கூப்பிட்டா மலர் தேடி வண்டு வரும்
தேதி குறிப்பிட்டா கொய்யாவைக் கிளிகள் கொத்தும்
சாப்பிட்டால் வருகின்ற ஏப்பம் போலே
கண்கள் சந்தித்தால் வரவேண்டும்
உண்மைக் காதல்!
பாலுணர்வு பொருட்டல்ல காதலுக்கு
உணர்ச்சிப் பரிமாற்றம் பொருளல்ல காதலுக்கு
தோலுறவு பொருட்டல்ல காதலுக்கு
நெஞ்சத் தொடர்பொன்றே மூச்சாகும் காதலுக்கு
கல்யாணக் கட்டடத்தைக் கட்டுதற்கு
நான்கு கண் கலந்து நாட்டுகின்ற கால் கோள் விழா
இல் வாழ்க்கை காவியத்தை முதலில்
இரு நெஞ்சம் எழுதி வைக்கும் காப்புச் செய்யுள்
கடல் கொண்ட நுரை போல முடி வெளுத்தும்
பசுங் கதிர் முற்றிப் போனது போல் முதுமை வந்தும்
உடல் கொண்ட இச்சைகள் ஓய்வெடுத்தும்
நல்ல உள்ளத்தே உயிர்த்திருக்கும் உண்மைக் காதல்
மறைந்த கவிஞர் வாலி

பில்கணீயம்
பேரன்பு கொண்டோரே பெரியோரே பெற்ற தாய்மாரே
நல் இளஞ்சிங்கங்கங்காள்
நீரோடை நிலங்கிழிக்க
நெடுமரங்கள் நிறைந்த பெருங் காடாக்க நேரோடி வாழ்ந்திருக்க
பருக்கைக் கல்லின்
நெடுங்குன்றில் பிலஞ்சேரப் பாம்புக் கூட்டம்
போராடி பாழ் நிலத்தை புதுக்கியவர்
யார் அழகு நகருண்டாக்கி
அவரெல்லாம் எலியாக முயலாக இருக்கின்றார்கள்
ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன்
புலி வேடம் போடுகின்றான்
பொது மக்களுக்கு புல் அளவு மதிப்பேனும் தருகின்றானா?
அரசனுக்கும் எனக்குமொரு வழக்குண்டாக
அவ்வழக்கை பொதுமக்கள் தீர்ப்பதேதான்
சரியென்றேன் ஒப்பவில்லை அவளும் நானும்
சாவதென்றே தீர்ப்பளித்தான் சாவ வந்தோம்...
அரசன் மகள் தன் நாளில் குடிகட்கெல்லாம்
ஆள் உரிமை பொதுவாக்க நினைத்திருந்தாள்
...... மறைந்த கவிஞர் பாரதி தாசன்

மராட்டிய வீரர் சிவாஜி:
தாழ்ந்த சாதி, அரசியலை அறியாதவன்
ம்..யார் தானும் நாடும் ஒன்றெனக் கண்டு
தன்னையே தந்த மன்னன் சிவாஜி
தாழ்ந்த ஜாதி, அரசியலை அறியாதவன்
மன்னர் குலத்தில் பிறவாதவன், பரம்பரை உரிமை இல்லாதவன்
மானம் காக்கும் குடியானவன் மகுடம் தாங்க முடியாதா?
தார்த்தாரியர் தந்த புரவியில் அமர்ந்து ஆர்த்தெழுந்த சிவாஜியைக் கண்டு
நாட்டுக்குரிய நல்லவெனென்றும் போர்ப்பாட்டுக்குரிய மன்னவனென்றும்
ஆரத்தி எடுத்த மக்கள் எங்கே....
அதன் ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும் தாளத்தை மட்டும் அனுபவிப்போம் எனக் காத்திருந்த
ஆணவக்காரர்கள் எங்கே?.....
யார் எழுதிய வசனம் இது: அறிஞர் அண்ணாவா? மறந்து விட்டதே..
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
மறதி...வயோதிகத்தின் அடையாளமா?