Tuesday, September 22, 2020

தமிழ் நாடு அன்பு வழி நற்பணி மன்றம்

 20 .09. 2020 அன்று திருச்சியில் திருவெறும்பூர் தஞ்சை சாலையில் உள்ள பரத் மஹாலில் தமிழ் நாடு அன்பு வழி நற்பணி மன்றத்தின் முதல் பொதுக் குழுக் கூட்டம் சமூக இடைவெளியுடன் சானிடைசர் மற்றும் கொரானா கோவிட் 19 தீண்டாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்றது.
 


சரியாக கூட்டம் 10 மணி அளவில் ஆரம்பித்து மாலை 5. 30 மணி வரை நடந்தது. இந்த முதலும் முக்கியமான கூட்டத்துக்கு மாநிலம் எங்கும் இருந்து பல மாவட்டங்களின் பிரதிநிதிகளும் திரளாக கலந்து கொண்டனர். 50 பேருக்கும் மேல் கலந்து கொண்ட இந்த அத்தியாவசியமான கூட்டத்தை தமிழ் நாடு அன்பு வழி நற்பணி மன்றத்தின் சிறப்பு ஆலோசகரும் ஆணி வேராய் இருக்கும் விடியல் குகன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

சிற்பி கொ. வேலாயுதம் அவர்களின் மாண்பு மிகு ஆசியுடன் வழிகாட்டுதலும் வாழ்த்துகளும் சென்னையிலிருந்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்க்கு அமுதவாரிதியாய் இருந்து அவர் கலந்து கொள்ள முடியாத குறையை போக்கியது.

அவருக்காக அவரின் தியாக உணர்வை மையப் படுத்திய தீர்மானமும் இயற்றப் பட்டது. இந்த அரிய நிகழ்வை தலைமையேற்று நற்பணி மன்றத்தின் தலைவர்  அறிவியல் அறிஞர்  மற்றும் தமிழ் நாடு அறிவியல் இயக்க துணைத் தலைவருமான அய்யா சுகுமாறன் நடத்தி வைக்க எழுச்சி உரை ஆற்றினார். இதன் பொதுச் செயலாளர் ராமலிங்கம் அய்யா அவர்கள்.

முன்னதாக வாழ்த்துரை வழங்கினார் மன்றத்தின் சிறப்பு ஆலோசகர்: விடியல் குகன் அவர்கள்
துவக்க உரையாற்றும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டு சிறப்பாக செய்யப்பட்டது.
எனது துவக்க உரையில்:

அப்துல் கலாம் பாணியில் : செயலே புகழ் பரப்பும் வாய் அல்ல என்ற பழமொழியையும்  Action Speaks More (than) Words ஆக்சன் ஸ்பீக்ஸ் மோர் வேர்ட்ஸ், மோர் தேன் வேர்ட்ஸ் என்ற ஆங்கிலப் பழமொழியையும் குழுமி இருந்தோரை உரத்து உச்சரிக்க வைத்தேன்.

குழந்தைக்கு எப்படி புத்துணர்வு, இளமை, அறியாமை என்ற 3 பண்புகளும் இருந்து அவர்களை வளரவைக்கிறதோ அப்படித்தான் நானும் கலந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டேன்.

வயதானவர் எல்லாம் குழந்தை நிலையில் தான் கள்ளம் கபடு சூது வாதற்ற நிலைக்கு மறு சுழற்சி செய்யப் படுகிறார்கள். எனவே தான் அப்துல் கலாம் தமது முதிய வயதிலும் குழந்தைகள், பள்ளிகள், கல்லூரிகள் என நாடிச் சென்றார் என்று குறிப்பிட்டேன்

ஞானி ஒருவரிடம் ஞானோபதேசம் பெற பசியுடன் வந்தவர்க்கு முதலில் வயிறார சோறு போடவும் அதன் பின் ஞானோபதேசம் பற்றி யோசிக்கலாம் என்ற கதையை கூறிவிட்டு எங்கள் மன்றத்தின் இரு முக்கிய பணிகளாக பசி தீர்த்தலும், சுற்றுப் புறத் தூய்மையும் ஐ. நாவில் குறிப்பிட்டது போல இருக்கும் என்ற திட்டமிடல் பற்றியும் குறிப்பிட்டேன்.


. சிச்சோரி படத்தில் எப்படி 3 ஆம் நிலையில் இருப்போர் தியாகத்தை அடிப்படடையாகக் கொண்டு  போட்டிகளில் வெல்லும் நிலைக்கு செல்கிறார்கள் என்ற விருப்பமிகு, ஆசை மிகு, நேசமிகு நடவடிக்கைகளை தியாகம் செய்து கவனச் சிதறல் இல்லாமல் நாட்டு மேன்மைக்கு உழைத்தால் தாம் அர்ப்பணித்தால் தாம் ஒவ்வொரு காலத்துளியும் பயன்பட்டால் தாம் யாவர்க்கும் நன்மை வரும் என்றும் குறிப்பிட்டேன்.

அதற்கு எல்லாத் தலைவர்களும் ஏன் பிரமசாரியத்தை கைக்கொண்டார்கள் என்றும் காமம் பெரும் புலியாக பதுங்கி இருந்து கவனத்தை கபளீகரம் செய்து பாய்ந்து புறப்படும் எனவே தான் அதை அனுமதிக்காத இந்தியத் தலைவர்கள், ஞானிகள், தவசீலர்கள், சித்தர்கள் எல்லாம் பெருமைப் படுத்தப்பட்டார்கள். பெருமைப்பட்டார்கள் என்பதையும் குறிப்பிட்டேன்.

அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு


என்ற குறளின் மேன்மையும், பற்றி குறிப்பிட்டேன். தலைவர் சுகுமாறன் அவர்கள்  ஆற்று வெள்ளம் போல தனது உரையில் தமது அனுபவத்தை எல்லாம் 34 நாடுகளுக்கு சென்றதையும் 6 மொழிகள் தெரிந்ததையும் குறிப்பிட்டார்.

செயலாளர் ராமலிங்கம் தமது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு அத்துடன் உறுதி மொழி ஏற்கச் செய்தார் அந்த உறுதி மொழி சிற்பி. கொ. வேலாயுதம் அவர்களால் முன் மொழியப் பட்டு உருவாக்கப் பட்டிருந்தது.

நிறைய மாவட்டப் பிரதிநிதிகளும் தங்கள் கருத்துரைகளை கோர்த்தனர். அது மட்டுமின்றை சேவை அமைப்புகள் வழியே முகக் கவசம்,சோப்பு, பேஸ்ட்,பிரஸ், சீப்பு இப்படி பல பொருள்கள் அடங்கிய பை கலந்து கொள்ள வந்திருந்த அனைவர்க்கும் சேவை என்ற சேவை அமைப்பினரால் வழங்கப் பட்டது. 
வந்திருந்த அனைவர்க்கும் மரியாதை செலுத்தப் பட்டு மாநில பொறுப்பாளர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப் பட்டன.



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment