Saturday, March 6, 2021

மிக அவசர அவசியம்: கவிஞர் தணிகை

 மிக அவசர அவசியம்: கவிஞர் தணிகை


இந்தக்  கட்டுரை நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. 300 கோடி மக்கள் ஆரோக்யமான உணவை வாங்க முடியா நிலையிலும் 68 கோடி மக்கள் பட்டினியால் இருக்கும் சூழலிலும் உலகில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் 93 கோடி டன்கள் உணவு வீணடிக்கப்படுவதாகவும் இந்தியாவில் அது சுமார் 7 கோடி (6.8 கோடி) டன்களாக இருந்தது என்றும் 2020ல் அதன் கணக்கீடு இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் ஐ.நா சார்ந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது

எனவே இப்போதைய அவசர அவசியத் தேவை என்னவெனில் மாந்தராய் பிறந்த அனைவருமே இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் உணவுப் பொருட்களை வீணடிக்கவே கூடாது என்றும் அது மாபெரும் குற்றமாகக் கருத வேண்டும் என்றும் சபதம் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்., சட்டம் எல்லாம் இயற்றப் பட்டுகூட இதை தடுக்கலாம்.

ஐ.நா.,வின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் அதன் கூட்டு நிறுவனம் இணைந்து எந்தளவு உணவு வீணாகிறது என்ற பட்டியலை வெளியிட்டது. அதில் 2019-ல் உலகளவில் 93 கோடி டன்கள் அளவிற்கு உணவு பொருட்கள் வீணடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.



latest tamil news




வீணடிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் 61% வீடுகளிலிருந்தும், 26 சதவீதம் உணவு சேவை நிறுவனங்களாலும், 13% சில்லறை விற்பனையாலும் ஏற்பட்டுள்ளது. வீணடிக்கப்பட்ட உணவுகளின் அளவு, மொத்த உலக உணவு உற்பத்தியில் 17% வரை இருக்கக் கூடும் என்கின்றனர். வீணான இந்த உணவு பொருட்களை லாரிகளில் ஏற்ற வேண்டுமானால் 40 டன் கொள்ளளவு கொண்ட 2.3 கோடி லாரிகள் தேவைப்படும். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தினால் உலகையே 7 வட்டமடிக்கலாம் என ஐ.நா., அமைப்பு கூறுகிறது.

மேலும், ஐ.நா., அறிக்கையின் படி, இந்திய வீடுகளில் வீணாகும் உணவின் அளவு ஆண்டுக்கு 6.8 கோடி டன்கள் ஆகும். இது அமெரிக்காவில் ஆண்டுக்கு 1.9 கோடி டன்கள், சீனாவில் 9.1 கோடி டன்களாக உள்ளது. ஓட்டல்கள் போன்ற உணவு சேவை நிறுவனங்கள், சில்லறை விற்பனை நிலையங்களில் முறையே 5% மற்றும் 2% வீணடிக்கின்றன. பருவநிலை மாற்றம், இயற்கை, பல்லுயிர் அழிவு, சூழல் மாசு போன்ற பிரச்னைகளை சமாளிக்க உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள், குடிமக்கள், தொழில் நிறுவனங்கள் உணவு வீணாவதை குறைக்க தங்கள் பங்கைச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்வளவு உணவு வீணடிக்கப்பட்ட அதே 2019-ல் உலகம் முழுவதும் 69 கோடி மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news






உணவு வீணாகாமல் தடுப்பது எப்படி



கொரோனா பாதிப்பால் இந்த எண்ணிக்கை 2020-ல் உயர்ந்திருக்கும் என்கின்றனர். மேலும் 300 கோடி மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே வீடுகளில் உணவு வீணாவதை குறைக்க உதவி தேவை என்று ஐ.நா., கூறுகிறது. உணவு வீணாவதை குறைப்பதன் மூலம் பசுமை இல்ல வாயுக்களை குறைக்கலாம், மாசுபாட்டை குறைக்கலாம், இயற்கை அழிவது குறையும், பட்டினி குறையும், பணம் மிச்சமாகும் என்கின்றனர்.

 

நன்றி: தினமலர்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment