Wednesday, November 1, 2017

முறையான நடைப்பயிற்சி என்பது: கவிஞர் தணிகை.

முறையான நடைப்பயிற்சி என்பது: கவிஞர் தணிகை.

Image result for good walking

நீங்கள் காலை அல்லது மாலை நடைப்பயிற்சி செய்யலாம் அது உங்கள் கால நேர வசதியைப் பொறுத்தது. அதை எவருமே குறை சொல்ல வழியில்லை.

ஆனால் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் முன்  அடி வயிறில் அல்லது மலக்குடலில் மலம் தங்கி இருக்கக் கூடாது. அதைக் கழித்துவிட்டுத்தான் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதுதான் உடலுக்கு நல்லது.

அல்லாத நடைப்பயிற்சி அங்கு செல்லும் காற்றை அசுத்தபடுத்தி அதை உடலெங்கும் விரவ விட்டு கெடுதல் விளைவித்து விடும்.

மேலும் குளித்து விட்டு செல்வது சிறந்தது. அதாவது நடைப்பயிற்சிக்கும் முன் ஒரு முறை குளித்து விட்டு நல்ல மென்மையான துண்டால் கீழ் பாதத்திலிருந்து மேல் நோக்கிய உடலை நன்கு துவட்டிக் கொள்ள வேண்டும்.

ஏன் எனில் உடலின் வியர்வைத் துவாரங்கள் மேல் நோக்கிய நிலையில் இருப்பதால் கீழ் நோக்கி துடைத்தால், சருமத்தில் ஏதாவது துகள்கள் இருப்பின் அது வியர்வைத் துவாரத்தை சென்று அடைத்துக் கொள்ளும் அதன் பின் வியர்வை வெளிப்படுவதில் அது தடையை ஏற்படுத்தி விடும் எனவேதான் கீழ் இருந்து மேல் நோக்கி துடைத்து வியர்வைத் துவாரத்தை நன்கு திறந்து கொள்ளச் செயல்படும் நோக்கம் அது. அதனால் நடைப்பயிற்சியின் போது நன்கு வியர்வை வெளிவர அந்தச் செயல் தடை ஏற்படுத்துவதற்கு மாறாக துணைபுரியும்.

நன்கு வியர்வை வெளியேறிய பின் மறுபடியும் நடைப்பயிற்சி முடிந்த பின் இருப்பிடம் வந்து சேர்ந்ததும், மறு முறை குளித்து விட வேண்டும். நீர்க்குளியல் கணக்குப்படி பார்த்தால் 3 முறை ஆகிவிடும் ஒரு நாளைக்குள்.
நடைப்பயிற்சிக்கு முன்னும் பின்னும் எடுக்கும் குளியல் உடல் கழுவி விடுதல் போல குறைந்த நீரால் கூட இருந்தாலும் போதும்.

அடுத்து இறுக்கமான ஆடை ஏதும் அணியாமல் நன்கு தளர்வான ஆடையும் , வியர்வை வெளியேற்றும் பருத்தி. பஞ்சாலான ஆடையும்,  பனியன் போன்றவையும் நல்லது.
நல்ல காலணிகள் இருப்பதும் அது பாதத்தை மூடி இருப்பதும் நல்லது . இருளில் இல்லாமல் நல்ல வெளிச்சத்தில் போக்குவரத்து வழிகளில் வாகனம் செல்லும் பாதைகளில் இல்லாமல் பாம்பு, பல்லி, தேள், போன்ற பூச்சி இனங்களை நாம் அழிக்காமல் அதன் மேல் கால் வைக்காமலும் அவை நம் மீது ஊறி ஏறாத பாதைகளாய் இருப்பது சிறந்தது.

Image result for good walking
திறந்த வெளியில், கிராமப்புறப் பகுதியில் விண்ணைப் பார்த்தபடி, இருபுறமும் வயல் வரப்பு, பச்சைத் தாவரங்கள் பார்த்தபடி நடப்பது மிகவும் நல்லது

புழுதி மண் மேல் நடக்கலாம்
புல் வெளியில் நடக்கலாம்
மணல் பதிய நடக்கலாம்.

இந்த மூன்று வகையான நடையுமே காலுக்கு நல்லது.

பலர் சேர்ந்தபடி பேசிக் கொண்டே செல்வதை விட அமைதியாக மௌனமாக செல்வதும் நாய் போன்ற செல்லப்பிராணிகளை பிடித்துக் கொண்டே அழைத்துச் செல்வதை விட தனியாக செல்வதுமே சிறந்தது.

Related image

ஆரம்பத்தில் உங்களால் முடிந்த தூரம் வரை செல்லுங்கள், அதன் பின் உங்கள் சக்திக்கேற்ப உங்களுக்கு அது பயிற்சியாய் உடலுக்குத் தெரியும்வரை உடல் கேட்கும் வரை அதிகப்படுத்தி நிலை கொள்ளலாம். எனக்கு அளவு 40+ 40 நிமிடம் அதாவது 4 கி.மீ + 4 கி.மீ சரியாக இருக்கிறது

முறையாக இந்தப் பயிற்சியில் ஈடுபடுவார்க்கு நடைப்பயிற்சிக்கு முன் இருந்த உடல் இறுக்கத்துக்கும் முடியும் போது ஏற்பட்டுள்ள தளர்வுக்கும் ஒரு விடுதலை அடைந்தது போன்ற உணர்வை நன்றாக உணரமுடியும்.

முன்னொரு காலத்தில் அதாவது 1990களில் ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் நான் படித்தவையும் இந்தப் பதிவின் நினைவுக்கு உதவி இருக்கிறது. வியர்வை துண்டால் துடைத்தல் போன்றவையும் உடலைக் கழுவுதல் போன்றவையும்.

மற்றவை எனது அனுபவத்தலில் நான் கற்றுணர்ந்து உங்களுக்கு சொல்வது நீங்களும் இதை எல்லாம் உங்களுக்கு உகந்த வகையில் பயன்படுத்திப் பார்த்துவிட்டு கடைப்பிடிக்கவும்.

விடியற்காலை நடைப்பய்ற்சி செல்வார்க்கு அதிகம் ஆக்சிஜன் அதாவது ஓசோன் (ஆக்சிஜன் 3) கிடைக்கிறது  என்ற ஒரு நம்பிக்கை உண்டு. ஆனால் மாசுபடலம் நிரம்பிய உலகில் இனி அதை எல்லாம் நம்புவது மிகவும் கடினம்

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

7 comments:

  1. பயனுள்ள பதிவு. நடை தான் உடல் நலத்திற்கு மிகவும் சிறந்தது என்கிறார்கள்.
    //பலர் சேர்ந்தபடி பேசிக் கொண்டே செல்வதை விட அமைதியாக மௌனமாக செல்வதும் நாய் போன்ற செல்லப்பிராணிகளை பிடித்துக் கொண்டே அழைத்துச் செல்வதை விட தனியாக செல்வதுமே சிறந்தது.//
    சரி.

    ReplyDelete
  2. முறையான நடைப்பயிற்சி என்பது: கவிஞர் தணிகை. - அருமையான பயனுள்ள பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Tanigai Ezhilan Maniam

    ReplyDelete
    Replies
    1. thanks for your feedback and sharing of this post sir. vanakkam.

      Delete
  3. சிலவற்றை சேர்த்து இருக்கலாம்.

    1. கைவீசி நடக்க வேண்டும்.

    2. வேகமாக நடக்க வேண்டும்.

    3. கைகள் முன்னும் பின்னும் சென்று கொண்டே இருக்க வேண்டும்.

    4. அரை மணி நேரம் கணக்கு வைத்துக் கொண்டு அடுத்த முறை குறிப்பிட்ட நேரத்தில் அதை கடந்து வரும் அளவுக்கு வர வேண்டும்.

    5. போக்குவரத்து நெரிசலில் கூடாது,

    ReplyDelete
    Replies
    1. ok your participation itself enhance the text. thanks vanakka. keep contact Jothiji Tiruppur.

      Delete