Tuesday, February 11, 2020

அஹா என்று வென்றது பார் ஆம் ஆத்மி டில்லியில்: கவிஞர் தணிகை

அஹா என்று வென்றது பார் ஆம் ஆத்மி டில்லியில்: கவிஞர் தணிகை

Image result for aravind kejriwal won delhi

டில்லி மக்களின் அறிவும் தெளிவும் நாடெங்கும் வருங்காலத்தில் விரியட்டும், நல்லாட்சி புரியட்டும்.பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் டில்லியின் அரியாசனத்தில் வெளக்கமாறை வைத்து விட்டார்கள் தாமரையை வைக்காமல் என்று கூறியுள்ளார்.

வெளக்கமாறு பெருக்க உதவும், அதையும் இலட்சுமி என்றும் கூறுவார்கள்...தாமரை இருக்க வேண்டிய இடம் தத்தளிப்புடன் தண்ணீரில் மட்டுமே...அதை தெளிவு படுத்தி இருக்கிறார்கள் டில்லியின் வாக்காளர்கள்.

அஹா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி என ரஷிய தேசத்தின் ஜார் ஆட்சியின் வீழ்ச்சியைக் குறிப்பிட்டார் பாரதி. இங்கு நாடெங்கும் ஆணவத்துடன் ஆட்சி புரிந்து ஒரு இலட்ச ரூபாய்க்கு ஒரே காசு, முன்னூற்று ஐம்பது ரூபாய்க்கான நோட்டு, என பொருளாதார பண வீக்கத்தை அதிகரிக்க அச்சடித்து வரும் இந்த பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி இரண்டாம் முறை அமைந்தும் டில்லிக்கு ராஜா நான் தான் என கெஜ்ரிவாலுக்கு டில்லி மக்கள் நல்ல தீர்ப்பு வழங்கினார்கள்..

கெஜ்ரிவால் ஒரு நல்ல உதாரணம்....இது நாடெங்கும் விரிந்து பரவட்டும் ... அண்ணா ஹசாரே குருவை விட இந்த  கெஜ்ரிவால் சீடர் பல மடங்கு பல்லாயிரம் மடங்கு உயர்ந்து விட்டார். போராடிப் போராடி மேடைகளில் அடி வாங்கியும் கூட மத்திய அரசும் அதன் லெப்டினன்ட் கவர்னர், காவல்துறையின் ஒத்துழையாமை இருந்தும் இந்த அளவு மக்களுக்காக செய்ய முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறார்.

அடுத்து பீஹார் இலக்கு என்கிறார்கள்
Image result for aravind kejriwal won delhi
பார்ப்போம்
அடுத்து தமிழகத்திலும் தேர்தல்....எஞ்சியுள்ள பஞ்சாயத்து நகராட்சி மாநகராட்சிகளுக்கு
இன்னும் ஓராண்டில் இங்கும் சட்ட சபைத் தேர்தல்....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment