கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்: கவிஞர் தணிகை
செயற்கை முறை கருவூட்டல் மையங்கள் எப்படி நிறைய பெருகி வருகின்றன? என்ற கேள்விக்கு உண்ணும் உணவில் இரசாயன உரங்களின் கலப்பே பெரிதும் சொல்லப் படும் ஒரு காரணம்.அல்லது உணவு முறை போன்றவை சிறிய வயது பெண் பூப்படைதலுக்கு வேண்டுமெனில்( இந்தக் காரணம்) சரியானதாக இருக்கலாம்.
ஆனால் இப்போது பெண்கள் குறிப்பாக தமிழகம் போன்ற மாநிலத்தில் நிறைய படித்து பணிக்கு(ம்) செல்கின்றனர், தகவல் தொழில் நுட்பம், கணினி சார்ந்த பணிகளில் அளவை விட ஊதியம் அதிகம். எனவே அவர்கள் அதை விட அல்லது அந்த அளவிலாவது ஆண்களை மணமுடிக்க எதிர்பார்க்கின்றனர்.
வயது கூடுகிறது. அதிலும் ஒரு பெற்றோர், அல்லது அந்த ஊதியத்தை இழக்க விரும்பாத , அந்த ஊதியம் தேவைப்படும்,அந்த ஊதியத்தை விரும்பும் பெற்றோர், மற்றும் அந்தப் பெண்கள் சாதாரணமாக மணமுடிக்க ஒத்துப் போவதில்லை. எனவே வயது கூடுகிறது. எமது காலத்தில் பெண்களின் ஊதியத்தை மணமானதும் அந்தப் பெண் போகும் புகுந்த வீட்டிற்கே தாரை வார்த்த காலம் எல்லாம் வேறு.
ஒரு ஆய்வில் தெரிய வந்தது என்னவெனில் 1980களில் இருந்து 1990ல் பிறந்த நாளை(க் கூட )வைத்திருக்கும் பெண்டிர்கூட இன்னும் மணமகனைத் தேடும் படலத்தில் காத்திருக்கின்றனர்.எங்கோ போகும் பயணம்?
ஆக பொதுவாக தோராயமாக 25 வயது முதல் 35 வயது வரையில் தாம் பெண்டிருக்கு கருவுறும் வாய்ப்புகள் அதிகம் அதன் பின் பெரும்பாலும் பிள்ளைகளைப் பெறும் வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கும். விதிவிலக்குகள் வேறு.
அதில் வேறு மேற்கத்திய கலாச்சாரம் வேறு திறந்து காட்டப் பட்டதன் விளைவாக எதற்கும் துணிச்சலான காரியங்களில் பெண்கள் ஈடுபட்டு வருவதாலும் இது போன்ற காலப் பிறழ்தல்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
அதற்காக ஆண்கள், மணத்துக்காக காத்திருக்கும் ஆண்களை யோக்கியர்கள் என்ற ஒரே பட்டியலில் அடைக்கும் நோக்கமும் இந்தப் பதிவின் நோக்கமல்ல.
பாராளுமன்ற தொகுதிகள் குறைக்கப் படும் வாய்ப்பு தென்னக மாநிலங்களுக்கு இருப்பதாக சர்ச்சை, இதில் குறைக்கவில்லை, குறைக்கப் படப் போவதில்லை என்பதற்கும் மாறாக வட மாநிலங்களின் தொகுதிகள் அதிகம் செய்தல் என்ற ஒரு போக்கும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. அட வேண்டாங்க அரசியல் பேசினாலே நமது நண்பர்களுக்கு பிடிப்பதில்லை.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment