மனித மாண்புகளுக்காக விருதுகள் கொடுக்கப் படுவதில்லை: கவிஞர் தணிகை
வைரமுத்து...ஞானபீடம்,தமிழ்செல்வன்...சாகித்ய அகாடமி, அகிலன்,சின்மயி,ஜெயமோகன்
வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது கொடுக்கப் பட்டதற்கு தமிழ் கூறும் நல்லுலகத்திலிருந்தே விமர்சனங்கள் வந்து விட்டன.சின்மயி ஒரு பக்கம், ஜெயமோகன் ஒரு கோடி பரிசையே அறிவித்து தமது மாறுபட்ட நிலையை வெளிப்படுத்தி இருக்கிறார்.அத்தோடு போய் சேர்ந்து விட்ட அகிலன் கூட அதற்கு தகுதியானவர் அல்ல என பேசப்படுகிறது.ஆட்களை வைத்து காய் நகர்த்தி பெற்று விடுகிறார்கள் என்ற குற்றச் சாட்டு வேறு.
தமிழ்செல்வன் பற்றி எதிர்மறை விமர்சனம் நானறிந்த வரை சாகித்ய அகடமி விருது பற்றி வரவில்லை.
எனக்கு சொல்லத் தோன்றியது என்ன எனில் பெரும்பாலும் எழுத்தாளர்கள், பிரபலமான கவிஞர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் பலஹீனமானவர்களே.குறைபாடு உள்ளவர்களே. மனித மாண்பு என ஆய்ந்தால் ஒன்று அவர்கள் ஏதோ ஒரு போதை அல்லது மதுவுக்கு தம்மை இழந்து போனவர்களாக இருந்து சென்று விடுகிறார்கள்
கண்ணதாசன் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. ஆனால் அவர் எளிமையான எழுத்துகள் காலம் கடந்து நின்று அவர் பேர் சொல்கின்றன. நா.முத்துக் குமார் உட்பட மது வேட்கை கொண்டிருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். வைரமுத்து சின்மயி புகை எப்போதும் தீக் கங்குகளைக் கொண்டதாகவே இருக்கிறது.
அவர்களை எழுத்தாளர்களை கவிஞர்களை காலம் வீழ்த்திய பின்னும் அவர்கள் எழுத்துகள் இருக்கின்றன. எனவே மனித மாண்புகளை வைத்து இது போன்ற விருதுகள் கொடுக்கப் படுவதில்லை அவர்கள் எழுத்துக்களுக்கே என்பது எனது தாழ்மையான கருத்து.
உண்மையில் சொல்லப் போனால் வைரமுத்து ஒரு பள்ளி நிகழ்வில் நான் நேரிடையாகக் கண்டது: அவர் புத்தகம் வாங்க வில்லை என வேறு புத்தகத்தில் கையெழுத்து கேட்ட பள்ளிச் சிறுவனுக்கு போட மாட்டேன் எனச் சொன்னவர்தான் இன்று அவரது விருதை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கும், தமிழ் மண்ணுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சமர்ப்பித்துள்ளார். எல்லாம் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் சென்று விட்டால் வியாபார மயம்தான் உலகெலம் பெட்ரோலாக இருந்தாலும், நூல்களாக இருந்த போதும்...
என்னைப் பற்றி ஒரு உயர் சிந்தனையாளர் சொல்வார், கவிஞர் என்றால் இவர் எல்லாரையும் போன்ற கவிஞர் அல்ல எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவர், தொட்டால் சுடும் நெருப்பு வார்த்தைகள் எரிமலை வெடிப்பு என்றெல்லாம் சொல்வார்
மதுவைக் குடித்து விட்டு மகத்துவமான சமுதாயத்திற்காக மாறுபாட்டிற்காக வாள் வீசுகிறேன் என்பதே வெறும் வாய் வீச்சே...அது யாராக இருந்த போதும்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment