மகா நதி: கவிஞர் தணிகை
காலமெனும் மகா நதி ஓடிக் கொண்டே...
பருக்கைத் துகள் கற்களின் சிதைவோ, பாறாங்கல்லோ உருண்டபடியே பயணம் செய்த சுவடு கூட இன்றி...
மகாநதி எனும் ஒரு கமலின் திரைப்படத்தில் தொலைந்து போன மகளை சோணாகஞ்ச் என்னும் மேற்கு வங்க கொல்கொத்தா நகரின் சிவப்பு விளக்கு பகுதியில் கண்டடையும் அந்த தந்தை பாத்திரம்.
அப்போது மயிர்க்கூச்செறியும் வண்ணம் அந்த தடைகளை உடைத்தெறிந்து அந்த உடலை விற்கும் பாலியல் தொழில் பெண்டிர் அந்தப் பெண்ணை விடுவிப்பார்கள் அந்த தொழிலில் இருந்து. பார்ப்பதற்கே சொல்லில் வடிப்பதற்கே முடியாத அந்தக் காட்சி அமைவு ஏனோ எனது நினைவு அலைகளில் வந்தாடிக் கொண்டே இருக்கிறது சில நாட்களாக...
ஊடகங்கள், சமூக ஊடகங்கள் தரும் பாதிப்புகள் நற்சமூக அமைவுக்கு ஏற்றதாக இல்லை.
அடி முதல் நுனி வரை உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை அதன் தலைவர்கள் வரை என்றோ ஒரு தலைவர் அமெரிக்காவில் சொன்ன நினைவு பாலியல் தொழிலை விட மோசமானதே அரசியல் என்ற கருத்தும் சுழலாக வந்து கொண்டிருக்க எத்தனை புரட்டுகள் புனை சுருட்டுகள்... செரிக்க முடியவில்லை எனவே இந்தப் பதிவை தேவையின் பாற்பட்டு செய்து விடுகிறேன்.ஆனால் அரசியல் இல்லாமல் மனித அசைவு இல்லை என்பதுதான் இன்றியமையாதது என்பதும் தான் அனைவராலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிதர்சனம்.
பாலியல் தொழில் கூட கேவலமில்லை அதன் தன்மைகள் மேலாயிருக்கையில்... அதற்காக என்னை அப்படிச் சொல்லி விட்டார்களே என ஒரு பெண் அழுவதும், ஒரு அரசியல் நபர் என்னைப் பாலியல் குற்றவாளி என எப்படிச் சொல்லலாம் எனக் கேட்பதும், அதை ஊடகங்கள் அடிபிறழாமல் சில நாட்களாக அஞ்சல் செய்வதும் வேறு எந்த செய்தி நடப்புகளுமே இல்லை என்ற பேரில் நுகர்வோரை சாகடித்து வருவதும்...இதில் இருந்து எல்லாம் வெளிவந்து
இன்றைய மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வில் சாதனை செய்ய வாழ்த்து சொல்வது சிறந்தது என எண்ணுகிறேன்
தம்பி தங்கைகளே, குழந்தைகளே இந்த தேர்வு உங்கள் வாழ்வின் திறவுகோல்:சிறப்பாக செய்யுங்கள். வாழ்த்துகள்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment