Monday, February 20, 2017

விருதாசம்பட்டியில் பாலமுருகன் கலைக்கல்லூரியின் பெரியார் பல்கலைக் கழகத்தின் தேசிய சேவைத் திட்ட முகாமில் கவிஞர் தணிகை

விருதாசம்பட்டியில் பாலமுருகன் கலைக்கல்லூரியின் பெரியார் பல்கலைக் கழகத்தின் தேசிய சேவைத் திட்ட முகாமில் கவிஞர் தணிகை

Image result for balamurugan arts and science college


11.02.17 முதல் 16.02.17 வரை சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்தில் விருதாசம்பட்டி கிராமத்தில் பாலமுருகன் கலைக்கல்லூரியின் தேசிய சேவைத் திட்ட முகாம் நடைபெற்றது அதில் 12.02.17 ஞாயிற்றுக் கிழமை சமுதாய மேம்பாட்டில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன்.

55 மாணவர்களுக்காக சுமார் 90 நிமிட நேரம் உரை வீச்சு செய்தேன். அன்று உடல் நிலை சரியில்லாதபோதும் இளைஞர்களை சந்திப்பதில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தேன்.

முனைவர் சரவணன் ஒருங்கிணைப்பாளராக இருந்து இந்த முகாமை நடத்திய காரணத்தால் அழைப்பிற்கிணங்க நானும் சம்மதித்து முகாமில் கலந்து கொள்ள வேஎண்டியதாயிற்று.

விருதாசம்பட்டி அரசினர் ஊராட்சி ஒன்றிய‌ நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் சாத்தப்பாடியில் இருக்கும் பாலமுருகன் கலை அறிவியல் கல்லூரி சார்பாக நடைபெற்ற இந்த விழாவில் முக்கிய பணிகளாக:

மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
இலவச கண் பரிசோதனை முகாம்
கோவில் வளாகம் தூய்மை செய்தல்
சாலை பராமரிப்பு, சாலை விதிகளைக் கடைப் பிடித்தல்
மரம் நடு விழா மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு
சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு
பெண் கல்வி, இளவயது திருமணத் தடுப்பின் அவசியம்

மின்னணு பணப் பரிவர்த்தனை(இது பற்றி நான் ஏதும் பேசுமளவு இன்னும் தெளிவுக்கு வரவில்லை எனச் சொல்லி விட்டேன்.

நிறைய முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கிடையே எனக்கு வசப்பட்ட அந்த ஞாயிறு அன்று நான் தனி ஆவர்த்தனம்.

பேச்சை 4 பகுதிகளாக்கிக் கொண்டேன். 1. முன் சொன்ன தலைப்புகளை ஒட்டி 2. எனது அறிமுகம், 3. சமூக மேம்பாட்டில் இளைஞர்களின் பங்கு. 4. பின்னோட்டம்.

ஓய்வு நேரத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்வோரே எதிர்காலத்தில் மிகச் சிறந்த வாழ்க்கையைப் பெறமுடியும், இந்த இளமை எவ்வளவு சீக்கிரம் ஓடி மறையப் போகிறது அதன் முக்கியத்துவம், சாதனை, குறிக்கோள், வீரிய சிந்தனை,விடாமுயற்சி என்ற நிறைய மேற்கோள்களுடன் சலிக்காமல் ஆர்வம் மிளிர இட்டு வழங்கினேன்.

நிறைய எடுத்துக்காட்டும் முன் மாதிரி மனிதர்களை வாழ்க்கையில் முன்னேற எடுத்துக் கொள்ளுங்கள் என்றும், நீங்கள் நினைத்தால் எதையும் செய்யலாம், அஸ்ஸாமில் அஸ்ஸாம் கான பரிஷத் 10 ஆண்டு ஆண்டது போல நீங்களும் அதை விட அதிகமாக ஆட்சி புரிந்து மக்களுக்கு நன்மை புரியலாம் என்றும்

இன்றைய மனிதர்கள் சாதி, மதம், இனம், மொழி ஆன்மீகம் என வெவேறு அடையாளங்களுடன் ஒருங்கிணையாமல் பிரித்து வாழ பிரிந்து வாழ வைக்கப்பட்டிருக்கிறோம்,

அதில் நமது பங்கு என்ன ? எப்படி நமது சேவையை மக்களுக்கானதாக ஆற்ற முடியும் அதில் முன் வரும் சவால்கள், எதிர்ப்புகள் எப்படி கையாள வேண்டும் என்பதற்கான எனது அனுபவங்களை எல்லாம் நல்ல வன்மையான பேச்சில் விதைத்தேன். சூட்டோடு சூடாக இதைப் பதியாமல் இப்போதுதா பதிவதால் சற்று ருசி எனக்கு குறைந்திருந்த போதிலும் பதிவதை விட்டு விட்டால் இதுவும் காணமல் போகும், எதுவும் காணாமல் போகும் என்பதற்காகவே இந்தப் பதிவு.

Image result for periyar university

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


1 comment: