Tuesday, November 22, 2022

தமிழக அரசே தமிழக அரசே பேருந்து நடத்துனர்களும் மனிதர்கள்தாம்: கவிஞர் தணிகை

 தமிழக அரசே தமிழக அரசே பேருந்து நடத்துனர்களும் மனிதர்கள்தாம்: கவிஞர் தணிகை



மிகவும் சுருக்கமாக:

வழித் தடம் எண்: 37 மேட்டூரிலிருந்து தாரமங்களம் சென்றேன் 21.11.22  மதியம் சுமார் 3 மணி ஓட்டத்தில். பிரச்சனை ஏதுமில்லை. உடனே தாரமங்களத்தில் இருந்து சுமார் 4 மணிக்கு மேட்டூருக்கு எடுத்து விடுகிறார்கள். எனவே என்னால் சில நிமிடங்களில் திரும்ப முடியவில்லை திரும்பி விடலாம் என்று எண்ணிய போதும்.


அன்று அதற்கு முன்பு வரவேண்டிய மதியம் சுமார்.2.50க்கு வரவேண்டிய இலட்சுமி விலாஸ் என்ற தனியார் வண்டி இல்லாததால் அதன் தொடர்ச்சி பெரிதும் எதிரொலித்தது.


மறுபடியும் சுமார் 5.45 அல்லது 6 மணிக்குள் 32 பேருந்து  தாரமங்களத்தில் இருந்து மேட்டூர் திரும்பி வர.

பள்ளிப் பிள்ளைகள் கூட்டம் சுமார் 3 அல்லது 4 பேருந்துகளுக்குள் அடைக்கும் வண்ணம்...எப்படியோ நானும் ஏறி விட்டேன். ஏன் எனில் அதை விட்டால் அடுத்த அந்த தடம் வழியாகப் பேருந்துக்கு சுமார் 7 மணிக்குத் தானாம்.


எனக்கு ஒரு பள்ளிப் பையன் அவனது பள்ளிப் பையை எடுத்துக் கொண்டு எனது வேண்டுகோளுக்கு செவி சாய்த்து இடம் அளித்தான் சன்னலோர இருக்கை அருகே ஒரு பணிக்கு சென்று வந்த பெண். நல்ல வேளை அந்தளவாவது படிக்கும் பிள்ளைகளின் மனதில் ஈரம் இருப்பது பற்றி மெச்சலாம். ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் எனில் எனது சொந்தப் பிரச்சனைக்கான பதிவு இது இல்லை என்பதை தெளிவு படுத்தவே...


கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம் எல்லாம் அதிக பட்சம் பெண்பிள்ளைகள் தாம். பையன்கள் கூட்டமும் எண்ணிக்கையும் ஒப்பிட்டால் மிகவும் குறைவுதான்.


மாரிமுத்து என்னும் பையன் எனக்கு இருக்கை அளித்தவன் தாம்...டயர் வெடிக்கப் போவுது, வண்டி கவிழப் போவுது என அபசகுணமாகப் பேசிக் கொண்டிருந்தான்...அங்கிருந்த சில பெண்களும் ஏன் நானும் கூட அப்படி எல்லாம் பேசக் கூடாது என எச்சரித்தபடியே வந்தோம். அதையும் ஒரு பள்ளி பயிலும் சிறு பெண் இரசித்தபடி முகமெல்லாம் பூரிக்க இருந்தாள் அவளுக்கு காதலுக்கு மரியாதை 35 துண்டுகள் என்னும் செய்தி இன்னும் தெரியவில்லை போலும்... சிறு வயது இளம் பருவக் கோளாறு வேறு நிறைய கண்ணில் பட்டது. ஒரு பையன் இன்னொரு பெண்ணை அருகே வந்து நில் என்று கேட்டுக் கொள்ள அந்த பெண்ணும் அதைச் செய்தாள்...


வண்டி ஊர்ந்தது...சாய்ந்தபடியே...சாய்ந்து கொண்டபடி வருகிறது என்றாள் ஒரு பெண்ணும். பாரக்கல்லூர் என்னும் பேருந்து நிறுத்தம் தாரமங்களத்திலிருந்து கூப்பிடு தொலைவு அல்லது ஓரு கிலோமீட்டரும் இருக்காது என்றே கருதுகிறேன். அதற்கும் பேருந்து என பள்ளிப் பிள்ளைகள் காத்திருந்து ஏறி வருகிறார்கள். ஏதாவது ஆபத்து நேர்ந்தால் என்ன ஆவது எதுவும் எவர் கையிலும் இல்லையே....


நான் கல்லூரி பணிக்கு செல்லும் போது கவனித்திருக்கிறேன் காவேரி கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து இடம் இருக்க இருந்தாலும் கல்லூரி இளைஞர்கள் ஏற மாட்டார்கள், அதுவே தனியார் பேருந்து என்ன கூட்டமிருந்தாலும் அதில் தாம் ஏறி வருகிறார்கள்...பெற்றோர்களே பிள்ளை வளர்ப்பில் நிறைய கவனம் தேவைப்படுகிறது எச்சரிக்கையாக இருங்கள்...


ஏனோ நாங்களும் பள்ளி சென்ற போது தினமும் 4 கி.மீ நடந்து சென்று படித்தது நினைவு வர, நடத்துனரும் நாங்கள் கூட பல மைல் தொலைவு நடந்து சென்றுதாம் படித்து வந்தோம் சார் என்றார்.


இது போன்ற இக்கட்டான தருணங்களில் மற்றும் ஒரு மாற்றுப் பேருந்துக்கு அரசு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

ஆனால் நடத்துனர் என்ன சொன்னாலும் எங்கள் மேலிட நிர்வாகிகள் கண்டு கொள்வதில்லை சார், எப்படி சார் நாங்களும் நடந்து கொள்வது என்று என்னிடம் கூற, எனக்கு எழுத மட்டும் தான் தெரியும் முயற்சி செய்கிறேன் சார் என்று எழுதுகிறேன்...


அவரால் முன் பின் எங்கும் வந்து ஆளுமை செய்ய வழி இல்லை...சுமார் 10 கி.மீ வரும் வரைதான் இந்த தள்ளாட்டம் அதாவது பைப்பூர், குள்ளானூர் வரும் வரை. அதன் பின் நங்கவள்ளி நெருங்குகையில் பேருந்து பாதி காலியாக இருக்கும் சூழ்நிலை.


ஆவன செய்யுங்கள் அரசுப் பேருந்து நிர்வாகிகள்...

பேருந்து நடத்துனர்களும் மனிதர்கள்தாம்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

*பெண்களுக்கு இலவசம் என்று சொன்னாலும் சொன்னீர்கள் நகர்புற கிராமப் புற பேருந்து யாவிலும் பெண்கள் கூட்டமே அலை மோதுகிறது.



No comments:

Post a Comment