Tuesday, February 16, 2021

பண மதிப்பிழப்பு நடவடிக்கை: நவம்பர் 8 2016 : கவிஞர் தணிகை


பண மதிப்பிழப்பு நடவடிக்கை: நவம்பர் 8 2016 : கவிஞர் தணிகை

தேர்தல் என்றால் பணம்
ஆளும் கட்சி அனைத்து கட்சியினரையும் ஒன்றுமில்லாமல் செய்ய எடுத்த எடுக்கும் ஆய்தங்கள் பலப் பல‌
அதில் ஒன்றுதான் எடுத்த‌ பண மதிப்பிழப்பு நடவடிக்கையும்.
அரசியல் ஒப்பந்தம், ஆட்சி, தேர்தல் வேட்பாளர் எல்லாம் பணம் என்றாகிவிட்டது. பணமில்லா தேர்தல் வந்தால் மட்டுமே நல்லாட்சியும் நல் வேட்பாளரும் வர வழியாகும்.

இந்த தேர்தலும் கையில் காசு வாயில் தோசை
குத்தி நிமித்தறான் கொடுத்தாக்கா சில்லறை என்று இருக்குமா?
அல்லது தேர்தல் ஆணையம் செங்கோல் ஏந்துமா?

ஒரு தேர்தல் உத்தமமாக நடைபெற வேண்டுமெனில்
எந்தக் கட்சியுமே தேர்தல் நடைபெறும் முன் 3 முதல் 6  மாதங்களுக்கு பதவியில் அமர்ந்திருக்கக் கூடாது
ஆட்சியும் அதிகாரமும் சுயேட்சேயன சுதந்திரமான தேர்தல் ஆணையம் போன்ற 
அமைப்புகளிடம் விடப் பட வேண்டும்

அது போன்ற தேர்தல் சீர்திருத்தங்களும்
எந்தக் கட்சியுமே தேர்தல் பிரச்சாரச் செலவுகள் செய்யத் தடை வர வேண்டும்
தேர்தல் ஆணையமே வேட்பாளரை அறிமுகம் செய்து நூதனமான செலவுகளற்ற முறைகளில்
தேர்தல் நடைபெறச் செய்து வேட்பாளரை ஒன்று விகிதாச்சார வாக்கு பெறும் அடிப்படையில்
அல்லது குறைந்த பட்ச வேட்பாளரை மட்டுமே தேர்தல் களத்தில் இருக்க வைத்து அல்லது இரண்டு வேட்பாளரை மட்டுமே அனுமதித்து தேர்தல் நடத்தப் பட வேண்டும். அப்படி தேர்தல் களம் காணும் முன் அந்த வேட்பாளரை தேர்வு செய்ய நியமிக்க நிறைய நாட்டுக்கு தேவையான மக்களுக்குத் தேவையான சேவை செய்ய‌
உகந்தவர்தானா என்பதெல்லாம் உரசிப் பார்க்கப் படல் வேண்டும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை. 

No comments:

Post a Comment