எமன்: கவிஞர் தணிகை

பொதுவாகவே விஜய் ஆண்டனி என்னும் சிரில் ராஜா அந்தோனி எதையாவது வித்தியாசமாக செய்ய முயற்சிக்கிறார் என்பதை யாவரும் அறிவர். அதில் இந்த எமன் நல்ல கதை அமைப்பு. ஆனால் கொஞ்சம் மெதுவாக ஆமை வேக நகர்த்தலால் ஸ்லோ மோஷன் பிக்சர் போல ஆகிவிடுகிறது . ஆனாலும் நிறைந்த முயற்சிக்காக பார்க்கலாம்.
இவரே இசை அமைத்துள்ளார். இவர் பாடகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் , தமிழகத்தில் அரசியல் எவ்வாறு உள்ளது என்பதை திரைச் சித்திரமாக்க முயன்றுள்ளார்.
தந்தை அறிவுடை நம்பியை நயவஞ்சகமாக கொன்றதற்கு காரணமாக இருந்த அரசியல் பிரமுகர்களை இவர் வஞ்சம் தீர்க்கிறார். தியாகராஜன் ஒரு வில்லன்,ஆனால் இந்த அரசியல் கட்சிக்காரர்களிடை நண்பரும் இல்லை, பகைவரும் இல்லை என்ற கொள்கையின் அடிப்படையில் நகர்கிறது எதிரிக்கு எதிரி நண்பர் என்ற கோட்பாடும் இருக்கிறது.
எது எப்படி ஆனாலும் தமிழரசன் என்னும் இந்த படத்தின் எமன், யார் தம் முன் வந்து தம்மைக் கொல்ல முயன்றாலும் இராமாயணக் கதையில் வாலி பாத்திரம் போல பலம் எல்லாம் பெற்று அந்த எதிரிகள் துவம்சம் செய்யப் படுகிறார்கள். சண்டை எல்லாக் காட்சிகளுமே மெதுவாக நகர்கிறது. எதற்காக இப்படி காட்சிபடுத்தினார் என்று விளங்க வில்லை. நன்றாக புரிய வேண்டும் என்பதற்காக செய்திருந்தாலும் அதுவே இந்த படத்துக்கு ஒரு பின்னடைவாக ஆகிவிட்டது

மியா ஜார்ஜ் அழகாக இருக்கிறார்
சங்கிலி முருகன் நல்ல தாத்தாவாக வருகிறார். இறந்து தியாகமும் செய்கிறார், அரசியலில் உடன் இருப்பாரை நம்பாதே....இன்றைய அரசியல் என்றாலே அது கூலிப்படை, நம்பிக்கைத் துரோகம், கொலை, கொள்ளை, திருட்டு எவரையும் தம் சுயலாபத்துக்காக போட்டுத் தள்ளலாம் மேலும் அன்டர் கிரவுண்ட் டான் வாழ்க்கை இவைதான் எனச் சொல்லப்பட்டு சொல்லப்பட்டு தமிழ் படங்கள் யாவும் புளித்து போய்விட்டன. எனவே இந்தப் படம் கூட வித்தியாசமாக சொல்ல முயற்சி செய்யப்பட்டிருப்பினும் நம்மால் முழு நிறைவில் இரசிக்க முடியவில்லை.
நல்ல கதை அமைப்பு இதை மறுப்பதற்கில்லை. சைத்தான் அளவுக்கு மோசமில்லை. பார்க்கலாம்.

நூற்றுக்கு 35 மார்க் கொடுத்து பாஸ் போட்டு விடலாம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.