Sunday, January 22, 2017

ஆஹா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி: கவிஞர் தணிகை

ஆஹா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி: கவிஞர் தணிகை.
Image result for students history in Tamil nadu to jallikattu


எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே? தமிழகத்து மாணவர்களின் பிரளய எழுச்சியில் மத்திய அரசு தள்ளாட, மாநில அரசு தடுமாற ஆஹா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி...

பாரத சமுதாயம் பாரத சமுதாயம் பாரத சமுதாயம் வாழ்கவே...

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

என்றெல்லாம் எழுதிய பாரதி இதை எல்லாம் காண இருந்திருக்க வேண்டுமே,பார்த்திருந்தால் என்ன தான் எழுதியிருப்பானோ?

முதல்வர் ஓ.பி.எஸ், அ.இ.அ.தி.மு.க கட்சி பொதுச் செயலாளர் சசி,பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை எல்லாரும் ஏதோ பேசிக் கொண்டு நல்ல பேர் வாங்க முயற்சிக்கின்றனர்

ஆனால் இவர்களை இந்த ஊடகக்காரர்கள் எல்லாம் இந்த மக்கள் மாணவச் செல்வங்கள் முன் வந்து ஜெவுக்கு என்ன நேர்ந்தது என இப்போது சொல்ல வேண்டும் சொல்வார்களா? சொல்ல முடியுமா?

பட்டுக்கோட்டை எழுதியமைக்கு வாயசைவையும் நடிப்பையும் கொடுத்தவரை முன் வைத்தோம் முதல்வராய் வைத்தோம், வாழையடி வாழையாக நிறைய முரண்கள் தொடர்கின்றன,,,எப்போதுமே சிந்திப்பாரை முன் வைத்தால் நடிப்பாரை விட நன்றாகவே இருந்திருக்கும் ஆட்சி என்பது எனது கணிப்பு. எப்போதுமே கிரியேடிவிட்டி உள்ளாரை, ஆக்கபூர்வமாக செய்வாரை நாட்டுக்கு செய்ய நினைப்பாரை சேவை செய்த பக்குவமுள்ளாரை பதவியில் அமர்த்தி அழகு பார்த்தால் நாட்டுக்கு நல்லன நடக்கும்

இங்கு எல்லாமே மாறிவிட்டது..

அன்னை தெரஸா   செய்தது சேவை, இராதா ராஜனும், பூர்வா ஜோஷிபுராவும், மற்றவர்களும் செய்வது சச்சரவு...விலங்கு பறவை, மற்ற உயிரினங்களுக்கு எல்லாமே செய்ய வேண்டியதுதான்...அதற்காக மனிதர்களை பின்னிலைப் படுத்துவதும் சரியல்லவே

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாடினேன் என்ற இராமலிங்க வள்ளலாரைக் கொண்ட நாடு உலகுக்கே வழிகாட்டும்

விவேகானந்தா சொன்னபடி, நல்ல உடல்வலுவும், நல்ல நம்பிக்கையும், துணிச்சலும், வீரியமும் உள்ள 100 இளைஞர்கள் போதும் என்றார், இங்கு இலட்சக்கணக்கான மாணவ இளம் இரத்தங்கள் ஒன்று சேர்ந்து இலட்சியத்துக்காக போராடி வருகின்றன.... கொட்டும் பனியிலும் வாட்டும் வெயிலிலும் இரவிலும் பகலிலும் நாட்கள் ஓடி மறைய... மறுபடியும் பூக்க...எந்த மக்கள் தலைவரும், எந்த வாக்குகளைப் பெற்று நாடாள வந்த மன்னவன்களும் வந்து பார்க்கவும் பேசவும் இவர்களது கோரிக்கைகளுக்கு முடிவு என்ன என்பது பற்றி சொல்ல வரவேயில்லை...சிலர் பலரை இவர்கள் அதற்காக அனுமதிக்கவும் இல்லை

உண்மையில் சொல்லப் போனால் ஒரு தலைமை இல்லாத இந்த புரட்சிதான் நல்லது கூட. தலமை என்று வந்தாலே தனிமனித குணாம்சங்கள் பட்டுத் தெறிக்கவும், புகழ் மாலைகள் சேரவும், அவரை அரசு மிரட்டிப் பணியவைக்கும் முயற்சியும் சேர்ந்திருக்கும் இப்போது இவை யாவும் தொடாத எட்டி இருக்கும் தொட முடியாத சுடர் இயக்கமாகவே சுடர் விட்டுக் கொண்டிருக்கும் இந்த மாணவ சமுதாயத்திற்கு என்றும் எமது வாழ்த்துகள்.என்றும் எமது வாழ்நாளில் இந்த நாட்களை, இந்த நிகழ்வை மறக்கவே முடியாது...

எமது வாழ்நாளில் ஒரு விடிவு வரவே வராதா இந்த அரசும் அதிகார மையங்களும் மாறாதா, ஒரு சமத்துப் பார்வையும் மலர்களும் மலராதா என்ற ஏக்கம் ஒரு நம்பிக்கை ஊற்றாய் இந்த இளைஞர்களிடம் இருந்து கிளம்பி இருக்கிறது.

டில்லியில் கற்பழிப்புக்கு கூடிய மனிதப் பேரணியைப் பார்த்து எல்லாம், கர்நாடக காவிரி இன உணர்வாளர்களை எல்லாம் பார்த்த போதெல்லாம், உலகின் எந்த நாட்டிலும் ஒரு உணர்வு பூர்வமான போராட்டமும், விழிப்புணர்வு மக்கள் வெள்ளம் அணி சேர்ந்த போதெல்லாம் அது எப்போது இங்கே, ஏன் தமிழ் ஈழ மக்கள் இனப் படுகொலை பற்றி எல்லாம் கூட ஒன்று சேராமலே இருக்கிறோமே என்ற குறையை எல்லாம் இந்த மனிதப் பிரளயம் நீக்கி இருக்கிறது...
Related image


அரசியல் விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களை எளிதில் ஏமாற்ற முடியாது என்பது நிரூபணமாகிக் கொண்டு இருக்கிறது

தமிழர்கள் உலகுக்கே வழி காட்டுவார்கள் என்ற நிதர்சனமான பல அறிஞர்களின் பார்வை இன்று கையருகே வந்து உள்ளது. இனி திட்டமிடல், செயல்வடிவம் எல்லாம் அவசியம்...காந்தி தமிழ் கற்றதும், இரு கையால் எழுதப் பழகியதும், தமது எல்லா மணித்துளிகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தது போலத் தயாராக வேண்டும்...

மோடி காந்தி படத்தை எல்லாவற்றிலிருந்தும் எடுத்தது உதாரணமாக காதி அன்ட் வில்லேஜ் கமிஷன் இன்டஸ்ட்ரியிடமிருந்து எடுத்ததால் இவர் ராட்டை நூற்பது போல போட்டுக் கொண்டதால் நல்ல வியாபாரம் என பாரதிய ஜனதா கட்சியின் ஒரு தலைவர் பேசியுள்ளார்.

இனி காந்தி படத்தை எல்லாம் வைத்துக் கொண்டு இவர்கள் விளம்பரப் படுத்திக் கொள்வது எல்லாம் தவறுதான்...அதை எல்லா இடத்திலிருந்தும் நீக்கி விடுவதும் சரிதான்...மகாத்மாவை தேசப்பிதா என்றார்கள்..மோடியை அந்தக் கட்சிக்காரர்கள் இனி அந்த இடத்துக்கு கொண்டு செல்வார்களோ?

பாரதிய ஜனதாவும், அ.இ.அ.தி.மு.கவும் ஒரே பாணியில் மக்களை மடமைப் படுத்திக் கொண்டு அவர்களை சிந்திக்க விடாமல் மழுங்கடித்து தமது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பெரும் தீய சக்திகள்தான்...

இந்த இளம் கன்றுகள் அதை உணர்ந்து கொண்டதாகவே தெரிகிறது..

அஸ்ஸாமின் பிருகு புக்கான், பிரபல்ல குமார் மஹந்தா ஏனோ எனக்கு காரணமில்லாமலே நினைவுக்கு வருகிறார்கள்...

Related image

பார்ப்போம் அடுத்த முக்கியமான காலக் கட்டத்திற்கு மாணவர் இயக்கம் சென்று கொண்டிருக்க, மாநில மத்திய அரசுகள் என்ன செய்யப் போகின்றன என்பதை வரும் சிக்கலான நாட்களில் நாம் பார்க்கலாம்... கலாம் போன்றோர் இதை எல்லாம் பார்க்க இல்லையே என்ற வருத்தமும் எமக்குண்டு.

மாடுகள் எல்லாம் சேர்ந்து காட்டு ராஜாவான சிங்கத்தை ஓட ஓட விரட்டும் கதை இங்கே நிகழ்கிறது மாட்டுக்காக எல்லாம் சேர்ந்து காட்டு ராஜாக்களை ஓட ஓட விரட்டும் கதைகளும் இங்கே நிகழ வேண்டும்...

Ravi sankar guruji Life of Art ,Jaggi Vasudev  Isha are supporting this movement....think about it...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments:

  1. அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  2. மாடுகள் எல்லாம் சேர்ந்து காட்டு ராஜாவான சிங்கத்தை ஓட ஓட விரட்டும் கதை இங்கே நிகழ்கிறது மாட்டுக்காக எல்லாம் சேர்ந்து காட்டு ராஜாக்களை ஓட ஓட விரட்டும் கதைகளும் இங்கே நிகழ வேண்டும்...

    நிகழும்
    நிகழ்ந்து கொண்டே இருக்கிறது நண்பரே

    ReplyDelete
  3. thanks for your feedback on this post sir. vanakkam.please keep contact

    ReplyDelete