உங்க கனவைச் சொல்லுங்க: கவிஞர் தணிகை
1. ஊழல் இல்லா இந்திய தேசம்
2. இலஞ்சமில்லா தமிழகம்
3. தரகு இல்லா ஒப்பந்தப் பணிகளும் பொது அதிகார அமைப்புகளின் பணிகளும்
4. குறைந்த பட்சம் புகை மது போதை இல்லா தமிழகம்
5. அதிகபட்சம் புகை மது போதை இல்லா உலகு
6.எல்லைகளில்லா உலகமெலாம் ஒரே தேசம் இராணுவமிலா மக்கள் தன்னொழுக்க பாதுகாப்பு.
7.நாடுகளின் கூட்டமைப்பின் ஆட்சியில் வரும் உலகெலாம் ஒரே தேசத்தின் தலைவராக நான்(ஹா ஹா ஹா)
8.உலகெலாம் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு, உடை, உறையுள், மருத்துவ(ம்) உத்தரவாதம்
9.வாக்குகள் விகிதாச்சார அடிப்படையில் எல்லாக் கட்சிகளும் பிரதிநிதிகளும் சேர்ந்த ஆட்சி அமைப்பு
10. பணமி(ல்)லா தேர்தல்
11. சரியாக செயல்படாத மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை
12.( குறந்த பட்சம்)1999 முதல் பத்திரப் பதிவுடன் இருக்கும் எனது காமராஜர் நகர் 35/68 A சேலம் கேம்ப் மேட்டூர் நகராட்சியில் (Salem Dt.,)TN, -இருக்கும் இல்லத்திற்கு தமிழக முதல்வர் அவர்களுக்கு 2022ல் மனு செய்தும்,கோட்டாட்சியர் வந்து பார்த்து சென்றும்,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் எனது இல்லத்திற்கான இது வரை கிடைக்கும் கிடைக்கிறது எனச் சொல்லிக் கொண்டே சென்று கொண்டிருக்கும் பிரச்சனைக்குத் தீர்வாக பட்டா கிடைத்தல்.
இப்போதைக்கு இவைதான் பிரதானமாக முக்கியமாக எனக்கு சொல்லத் தோன்றுகிறது.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment