உடலுக்கு சிறந்த மருந்து : கவிஞர் தணிகை
Monday, January 25, 2021
பாம்புகள்: கவிஞர் தணிகை
Sunday, January 24, 2021
Cinema சினிமா Cinema: Jallikkattu ஜல்லிக் கட்டு (மலையாளம்)
Saturday, January 23, 2021
தினம் ஒரு தகவல்: கவிஞர் தணிகை
`நம் மூளையில் உள்ள நியூரான்களின் எண்ணிக்கை பால்வெளியில் உள்ள நட்சத்திரங்களைவிட அதிகம்
இந்தக் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
- ஐரீன் ஹெர்னான்டெஸ் வெலாஸ்கோ
- பிபிசி நியூஸ் முண்டோ
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் புரியாத, புதிரான விஷயமாக மூளை இருக்கிறது.
அண்மைக் காலத்தில் பெருமளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறபோதிலும், இன்னும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு, சிக்கலான அமைப்புகளைக் கொண்டதாக, இன்னும் கண்டறிய வேண்டிய ஏராளமான ரகசியங்களைக் கொண்டதாக மூளை இருக்கிறது.
ஆனால், இப்போது நாம் அறிந்துள்ள வரையில், பாகுன்டோ மேனெஸ் போல சிலர் மட்டுமே மூளையைப் பற்றி நிறைய விஷயங்களை அறிந்துள்ளனர். தனது ஆய்வுக்கான ஒரு துறையாக மூளை ஆய்வை அவர் எடுத்துக் கொண்டுள்ளார்.
அர்ஜென்டினாவில் பிறந்த மேனெஸ், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறை முனைவர் என்ற பட்டம் பெற்றுள்ளார். அறிவியல் துறையில் சிறப்புக்குரிய ஆராய்ச்சிக்கு வழங்கப்படுவதாக அந்தப் பட்டம் உள்ளது.
நியூரோ அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள சமீப காலத்து முன்னேற்றங்கள் பற்றி சாமானிய மக்களுக்குத் தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்ட டி.வி. நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றிருப்பதுடன், பல புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.
பட மூலாதாரம்,SANTIAGO SAFERSTEIN
படக்குறிப்பு, இப்போது நாம் அறிந்துள்ள வரையில், பாகுன்டோ மேனெஸ் போல சிலர் மட்டுமே மூளையைப் பற்றி நிறைய விஷயங்களை அறிந்துள்ளனர்
மேட்டியோ நிரோ என்பவருடன் இணைந்து சமீபத்தில் அவர் எழுதிய புத்தகம் ஸ்பானிஷ் மொழியில் வெளியாகியுள்ளது. அது எதிர்காலத்துக்கான மூளை (The Brain of the Future) என பெயரிடப் பட்டுள்ளது.
மூளையில் புதிய தொழில்நுட்பங்களின் தாக்கம், நியூரோ நெறிகள் போன்ற தற்காலத்தைய பிரச்னைகள் பற்றிய தகவல்கள், சமூக பிரச்னைகளில் இடைமுக வசதிகளை அறிவியல் மூலம் எப்படி அளிக்கலாம் என்பது போன்ற விஷயங்கள் அந்தப் புத்தகத்தில் விளக்கப் பட்டுள்ளன.
பெரு நாட்டில் அரெகுவிப்பா சர்வதேச கலைஞர்கள் திருவிழா கடந்த நவம்பர் 8 வரை ஆன்லைனில் நடைபெற்றது. மேனெஸ் அப்போது பிபிசிக்கு பேட்டி அளித்தார். பேட்டியிலிருந்து..
மூளை ஏன் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது?
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, தன்னைப் பற்றி தானே விளக்கம் தரக் கூடிய ஓர் உறுப்பாக இருக்கிறது மூளை
தன்னைப் பற்றி தானே விளக்கம் தரக் கூடிய ஓர் உறுப்பாக இருப்பதால் மூளை இந்த கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. இதைத் தவிர வேறு பல தனித்துவமான அம்சங்களும் மூளைக்கு உள்ளன.
நாம் மூச்சு விடுவதில் இருந்து இந்தக் கட்டுரையைப் படிப்பது வரையில், தத்துவார்த்தமான கேள்விகளைக் கேட்பது வரையில் எல்லாவற்றுக்குமே மூளை தான் காரணமாக உள்ளது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம்.
இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் புரியாத, புதிரான விஷயமாக மூளை இருக்கிறது. பால்வெளியில் உள்ள நட்சத்திரங்களைவிட அதிகமான எண்ணிக்கையில் மூளையில் நியூரான்கள் உள்ளன. (மற்ற செல்கள், தசைகள் அல்லது சுரப்பிகளுக்கான தகவல்களை எடுத்துச் செல்லும் வகையில் நரம்பு மண்டலத்தில் செயல்படக் கூடியவை இந்த நியூரான்கள்)
மூளையைப் பற்றி நமக்கு எந்த அளவுக்குத் தெரியும்?
மனிதகுல வரலாற்றில் முன் எப்போதும் இல்லாததைவிட, கடந்த சில தசாப்தங்களில் மூளையைப் பற்றி நாம் அதிகமான தகவல்களை அறிந்து கொண்டிருக்கிறோம்.
அவற்றில் சில: நினைவு என்பது, பொதுவான கருத்தைப் போல, நம் நினைவுகளைப் பூட்டி வைத்திருக்கும் ஒரு பெட்டி அல்ல; மாறாக நம் நீடித்த நினைவு என்பதாக உள்ளது.
நம் வாழ்நாள் முழுக்க தொடர்ந்து நியூரான்கள் உற்பத்தி ஆகிக் கொண்டே இருக்கின்றன. முதுமைக் காலத்திலும் அது நடைபெறும்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
பரிவு காட்டுதல், வார்த்தைகளில் உள்ள முக்கியமான விஷயங்கள் ஆகியவற்றை நல்ல முறையில் புரிந்து கொள்வது, உணர்வு குறித்த விஷயத்தில் மூளையின் செயல்பாடு மற்றும் உலகில் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பார்த்து, அதன் அம்சங்களைப் புரிந்து கொள்வதில் நரம்பு மண்டலத்தின் செயல்பாடு ஆகியவை பற்றிய புரிதல்கள் ஏற்பட்டுள்ளன.
உளவியல் மற்றும் நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கற்றல் நடைமுறைகளில் நமது அறிவார்ந்த செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
மூளையைப் பற்றி நாம் அறிந்து கொண்டுள்ள விஷயங்கள், தனிநபர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மூளை பற்றி இன்னும் என்ன கண்டறிய வேண்டியுள்ளது, எப்போது அதை நாம் அறிவோம்?
மூளையின் குறிப்பிட்ட செயல்பாடுகள் பற்றி நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் பொதுவான செயல்பாடு குறித்து விளக்கம் தரக்கூடிய எந்தக் கோட்பாடும் இன்னும் உருவாகவில்லை.
மேலும், புதிதாகக் கண்டறியப்படும் விஷயங்கள் புதிய கேள்விகளை எழுப்புகின்றன. மூளையின் புதிர்களுக்கு முற்றிலுமாக நம்மால் எப்போதாவது விடைகளைக் காண முடியுமா என்றும் நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம்.
குறைகளற்ற இயந்திரம் போன்றதா மூளை?
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, வாழ்நாள் முழுக்க நமது மூளையில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
முழுக்க சரியான செயல்பாடு என்பதைப் பற்றி நான் பேசப் போவதில்லை. ஆனால் திறன் மற்றும் சிக்கல் பற்றி பேசப் போகிறேன்.
வாழ்நாள் முழுக்க நமது மூளையில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அது வளைந்து கொடுக்கக் கூடியதாக, சூழலுக்கு ஏற்ப தகவமைப்பு செய்து கொள்ளக் கூடிய அங்கமாக இருக்கிறது.
மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைப்பு செய்து கொள்ளுதல் அல்லது நரம்பு மண்டலத்தை மாற்றிக் கொள்ளக் கூடிய திறன் என குறிப்பிடப்படும் நியூரோ பிளாஸ்டிசிட்டி தன்மை, புதிய தொடர்புகளை உருவாக்கி, சூழலின் மாற்றத்துக்கு ஏற்ப அதந் செயல்பாடுகளை சரி செய்து கொள்வதற்கு ஏற்ப நியூரான்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ள வகை செய்கிறது.
வேறு வகையில் சொல்வதாக இருந்தால், நமது அனுபவங்கள் மூளையில் நிரந்தரமாக மாற்றங்களை செய்து கொண்டே இருக்கிறது. இதுவரை வாழ்ந்த காலத்தில் மனித இனத்தில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சிகள் மூலம் உருவான மூளையின் செயல்பாடுகளில் ஒன்றாக இது உள்ளது.
உங்களின் மிக சமீபத்திய புத்தகத்திற்கு `The Brain of the Future' என தலைப்பிடப் பட்டுள்ளது. நாளைய மூளை எப்படிப்பட்டதாக இருக்கும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES
உருவ அமைப்பின் அடிப்படையில், நூற்றாண்டுகள் ஆனாலும் மூளையின் அமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது.
புதிதாக உருவாகி வரும் தொழில்நுட்பங்களின் மூலம், நமது செயல் திறன்களை விரிவுபடுத்தக் கூடிய மரபணு தொழில்நுட்பம் மூலமாகவும், உயிரி தொழில்நுட்பத்தின் மூலமாகவும் நமது மூளையின் செயல்பாட்டில் தாக்கம் ஏற்படலாம் என்று யோசிப்பதற்கான காரணங்கள் உள்ளன.
இன்றைய சூழலில், செயற்கையான தேர்வு மூலம் மரபணுக்களில் நம்மால் மாற்றம் செய்து, உயிரியல் ரீதியிலான பதிவுகளை மாற்றி அமைக்க முடியும்.
பிளாஸ்டிக்கில் இருந்து தோல் உருவாக்குவது, செயற்கை விழித்திரை அல்லது செயற்கையாக காது கேட்கும் திறனை உருவாக்கும் காக்ளியர் சாதனம் தயாரிப்பு போன்ற செயற்கை திசுக்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இப்போது வந்துவிட்டது.
அடுத்த சில நூற்றாண்டுகளில் மூளையை உருவாக்கக் கூடிய நியூரல் திசுக்களை உருவாக்க அல்லது மறு வளர்ச்சி ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இப்போது தீர்வு காண முடியாத நினைவாற்றல் குறைபாடு போன்ற பிரச்னைகளுக்கு, சிகிச்சை அளிக்கக் கூடிய முக்கியமான மாற்றங்கள் அப்போது ஏற்படக்கூடும்.
புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது நம் மூளையைப் பயன்படுத்துவது நின்று போகும் என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியொரு சூழல் வருமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES
இல்லை. அப்படி வரவே வராது. நமது மூளைக்கு மாற்றாக எந்த சாதனமும் வர முடியாது.
ஒரு மூளை என்பது ஒரு டேட்டா பிராசசரைவிடப் (தகவல் பெட்டகம் மற்றும் ஆய்வு செய்யும் சாதனத்தை) பெரிய விஷயங்களை உள்ளடக்கியது. இன்னொருவருடைய மனதைப் புரிந்து கொள்தல், அவருடைய வலியை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் செயல்படுதல் போன்ற மூளையின் சமூக ரீதியிலான செயல்பாடுகள் பற்றி யோசித்துப் பாருங்கள்.
பரிவு, பிறர் நலனில் அக்கறை காட்டுதல், ஒத்துழைப்புபோன்றவை எந்த இயந்திரத்திலும் இருக்க முடியாது. அவை நம் வாழ்க்கையில் அடிப்படையான விஷயங்கள்.
சமூக அமைப்பாக சேர்ந்து வாழக் கூடியவர்கள் தான் மனிதர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
பல மில்லியன் ஆண்டுகளாக மூளை பரிணாம வளர்ச்சிகளைக் கடந்து வந்துள்ளது. செயற்கைப் புலனறிதல், புதிய தொழில்நுட்பங்கள் அல்லது வேறு ஏதாவது காரணிகளால் இந்தப் பரிணாம வளர்ச்சி மாற்றத்தை பழைய நிலைக்குக் கொண்டு செல்ல முடியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES
பல மில்லியன் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியை கடந்து வந்துள்ளது என்ற காரணத்தால், மூளையின் நிலையில் மாற்றங்களைக் காண்பதற்கு இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும். நமது பரிணாம வளர்ச்சியின் வரலாற்றைப் பார்த்தால், கடந்த 2 லட்சம் ஆண்டுகளில் மனிதர்களின் மூளையின் உருவத் தோற்றத்தில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை.
மூளையின் உருவ அமைப்பு அடுத்த சில நூறாண்டுகளில் பெரிய அளவில் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக யோசிப்பது கடினம்.
மூளையின் பரிணாம வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளவும் முடியாது. ஏனெனில், நினைவில் வைக்கும் தகவல் அல்லது குறிப்பிட்ட கணித செயல்பாடுகளை செய்தல் போன்ற வேலைகளுக்கு மூளையில் தேவைப்படும் செயல் திறன்களைப் போல, வேறு வேலைகளுக்கு இன்னும் நிறைய தேவைகள் இருக்கின்றன.
ஆனால், தொழில்நுட்பத்தின் மீது அளவுக்கு அதிகமாக சார்ந்திருப்பதால் ஏற்படும் அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.ஏனெனில், தொடர்ச்சியான மன அழுத்தம் இருந்தால் நமது ஆரோக்கியம் மற்றும் மூளையின் செயல்திறனில் எதிர்மறை தாக்கம் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும்.
நாம் என்பது நமது மூளையா அல்லது உணர்வுகளா?
பட மூலாதாரம்,GETTY IMAGES
இது மிக நல்ல கேள்வி. இந்த இரண்டும் கலந்தது தான் நாம். ஏனெனில் அவை வெவ்வேறு விஷயங்கள் கிடையாது.
உணர்வுகளுக்கு மூளையில் முக்கிய இடம் உள்ளது. நம் வாழ்வுக்கு அதுதான் மையமாக இருக்கிறது. நமது நினைவுகளில் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனெனில் நம்மிடம் தாக்கம் ஏற்படுத்தும் விஷயங்களை நாம் அதிக தெளிவாக நினைவில் வைத்துக் கொள்கிறோம்.
உதாரணமாக, அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட 2001 செப்டம்பர் 11 ஆம் தேதியை எல்லோரும் நினைவில் வைத்திருக்கிறார்கள். ஆனால், அதற்கு முந்தைய நாள் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பது யாருக்கும் நினைவிருக்காது.
மேலும், நமது முடிவெடுக்கும் தன்மையில், உணர்வுகளின் தாக்கம் இருக்கும்.
சுருக்கமாகச் சொன்னால், முடிவுகள் எடுப்பதில் நமக்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன: ஒன்று தானாக, வேகமாக நடப்பது. அது பரிணாம வளர்ச்சியால் ஏற்பட்டது; மற்றொன்று மெதுவாக எடுக்கும் முடிவு, அறிவார்ந்த வகையில் யோசித்து எடுப்பது.
நம் தினசரி வாழ்க்கையில் ஒரு நொடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்திற்குள் பல முடிவுகளை எடுக்கிறோம். அது தானாக நடைபெறும் வழிமுறைகளின்படி நடப்பது. அதை உணர்வுகள் தான் முடிவு செய்கின்றன.
யதார்த்த வாழ்வில் மிகச் சில முடிவுகளை மெதுவான முறையில் நாம் எடுக்கிறோம். அதைச் சார்ந்த சூழ்நிலையின் சாதக, பாதகங்களை யோசித்து முடிவு எடுக்கிறோம்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நம் மூளையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
பட மூலாதாரம்,GETTY IMAGES
இந்தப் பெருந்தொற்று நமது மன ஆரோக்கியத்தில் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகுந்த மன அழுத்தத்திற்கு நாம் ஆளாகியிருக்கிறோம். நமது தினசரி செயல்பாடுகள் தடைபட்டுவிட்டன. நம் அன்புக்கு உரியவர்களைப் பார்த்து அச்சம் கொண்டு, விலகி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ள
நாம் வழக்கமாக செய்யக் கூடிய செயல்களை இப்போது செய்வதில்லை. நமக்குப் பழக்கம் இல்லாத விஷயங்களை செய்வதற்கு நிறைய முயற்சி தேவைப்படுகிறது.
அதுபோல, இந்தச் சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, சமூக அழுத்தங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது உளவியல பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள மற்றொரு முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது.
நீண்டகாலம் தனிமைப்படுத்தல் நிலையில் இருப்பது, சிகிச்சைக்குப் பிந்தைய மன அழுத்தம், உணர்வுகள் பாதிப்பு, மனச்சோர்வு, தூக்கமின்மை, பதற்றம், எரிச்சல், வெறுப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதனால் தான் இரவில் நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், புகையிலை, மது, போதை மருந்துகளைத் தவிர்த்தல் போன்ற ஆரோக்கியத்துக்கு உகந்த பழக்கங்களைக் கடைபிடிப்பது முக்கியமானதாக இருக்கிறது.
முடிந்த வரையில், குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வது,குறிப்பிட்ட நேரத்தில் எழுவது, படிப்பது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.
நமது சமூகத் தொடர்புகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். நமது இயல்பான மனநிலையை வளர்த்துக் கொள்ள இந்தத் தொடர்புகள் உதவிகரமாக இருக்கும். நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள உதவும். பல இடங்களில், நேரில் சந்திப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால், தொழில்நுட்பங்கள் இருப்பதால், அதைப் பயன்படுத்தி, தொடர்பில் இருக்கலாம்.
சில பின்னடைவுகளை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும்: பல மாதங்களாக பெருந்தொற்று சூழலுக்கு ஆட்பட்டுள்ள நிலையில், பழைய மாதிரியான கவனம் அல்லது ஆற்றலைக் காட்ட வேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது