Friday, April 24, 2026

நீலக் கிரகத்தின் பெரும் பீடை அமெரிக்கா: கவிஞர் தணிகை

 நீலக் கிரகத்தின் பெரும் பீடை அமெரிக்கா: கவிஞர் தணிகை



டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை இந்தக் கிரகத்தின் நரகப் படுகுழி என தேவையின்றி விமர்சித்ததற்கான‌  பதில் பதிவு இது. பைத்தியங்கள் எப்படி வேண்டுமானாலும் பிதற்றும் விட்டு விடலாம் என விடாமல் இதை ஒரு இந்தியனான நான் நின்று பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.


டொனால்ட் ட்ரம்ப், டொனால்ட் ட்ரம்ப் பெட்ரோல் பம்ப் ஆண்டு வரும் அமெரிக்கா வியட்நாமில் அடி வாங்கி வாலை சுருட்டி வந்ததை உலகே அறியும்,கியூபா நாட்டின் தலைவரான பிடலை எத்தனை முறை கொல்ல நினைத்து படு தோல்வி அடைந்தது வரலாறு. இப்போது ஈரான், கொலம்பியா, கனடா, வெனிசுலா, கியூபா என உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் அச்சுறுத்தல் மேலும் உலகின் எல்லா மனிதர்களுக்கும் தீங்கு செய்யல் எந்தக் கணக்கு? 


இவர்கள் நாடான பெரும்பீடை அமெரிக்கா ஒரு நாடு மட்டும் தான் உலகில் இருக்க வேண்டுமா என்ன? வேறு எந்த நாடும் உலகில் தலை எடுத்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் எப்போது பார்த்தாலும் இந்த நாடு இதன் தலைவர்கள் பெரிய அண்ணன்களாக வாலாட்டுவது சட்டாம்பிள்ளைத் தனம் பண்ண நினைப்பது அற்பத்திலும் அற்பத்தனம்.


 உலக நன்மைக்கு கம்யூனிசம் என்ற தத்துவத்தை நடைமுறையில் தந்த சோவியத் ரஷியாவை ஒழித்து துண்டாக்கி உக்ரேன் ரசியா போரில் கொண்டு வந்து நிறுத்த இவர்கள் எல்லாம் பின்னால் உள்ளதே காரணம். உக்ரேன் ரசியா சண்டை என்கிறான் இங்கே சிமென்ட் விலை ஏறுது என்கிறார். ஈரான் சண்டை என்கிறார் இங்கே எரிவாயு உருளை சாதாரண மனிதர்க்கு 60 ரூ ஏற்றி உள்ளார் இப்படி உலகில் அத்தனை மனிதர்க்கும் இந்த மனிதன் எதிரிடையாக இயங்கும் துரோகி. சூடானில் அதன் இராணுவத்துக்கும், துணை இராணுவத்துக்கும் சண்டையில் சுமார் 2 கோடி பேர் உணவின்றி மாட்டுத் தீவனங்களையும், இலை தழைகளையும் உண்டு வாழ்கிறார்களாமே அங்கே சென்று உங்கள் நீதி செய்யலாமே? இந்தியாவைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? இந்த நரகப் படுகுழியில் நீங்கள் எவ்வளவு வீயாபாரம் செய்து கொழுத்து வருகிறீர்கள்?


சண்டையிட்டாலும் நாம் சகோதரரன்றோ, ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி என்பான் பாரதி, பாரத சமுதாயம் பாரத சமுதாயம் வாழ்கவே என்பான்...அப்படி இருக்கும் நாட்டின் ஒரு மண்ணின் மைந்தனாக மார் தட்ட வேண்டிய கட்டம் இது. வாயை விட்டு வாங்கிக் கட்டிக் கொண்டான் ஒரு நாட்டின் தலைவன். இந்த அந்த நாட்டிலேயே குற்றம் சாட்டப் பட்டு நிரூபணமான குற்றவாளி நீலப்பட நடிகைக்கு இழப்பீடு வழங்கிய உத்தமன்,அந்த நாட்டு மக்களாலேயே 51% வேண்டாம் எனச் சொல்லப்படும் துரோகி,...


சுந்தர் பிச்சை முதல் அங்கிருக்கும் இந்தியர்கள் உண்மையிலேயே இந்த மண்ணில் தாம் பிறந்தீர் என்றால் அந்த நாட்டை விட்டு இப்போதே மீண்டும் நம் நாட்டிற்கே குடி பெயர வேண்டும். அங்குள்ள இந்தியர் 40 சதம் இங்கே திரும்ப நினைக்கின்றனர் என்ற செய்தி இருக்கிறது அது 100% ஆக வேண்டும்.


இங்குள்ள அந்த நாட்டின் தூது அமைப்புகள் திருப்பி அனுப்பப் பட்டு, அங்கிருக்கும் நமது இந்தியாவின் தூதரகங்கள் மூடப் பட்டு திரும்ப அழைக்கப் பட வேண்டும்... நரகப் படு குழி நாடு அவர்களுக்கு இனி எந்த வகையிலும் பயன்படக் கூடாது. நாமே நரகப் படுகுழி நாடான போது இந்த சொர்க்க‌ புரிக்காரர்களுக்கு இங்கு வேலை என்ன? இவர்களுடன் தொடர்பு என்ன?


வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கலாமை வைத்து அணு சோதனை செய்தபோது இந்த நரகப் படுகுழி நாடு இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து என்ன சாதித்து விட்டார்கள்? இந்திராவை நிக்சன் கேலி செய்ய நினைத்து வாங்கிக் கட்டிக் கொண்டதெல்லாம் சரித்திரம். இவர்கள் ஒரு நாடுதான் அணு சக்தி வைத்திருக்க வேண்டுமா என்ன? மற்ற நாடுகள் எல்லாம் இவர்களுக்கு மறுபடியும் கப்பம் கட்ட வேண்டுமா என்ன? இந்த தகுதி இல்லா மனிதரை வேறு எந்த நாடுமே ஆதரிக்கவில்லை என்பதில் இருந்தே இவர்கள் நாடிருக்கும் கேவலம் தெரியவில்லையா?இந்த இலட்சணத்தில் நோபெல் பரிசு வேண்டுமாம்?


இந்த ஒரு விசியத்தில் பாரதப் பிரதமரும் அனைத்து மக்களும் ஒரே கருத்தில் நிற்க வேண்டும், நிற்போம் அந்தப் பெரும் பீடை நாட்டுக்கு உலக நாடெல்லாம் சேர்ந்து ஒரு நல் வழி காட்ட வேண்டும், உலக மாந்தர் எல்லாம் துக்கமின்றி வாழ தூக்கத்துடன் நிம்மதியாக வாழ வழி வகை செய்தாக வேண்டும்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




No comments:

Post a Comment