Monday, June 24, 2024

சூரியோதயம் பூமியில் 13 மணி நேரத்துக்கு ஒரு முறை: கவிஞர் தணிகை

 நன்றி:

பிபிசி.

பூமியில் ஒரே நாளில் இரண்டு முறை சூரியன் உதித்த நிகழ்வு பற்றித் தெரியுமா?


பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர்ஆசிரியர் குழு
  • பதவி,பிபிசி முண்டோ

பல நூறு கோடி ஆண்டுகளுக்கு, பூமியில் ஒரு நாளின் சராசரி நீளம் 13 மணிநேரத்திற்கும் குறைவாக இருந்தது.

அப்போதிருந்து, அது படிப்படியாக விரிவடைந்து வருகிறது. நிலவு மற்றும் பெருங்கடல்கள் இருப்பதன் காரணத்தினால், அது மெதுவாக விரிவடைந்து வருகிறது.

மனித வரலாற்றில் நிலவு எப்பொழுதும் பூமியின் தவிர்க்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது.

கடல் அலைகள் நிலவின் மென்மையான ஈர்ப்பு விசையால் கட்டுப்படுத்தப்படுகின்றன. பல உயிரினங்களின் இரவு நேர வாழ்க்கை அதன் ஒளியால் தான் நடக்கிறது.

மனித நாகரிகங்கள் நிலவின் இயக்கங்களுக்கு ஏற்பத் தங்கள் நாட்காட்டிகளை அமைத்துக் கொண்டன. மேலும் சில சிறிய வண்டுகள் போன்ற உயிரினங்கள் நிலவின் மேற்பரப்பில் பிரதிபலிக்கும் சூரிய ஒளியால் வழிநடத்தப்படுகின்றன.

மிக முக்கியமாக, சில கோட்பாடுகளின்படி, நிலவு நமது கிரகத்தில் வாழ்க்கையைச் சாத்தியமாக்கும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி, பூமியில் உயிர்கள் உருவாவதற்கு வழிவகுத்திருக்கலாம் என்று கூறுகின்றன.

பூமியைச் சுற்றியுள்ள நிலவின் விசித்திரமான சுற்றுப்பாதை இன்று நம் வாழ்க்கையை வடிவமைக்கும் சில வானிலை அமைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்

நிலவு பூமியை விட்டு விலகிச் செல்கிறதா?

எப்படி இருப்பினும், நிலவு நம்மை விட்டு மேலும் மேலும் விலகிச் செல்கிறது.

அது பூமியைச் சுற்றிச் சுழலும் போது, அதன் சுழற்சியும் இயக்கமும் ஒத்திசைவாக இருக்கிறது. அதனால்தான் நாம் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறோம். 'சந்திர மந்தநிலை' (lunar recession) என்று அழைக்கப்படும் ஒரு செயல்பாட்டில் நிலவு படிப்படியாக பூமியிலிருந்து விலகி நகர்கிறது.

அப்பல்லோ விண்வெளி வீரர்களால் நிலவின் மேற்பரப்பில் வைக்கப்பட்டுள்ள பிரதிபலிப்பான்களிலிருந்து (reflectors) லேசர்களின் மூலம், நிலவு எவ்வளவு விரைவாக நகர்கிறது என்பதை விஞ்ஞானிகள் சமீபத்தில் மில்லிமீட்டர் துல்லியத்துடன் அளவிட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் நிலவு பூமியிலிருந்து 3.8செ.மீ வீதம் விலகிச் செல்வதை அவர்கள் உறுதிப்படுத்தினர். மேலும், இது நிகழும்போது, ​​​​நமது பூமியின் நாட்கள் சிறிது நீளமாகின்றன.

பூமிக்கும் அதன் துணைக்கோளான நிலவுக்கும் இடையிலான உறவைப் படிக்கும் லண்டன் பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியல் பேராசிரியரான டேவிட் வால்தம், 'இது அலைகளைப் பற்றியது' என்கிறார்.

"பூமியில் உள்ள அலை எதிர்ப்பு அதன் சுழற்சியைக் குறைக்கிறது. மேலும் நிலவு சுழல் உந்தத்தின் (angular momentum) வடிவத்தில் அந்த ஆற்றலைப் பெறுகிறது," என்று அவர் கூறுகிறார்.

பூமி சுழலும் போது நிலவின் ஈர்ப்பு விசையால் கடல்களில் அதிக மற்றும் தாழ்வான அலைகள் ஏற்படுகின்றன.

உண்மையில், இந்த அலைகள் நிலவின் ஈர்ப்பு விசையை நோக்கியும் அதற்கு அப்பாலும் நீள்வட்ட வடிவில் (elliptical shape) நீண்டு சென்று அலைகள் உருவாகிறது.

பூமியில் நாட்களின் நீளத்தை அதிகரிக்கும் நிலா!

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாட்கள் எவ்வளவு நீளமாகியிருக்கின்றன?

இருப்பினும், பூமி அதன் அச்சில் நிலவை விட மிக வேகமாகச் சுழல்வதால், கீழே நகரும் கடல் படுகைகளால் ஏற்படும் உராய்வினால் நீர் இழுக்கப்படுகிறது. இதன் பொருள் - நீர், நிலவை அதன் சுற்றுப்பாதையில் சற்று முன்னோக்கி நகர்த்துகிறது, நிலவு அதை பின்னுக்குத் தள்ள முயற்சிக்கிறது.

இதனால் பூமியின் சுழற்சி ஆற்றல் படிப்படியாகக் குறைந்து, பூமியின் சுழற்சியைக் குறைக்கிறது. அதே நேரத்தில் நிலவின் சுற்றுப்பாதை உயரம் அதன் அதிகரித்த ஆற்றல் காரணமாக அதிகரிக்கிறது.

மிகச் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், பூமியின் சுழற்சியின் இந்த படிப்படியான மந்தநிலையானது 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து, ஒரு நாளின் நீளத்தை, ஒரு நூற்றாண்டுக்குச் சராசரியாக 1.09 மில்லி விநாடிகள் அதிகரிப்புக்கு ஒத்திருக்கிறது. அதாவது, இது, ஒரு நூற்றாண்டிற்கு சுமார் 1.09 மில்லி விநாடிகள் சராசரி ஒரு நாளின் நீளத்தில் அதிகரிப்பைக் குறிக்கிறது.

இது மிகச்சிறிய மாற்றம், எனவே முக்கியமற்றது எனத் தோன்றினாலும், பூமியின் வரலாற்றின் 450 கோடி ஆண்டுகளை மொத்தமாகப் பார்க்கும் போது இது ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது.

எதிர்காலத்தில் என்ன நடக்கும்?

எதிர்காலத்தில் பூமி தனது நிலவை இழக்கும் சாத்தியங்கள் உள்ளனவா?

தற்போது வேகமாக நிகழ்ந்து வரும் நிலவின் நகர்ந்து செல்லும் விகிதத்தில் கூட, நிலவு பூமியிலிருந்து முற்றிலும் பிரிந்து செல்வது சாத்தியமில்லை.

ஏறக்குறைய 500 கோடி முதல் 1,000 கோடி ஆண்டுகளில், சூரியன் பெரும்பாலும் அழிந்துவிடும், மேலும் மனித இனம் அதற்கு முன்பே அழிந்திருக்கும்.

மறுபுறம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உருகுதல் காரணமாக, பனிப்பாறைகளில் இருக்கும் தண்ணீர் இருப்பு அழிவதால் மனித இனத்தின் எதிர்கால நாட்கள் குறையலாம்.

சுமார் 60,000-90,000 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமி குளிர்ச்சியான கட்டத்தில் நுழைந்ததாகக் கூறப்படும்போது, ​​அலைகளில் விகிதத்தில் பெரும் அளவு குறைந்ததாக வால்தம் குறிப்பிடுகிறார்.

இருப்பினும், பாதிப்பைக் கணிப்பது கடினம், ஏனெனில் பனிக்கட்டிகளின் எடை அகற்றப்படும்போது நிலப்பரப்புகள் மீண்டும் அதே நிலைக்கு திரும்பி ஈடுசெய்யப்படும்.

பூமியைச் சுற்றியுள்ள நிலவின் நீள்வட்டப் பாதை இதைப் பெரிய அளவில் தீர்மானிக்கும் என்றாலும், தூரம் ஒவ்வொரு 29 நாட்களுக்கும் 43,000 கி.மீ. மாறுபடும். கோட்பாட்டளவில், நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்துடன் நிலவுக்குப் பறக்கும் அடுத்த தலைமுறை விண்வெளி வீரர்கள் தாங்கள் பார்த்ததைச் சொல்ல முடியும். 60 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் அப்போலோ திட்டத்தின் முன்னோடிகளை விட பூமி வெகு தொலைவில் உள்ளது என்பதை அவர்கள் சொல்லக்கூடும்.

நம்மைப் பொறுத்தவரை, ஒரு நொடியை 100 கோடிப் பகுதிகளாகப் பிரித்து, அதில் ஒரு பகுதி ஒரு நாளில் சேர்க்கப்பட்டால், அதனால் ஏற்படும் நீண்டகால மாற்றத்தைக் கவனிக்கும் அளவு நமது வாழ்நாள் நீளமானதல்ல.