Thursday, January 19, 2023

நாகாவின் நூலேணி: கவிஞர் தணிகை

 நாகாவின் நூலேணி: கவிஞர் தணிகை



எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே...தாயுமானவர்


 அன்பு கவின் நண்ப நாகா:

 நன்றி கலந்த வணக்கங்கள்


ஆன்மாவிற்கு பால் வேறுபாடோ, நாடோ, இடமோ காலமோ இல்லை என்கிறார் தியானப் பயிற்சியில் விவேகானந்தா.

எழுதுவதை பேசுவதை எல்லாம் புறமாக்கிவிட்டு ஆன்மீக வாதியாக வாழலாம் என முயலும்போது எப்படி என் போன்றோர்க்கும் 90களில் பாம்பு சுற்றிய லிங்கம் படம் போட்ட செய்திக் கையேட்டை அனுப்பி ஈசா மையம் ஏற்படுத்தும் காலத்தில் லிங்க நிர்மாணத்திற்கு நிதி கேட்டுக் கொண்டிருந்த ஜக்கி வாசுதேவ் போன்றோர்  இன்று உலகளாவிய அளவில் பெரும் புகழுடன் மக்கள் கூட்டத்துடன் சென்று கொண்டிருக்கிறார்கள் என்ற விந்தை புரியவே இல்லை பிடிபடவில்லை.  இருக்கட்டும்.


உண்மைதான் மேல் மருவத்தூருக்கு அனைத்து சாதியினரும் தாழ்த்தப்பட்ட பட்டியிலன மக்கள் அதிகம் விரும்பிச் செல்வதும், மாதவிடாய் பற்றிய பயம் எல்லாம் அங்கில்லை என்று நீங்கள் குறிப்பிட்டதும் மிகவும் சரியே. இந்த ஆண்டில் முன் எப்போதும் இல்லா அளவு கூட்டம்...ஏன் அந்தளவு அவர்களுக்கு உள்ளூரில் நெருக்குதல்கள் இருக்கின்றன.


அடியேன் மீச்சிறு மானிடமாகவே இருக்க விழைகிறேன்...

வாஜ்பேயி, நல்லகண்ணு ஏனோ நினைவுக்கு வருகிறார்கள்...

எதெற்கென்றுதான் தெரியவில்லை.


இங்கே சாதிக்கட்டு, மதக் கட்டு, சாமிக் கட்டு,பணக் கட்டு,இனக் கட்டு, கட்சிக் கட்டு என்றானபடியால் நியாயக் கட்டு, தர்மக் கட்டு, நீதிக் கட்டு எல்லாமே தளர்ந்து அறுந்து கிடக்கிற சூழல் எனவே ஜெ.கே என்னும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி உச்சத்தில் சொல்லும் மனிதக் கட்டும், வள்ளுவம் சொல்லும், இராமலிங்கர் சொல்லும் கேள்விகளாகவே போயின...மனிதக் கட்டு ஏற்படவில்லை. மனிதத் தேடலில் காண்பது பஞ்சமே...


எனவே ஆக்ஸ்வாம் சில நாளுக்கு முன் சொன்னபடி இந்தியா போன்ற ஒரு நாட்டிலேயே 1 சதவீத மக்களிடமே 40 சதவீத சொத்து உள்ள செய்தியைக் கூட படிக்க ஆர்வமின்றி இருப்பார் இடையே... கம்யூனிசமும், காந்தியிசமும் சொல்வது மக்கள் நல வாழ்க்கைத் தரத்தின் உயரங்களையே என்ற போதும்...


பேசுவது, எழுதுவது, நடப்பது, தியானிப்பது இப்படி சுருங்கிப் போன வாழ்வில் பேசுவது எழுதுவது என்ற கோதாக் கொட்டாயிலிருந்து கொஞ்சம் விலகிவிட்டதாகவே எனைக் கருதுகிறேன். பின் இரண்டும் அதிகம் வாழ்வுத் தளத்தை ஆக்ரமித்துக் கொண்ட வேளையில்...


புத்தகம் என்றால் கணக்கின்றி படித்து கண் கெட்ட பின்னே: அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை எல்லா நூல்களிலுமே மனோ நிக்ரஹமே வழி என்று சொல்லப் பட்டிருக்கிற படியால்...என்பது ரமணரிடமிருந்து கற்றது. கண்டதைப் படிப்பவன் பண்டிதன் ஆவான்...ஆனான் ஆகிறான் ஆனால் இப்போது யார் படிக்கிறார் என்ற கேள்விகள் எழும் போது சர்வதேச புத்தக கண்காட்சி சென்னையிலும், மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சிகளுமாக புத்தக வழிகாட்டிகள் வாழ்வுக்கு வளம் காட்டிகளாக...


இந்நிலையில் நாகா  என்னும் எனது அன்பு நண்பர் நாகச் சந்திரன் தனது இரண்டாம் படைப்பான "நூலேணி" எனக்கு தந்து நாட்கள் சுமார் 10 ஆன பின்னும் அதைப் படிக்காமல் விடுவது எனக்கு இழுக்கு... ஏன் எனில் புத்தகம் என்றாலே முன் அட்டை முதல் பின் அட்டை வரை படிக்காவிட்டால் அடுத்த வேளை, அடுத்த வேலை என இல்லை என்று கணக்கின்றி படித்து இரண்டு கண்களையும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு...கண்களுக்கு சீரான வேலை மட்டும் கொடுக்க வேண்டும் என்ற நியதியை தளர்த்தி சில நாட்களில் படித்து முடித்தேன்.


எனது ஊர்க்காரர் மேட்டூர் பற்றி அணை பற்றி எழுத வேண்டும் என அவாவுற்றவர்,ENGLAND (இலண்டன்), இந்தோனேசியா,ஸ்விஸ் போன்ற நாடுகள் பயணித்தவர் அடக்கமானவர், நாகரீகமான மனிதர். தனது முதல் புத்தகம் : நூலிலிருந்து, இப்போது நூலேணி...இரண்டுமே அழகிய தயாரிப்பு. எண்ணிப் பார்த்தாலும் இரண்டு எழுத்துப் பிழைகள் மட்டுமே இருந்தன...சரியான உழைப்பு. நூல் வழிச்சாலை என சமூக வலைகளில் தமது படிக்கும் நூல்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார். நல்ல முயற்சி.


தாம் படித்தது, பார்த்தது...நூல்களை, திரப்படங்களைப் பற்றியும் சந்தித்த மனிதர் பற்றியும் பகிர்ந்து கொண்டுள்ளார்


சொல்ல விரும்பியது: இவரது அலை நீளம் பெரும்பாலான இடங்களில் படிக்கும் நம்மோடு ஒத்துப் போகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு துளியாய்: ஷிண்டலர்ஸ் லிஸ்ட் போன்ற திரைப்படத்தை சினிமா பார்க்கும் அன்பர்கள் யாவரும் பார்க்கத் தூண்டி சொல்லி வைப்பது...


காந்திய சத்திய சோதனை போல குவி ஆடியை பள்ளிப் பருவத்தில் திருடிய சிறுவனாக இருந்தமை, வேதனை பட்டது, தாய் தேறுதல்...தொட்டுவிட்டார்...இவர் 


பெர்னாட்ஷா ஆஸ்கார், நோபெல் இரண்டுமே பெற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார், பெர்னாட்சாவின் புவிப் பங்களிப்பு சுமார் 15000 பக்க இலக்கிய எழுத்துகள், மகாத்மா காந்தியின் 20 காந்தி வழி நூல்கள் உட்பட‌ மற்றும் இன்ன பிற பங்களிப்பு சுமார் 100,000 பக்கங்களுக்கும் மேல் இருக்கும் அவற்றை எல்லாம் படித்துய்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டும்... தனது சொந்த நடையில்...


 காந்தியின் பேரும் சில முறை நோபெல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்ட நிலையில் அவருக்கு அது கிடைக்க வில்லை. ஆனால் நோபெல் பெற்ற ஒபாமா போன்றோர் தமது நோபெல் உரையில் அதன் பின் பேட்டிகளில் காந்தியுடன் அமர்ந்து சந்தித்து அளாவளாவி சிற்றுண்டி அருந்த விரும்புகிறேன் எனக் கூறியதை நினைவு கூர்வோம்... சந்திர சேகர் என்னும் இயற்பியல் அறிவியல் அறிஞர் தமது மாணவர் இருவருக்கும் நோபெல் பெற்ற பின் தாம் தாம் பெற்றவர் என்பதையும் நினைவில் கொள்வோம்...


மேலும் அன்பு நண்பர் இராமலிங்க வள்ளலார், மாணிக்க வாசகர், அபிராம பட்டர், விவேகானந்தர், இராமகிருஷ்ணர் போன்ற ஆன்மிக வாதிகளின் எழுத்தையும் நுகர வேண்டும்...


இந்த நூல் நூலேணி பெண்ணியம் பற்றியது. 15 அல்லது 16 வயதிலேயே மலாலா நோபெல் பரிசு பெற்ற சிறுமியின் பெண்கல்வி பற்றி உயரத் தூக்கி பிடிப்பது...வரவேற்கத் தக்கது.ஒரு பெண் படித்தால் ஒரு குடும்பம் படிப்பது...உண்மைதான் பாரதி முதல் நமது ஏர் உழவர் யாவருமே உழுதுழுது விதைத்த பயிர் யாவும் அவைதாம். ஆனாலும் மலாலா சொல்லியபடி இறுதி நாள் அந்த வெந்தணலுக்கு இல்லாமல் அந்த அஞ்ஞானம் எரிந்து கொண்டே இருக்கிறது...


தீயின் அழிவு என்பதற்கு பதிலாக தீயினால் அழிவு அல்லது தீயினால் ஏற்பட்ட அழிவு என்று சொல்லலாமா?


மேழி போற்று கவிதை யாருடையது எனக் குறிப்பிட்டிருக்கலாம்...

 பழந் தமிழ் இலக்கியத்தில் எல்லாம் அகம் புறம் என்றே வாழ்க்கை பிரிக்கப் பட்டிருக்க, இவர் அகம், புறம் , அந்தரங்கம் என மூன்று பகுதிகளாய் சற்று அகத்தை இரண்டாக்கி உள்ளார். அல்லது இவர் கற்ற வழி மூலம் இரண்டாக்கி உள்ளதைக் குறிப்பிடுகிறார்.ஏற்புடையதாகவே இருக்கிறது இக்கால முறைமைகளுக்கேற்ப‌.



உதவிய நண்பரின் பெருந்தன்மையை குறிப்பிட்டமை, சாலையின் HD ஆங்கில ஹெச் டி High ways Department  ஹைவேஸ் டிபார்ட்மென்ட் என்பதற்கு Humanity and Divine  ஹ்யுமனிட்டி அன்ட் டிவைன் Help and Divine   ஹெல்ப் அன்ட் டிவைன் என்றும் கூடஇனியும் சொல்லலாம்.. குட் டச். Good Touching pages.


பங்களா தேஸ், நஸ்ரிமா, இந்து முகமதிய இனக் கலவரங்கள் உயிர் அழிப்புகள்...கர்நாடகா காவிரித் தமிழ் பற்றி கூட நினைவுக்கு வருமளவு தொடல்...


யாம் பெற்ற இன்பம் வையகம் பெறுகவே என தாம் துய்த்ததை பகிர்ந்து தரும் நூலில் இருந்து, நூலேணி,நூல் வழிச் சாலை போன்றவை நன்முயற்சிக்கான விதை தந்த கனிகள்... pages:235 price: 225.  with Attractive Wrapper. Good Design by Jeeva.


இவர் மேலும் இவரது உழைப்பை ஆக்க பூர்வமாக தருவதை எதிர்பார்க்கிறோம்.ஆக்க பூர்வமாக தருவார் என்று நம்புகிறோம்.


மறுபடியும் பூக்கும் வரை

அன்புடன்


கவிஞர் தணிகை

பி.கு:

நம்ம ஊர் அனுராதா ரமணன் பற்றியும் பெண்ணியத்தில் சேர்த்திருக்கலாம் நாகா








No comments:

Post a Comment