Thursday, March 2, 2017

குடி நீர்: கவிஞர் தணிகை

குடி நீர்: கவிஞர் தணிகை
Image result for no water in mettur dam



16 கன அடி நீர் வருகிறது. 500 கன அடி நீர் குடி நீர்த்தேவைகளுக்காக வெளியே அனுப்பப் படுகிறது. மேட்டூர் அணையில் உள்ள நீரின் கொள்ளளவு 30 அடியாக இருக்கிறது. இந்நிலையில் மாதேஸ்வரன் மலைப் பகுதியில் கசிந்து வரும் காவிரி நீரை தமிழ் மண்ணுக்கு வரவிடாமல் மணல் மூட்டைகள் போடப்பட்டுள்ளதாக செய்திகள்.

ஜல்லிக்காட்டுக்காக போராடி வெற்றி கண்டீர்கள்

ஹைட்ரோ கார்பன் நெடுவாசலில் போராடி வெற்றி காண்கிறீர்கள்

மிகவும் அபாயகரமாக அச்சுறுத்தி வரும் குடி நீர்த் தட்டுப்பாட்டை போக்கக் கோரி தமிழகத்துக்கு நீர் வேண்டி மத்திய மோடி அரசை வலியுறுத்தி ஒரு போராட்டம் அவசியம் தேவைதான் இல்லையே தமிழ் மண் மலடாகி விடும் தூரம் அதிக நாள் தொலைவில் இல்லை.

Image result for no water in mettur dam

வெள்ளம் வந்தால் போராடுகிறீர் ஒருங்கிணைந்து, புயல் வந்தால் போராடுகிறீர் யாவற்றுக்கும் நன்றி

ஆனால் வடக்கே கற்பழிப்பு நிகழும்போது அவர்கள் போராடி எழுகிறார்கள்.
நம்மிடையே அந்த நெறி இன்னும் இல்லை

இன்று காவிரி கற்பழிக்கப் பட்டிருக்கிறாள் இன்னும் குடி நீர் இல்லாது இலட்சக்கணக்கில் மக்கள் சாகும்போதுதான் விழித்தெழுவீர்களா?

குற்றவாளிகளும், குற்றவாளி அரசும் அதைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை

இளைஞர்களே, கல்லூரி மாணவர்களே, பொது மக்களே, தாய்க்குலமே, டாஸ்மாக் கடையை உடைத்து நாம் குடி நீர் தாகம் தீர்த்துக் கொள்ள முடியுமா?

உடனே வீறு கொண்டெழுங்கள் விடை காண....இல்லையேல் நிலை மீறிப் போய்விடும், நீரில்லா மரணங்கள் நிகழும் நாள் வெகு தொலைவில் இல்லை

இயற்கை அருள் செய்யுமா? நமது கிரிக்கெட் அணிக்கு நன்மை செய்வது போல...தமிழகத்துக்கும் அருள் செய்யுமா? என்ன இருந்தாலும் இயறகையை நாளும் நான் வேண்டிக் கொண்டிருக்கிறேன். நீங்களும் வேண்டி பிரார்த்தனை செய்யலாம்.
Image result for no water in mettur dam


அது ஒரு பக்கம் இருந்தாலும் நாட்டில் இந்திய நாட்டில் குடிநீராவது சம வாய்ப்புடன் அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்க அரசை வளைக்க உஙகள் குரலை உயர்த்தி போராட வேண்டியது அவசியம்தான் தோழர்களே...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

1 comment: