Thursday, March 31, 2016

தமிழ் இந்துவே நீயே இப்படிச் செய்யலாமா? ஊடகங்களின் பொறுப்பற்ற போக்கு: கவிஞர் தணிகை.

தமிழ் இந்துவே நீயே இப்படிச் செய்யலாமா? ஊடகங்களின் பொறுப்பற்ற போக்கு: கவிஞர் தணிகை.




ஒரே நாள் நாளிதழில் 31.03.16 தமிழ் இந்துவில் ஜெ. சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: அன்பழகன் தரப்பு வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு என்றும் அடுத்து இன்னொரு பக்கத்தில் , ஜெயலலிதா தரப்பு ஆட்சேபணையை நிரா‍‍கரித்து, திமுக பொதுச்செயலாள‌ர் அன்பழகன் தரப்பு சுருக்கமாக இறுதிவாதத்தை முன் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது என்றும் வெளியிட்டுள்ளது.முரண்பாடாக இருக்கிறது.

மாறாக ஆரம்பம் முதல் மறுபடியும் உங்கள் தரப்பை தெரிவிக்க வேண்டியதில்லை புதிதாக ஏதாவது கருத்துகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றுஅன்பழகன் தரப்புக்கு நீதிபதிகள் சொன்னதை எடுப்பாக போட்டிருந்தால் போதுமே

ஒரு செய்தி காலை 9.33க்கு மற்றொரு செய்தி 12.32இந்திய நேரப்படி வெளியிடப்பட்டு 2.47(14.47) பி.எம் மணிக்கு தகவல் உறுதி செய்யப்பட்டது. மேலும் இதை எழுதிய  வினோத் தம் கருத்தாக‌ கருதப்படுகிறது என:ஜெயலலிதாவுக்கு சாதகம்:

இதற்கிடையில், சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் தரப்பு வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது, வழக்கில் ஜெயலலிதாவுக்கு சாதகமான போக்கே என்று கருதப்படுகிறது.என்றும் தமது கருத்தாக வெளிப்படுத்துகிறார்.

கிரிக்கெட் வர்ணனையின் போது நடப்பதை அப்படியே சொல்லாமல் இவர்களாக சேர்த்து இந்த நேரத்தில் இன்னும் சில விக்கெட் விழ வேண்டியது அவசியம் என வீணாய்ப் போன வர்ணனையாளர்கள் சேர்த்து சொல்வது போல...

தமிழ் இந்து ஆசிரியர் அசோகன் மிக நல்ல ஆசிரியராக காட்சியளிக்கிறார். தங்கர் பச்சான் போன்றோர் தமிழ் இந்துவை புகழ்ந்து தள்ளுகிறார்கள். கேட்டால் இது ஆசிரியர் கருத்தல்ல, எழுதிய கட்டுரையாளர் கருத்து என சொல்லி விட்டுப் போவது சுலபம்.

பொதுவாகவே நாளாக காலம் செல்லச் செல்ல இந்த ஊடகவியலாளர்கள் நெறிகெட்டுப் போவதை சில பதிவுகள் அப்பட்டமாக காண்பிக்கின்றன.ஹர்திக் பாண்டியா ஒரு மாடல் அழகியை துரத்துகிறார் என்று போடுகிறார்கள் . செய்தி பார்த்தால் இருவரும் காதலர்கள் ஒன்று சேர்ந்து பொது இடங்களுக்கு செல்கிறார்களாம் அதன் மொழிதான் இது...

அன்பழகன் வாதத்தை எழுதி முன் வையுங்கள் என சொல்லியதை எப்படி எல்லாம் திருப்புகிறார்கள் பாருங்கள்.



 ஒரு கேள்விக்குறியை, ஒரு ஆச்சரியத்தை, ஒரு வியப்பை, ஒரு திடீர் செய்தியை கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்க எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என முயற்சி செய்து வருவது கேலிக்குரியதாகிவிட்ட ஊடகங்களின் போக்கு மாற்றப்பட வேண்டியது.

ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சில ஊடகங்கள் யுவராஜ் விஜய்காந்த் மறைவிலிருந்து யாரோலோ இயக்கப்படுகிறார் என்று சொன்னதையும் சிறுதாவூர் பங்களாவுக்கு 10 லாரிகள் சென்றதையும் மறு நாளில் அவை காணாமல் போனதாகவும் செய்திகளைச் சொல்லி அவை தேர்தல் ஆணையரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதும் முக நூல் போன்ற ஊடகங்கள் தமிழ் முரசு என்னும் பத்திரிகை செய்தியாக மன்னார்குடி பள்ளியில் பெரும் எண்ணிக்கையிலான இந்திய பண நோட்டுக்கட்டுகள் எல்லாம் 500, 1000 இருந்ததை படங்களுடன் வெளியிட்டிருந்ததையும் பாராட்ட வேண்டும்.



தமிழகத் தேர்தல் தலைமை அலுவலர் ராஜேஷ் லக்கானி சொல்வது போல உண்மையிலேயே முதல்வர் தொடர்புடைய பங்களாக்களை சோதித்து அறிந்து செய்திகளை நாடெங்கும் கொண்டுவருவாரா என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.



ஊடகம் சரியாக இருந்தால் இருந்திருந்தால் இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல், மது போன்ற பெரும்பிரச்சனைகளுக்கு முடிவு கட்டப்பட்டு குடிநீர், மருத்துவம், போன்ற தேவையான வசதிகள் நாடெங்கும் கிடைத்திருக்கும். ஊடகம் அரசுடனும், அரசின் கைப்பாவைகளான அரசுஅலுவலர்களுடன் கூட்டு சதியில் பெரும்பாலும் அமுங்கிக் கிடக்கிறது என்பதும் உண்மைதான்.

மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.





Wednesday, March 30, 2016

மதமல்ல தீவிர வாதம் நெறியல்ல வெறிதான்:ஸ்பீட் பிரேக் 3.கவிஞர் தணிகை

மதமல்ல தீவிர வாதம் நெறியல்ல வெறிதான்:ஸ்பீட் பிரேக் 3.கவிஞர் தணிகை



ஈஸ்டர் கிறிஸ்து உயிரித்தெழுதல் நாளை லாகூரில் பூங்காவில் கொண்டாடிய கிறித்தவ மக்கள் மீது பாகிஸ்தான் தாலிபான் மனித வெடிகுண்டு இன வெறித் தாக்குதல் 72 பேரை பலி கொண்டு 250 பேரை படுகாயமடையச் செய்த சம்பவம் ஒரு உலகின் மதவெறி சோகம். இறந்தது பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும்.மார்க்ஸ் சொன்ன அபின் என்ற மத போதையை விட இது எந்த கணக்கிலுமே சேராத காட்டுமிராண்டித்தனம். வார்த்தையில் வடிக்க முடியாத கொடூரம். சோகம்.

இதன் பொறுப்பை ஏற்ற பாகிஸ்தான் தாலிபான் குழு இதுமுடிவல்ல ஆரம்பம்தான் இனி இது நிறைய தொடரும் என பாகிஸ்தான் அரசை மிரட்டியுள்ளது.

பிறர் மகிழ்வில் நாமும் சேர்ந்து மகிழ்வது ஒரு விதம், பிறர் மகிழ நாம் செயல்படுவது ஒரு விதம், பிறர் மகிழ்வதை பார்ப்பதில் சுகம் ஒருவிதம் இவை எல்லாவற்றையும் விட்டு விட்டு பிறர் துன்பத்தில் எப்படி இந்த குரூர மனங்கள் மகிழ்கின்றன? உண்மையிலேயே அவை மகிழ முடியுமா?

அதுவும் ஒரு திருநாளில் ஒரு விழாவில் இப்படி இனத் துவேசத்துடன் ஆவலுடன் இது போன்ற சம்பவத்துக்காக காத்திருந்ததாக சொல்லி இருப்பது கொடுமையிலும் கொடுமை.



இந்த தீவிரவாதத்துக்கு ஒரு முடிவே இல்லையா? இந்த தீவிரவாதிகளை அடக்க, அழிக்க ஒழிக்கவே உலகுக்கு வழியில்லையா? சொல்லி விட்டால் ஒரு சில நண்பர்கள் கச்சை கட்டிக் கொண்டு கிறித்தவர்கள் ஜப்பானில் குண்டு போடவில்லையா? கிறித்தவ அமெரிக்கர், ஆங்கிலேயர் உலகெங்கும் கொடுங்கோல் செய்யவில்லையா? முகமதியரைத் தாக்கவில்லையா? இஸ்ரேல் பாலஸ்தீனியரை படுகொலை செய்யவில்லையா? என்றெல்லாம் வக்காலத்து வாங்க வந்து விடுகிறார்கள்.அவ்வப்போது நடக்கும் சம்பவத்துக்கு இது போன்ற முகமதிய இயக்கங்கள் காரணமாகி விடுகின்றனவே அதை மட்டும் தண்டிக்க திருத்த முடியவில்லை எனிலும் நாம் கண்டிக்க, நமது கருத்தை சொல்லவும் ஒரு நேர்மை, தூய்மை, துணிவு வேண்டுமே. அதில் நீங்கள் உங்களைப் போன்றோர் எப்படி தவறு காண்கிறீர் என்பதுதான் புரியவே இல்லை.

மதங்களை விமர்சிப்பது வேறு. உயிர்களை பறிப்பது வேறு. இப்படிச் செய்ய எந்த மனிதமும், எந்த உலக விதியுமே இவர்களை அனுமதிக்காது. இது ஒருமன நிலை கடந்த சைக்கோத்தனம். இந்த மனநோயாளிகள் உளவியல் ரீதியாக குணப்படுத்த வேண்டியவர்கள்.




வரலாறை காலத்தை திருப்ப முடியாது. என்றோ நடந்த நிகழ்வுகளுக்காக என்றுமே அப்பாவிகள் உயிர் போவதும் உடல் சிதைப்பதும் தொடர்ந்திடக் கூடாது. இதெல்லாம் மனிதமா? இப்படி உலகில் நடக்கலாமா?

ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவிலிருந்து 10 லாரிகள் இரவோடிரவாக காணாமல் போனாலும், வைகோ தமிழக அரசியல் என ஒரு புறம் பேசபட்டு தேர்தல் நாள் நெருங்கி வந்தாலும், மல்லையா தமது கடனில் 4000 கோடியை முதல் தவணையாக திருப்பிக் கொடுத்து விடுகிறேன் எனச் சொன்னாலும் செய்திகள் எவ்வளவு உருண்டோடினாலும்,தேமுதிக விஜய்காந்த் மச்சான் சுதிஷ் வைகோவுக்கு துணை முதல்வர், கம்யூனிஸ்ட்களுக்கு உள்ளாட்சி, நிதி, திருமாவுக்கு கல்வி மந்திரி பதவிகள் விஜய்காந்த் முதல்வரானால் உண்டு என்றாலும் சில நாட்களாக இந்த உயிர்கள்  பாகிஸ்தானி லாகூர் பூங்காவில் பூக்களைப் போல பறிக்கப்பட்டது இரத்த வெள்ளத்தில் ஆழ்த்தப்பட்டது மனதிலிருந்து அகலவில்லை.



இதை எல்லாம் எழுதி என்ன ஆகப் போகிறது? ஏற்கெனவே எங்களுக்குத் தெரிந்த செய்தியை எழுதி என்ன ஆகப் போகிறது? என்று எனது ஒரு நண்பர் கேட்பார் வழக்கமாக...அவருக்கு புதிதாக செய்திகளை உருவாக்க முடியாது. நடப்பதை தெரியப்படுத்துவது செய்தி ஆகி விடுகிறது. ஆனால் இது போன்ற செய்திகளில் நமதுகருத்துகளை பதியவைப்பது நாம் யார் எனக் காட்டுகிறது.

நாம் பிறரை மகிழவைப்பதில் மகிழும் இனம். பிறரை மகிழ வைப்பதையே இலட்சியமாக கொண்டு இருக்கும் இனம். எனவே மதத்தின் பேரால் இப்படி ஒரு கொடூரம் உலகில் நடப்பதை பதிவிடுவது எமதுகருத்தை தெரிவிப்பது ஒரு வடிகால். நாம் எங்கிருக்கிறோம் எனக் காட்டி நமது உயிர்ப்பை உறுதி செய்துகொள்வது.

எந்த மதமானாலும் எதன் அடிப்படையின் மேல் அது அமைந்திருந்தாலும் ஒரு சமரசப் போக்கும் மனிதாபிமனமே எல்லா மதங்களையும் விட உயர்ந்த மதம் என்ற மனோபாவம் இருந்தால் மட்டுமே இந்த உயிர்ப்பலிகள் தடுக்கப்படும். அதுவரை ...என்ன செய்வது துக்கப்படுவதையன்றி...


கொஞ்சம் கீதை கொஞ்சம் பைபிள் கொஞ்சம் குரான்:- கவிஞர் தணிகை.
கொஞ்சம் கீதை,கொஞ்சம் பைபிள்,கொஞ்சம் குரான் என்று  மூன்று பிரதானமான மதங்களின் சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு.இதை நேர்மறையாக பார்ப்பதும், எதிர்மறையாக பார்ப்பதும் அவரவர் அறிதல் புரிதல்,தெளிதல் உணர்தல் அகம் புறம் சார்ந்தது.



கீதை:

எது தொடக்கத்தில் விஷத்தை ஒத்ததும் விளைவில் அமிர்தம் ஒப்ப மாறுவதோ,அந்த இன்பமே சாத்விகம் ஆகும். அது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.

 விஷியங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜசம் எனப்படும்.

தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய்,உறக்கத்தினின்றும் சோம்பரினின்றும் தவறுதலின்றும் பிறக்கும் இன்பம் தாமசம் என்று கருதப்படும்.

இயற்கையில் தோன்றும் இம் மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலும் இல்லை. வானுலகத்திலும்  இல்லை.

குரான்:

பாகம் 10.ஸுரத்துத் தவ்பா அத்தியாயம்:9 ருகூஃ 10.

77. அல்லாஹ்வுக்கு - அவனுக்கு வாக்களித்ததில் - அவர்கள்  மாறு செய்த காரணத்தினாலும், அவர்கள் பொய்யுரைத்துக் கொண்டிருந்த காரணத்தாலும் ; அவனை அவர்கள் சந்திக்கின்ற (கியாமத்து) நாள் வரை அவர்களுடைய நெஞ்சங்களில் நிபாக்கை (நயவஞ்சகத் தன்மையை)அவர்களுக்கு இறுதி முடிவாக ஆக்கிவிட்டான்.

78. நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய இரகசியத்தையும், அவர்களின் இரகசிய ஆலோசனையையும் அறிவான் என்பதையும்,நிச்சயமாக அல்லாஹ் மறைவானவற்றை எல்லாம் மிக்க அறிந்தவன் என்பதையும் அவர்கள் அறியவில்லயா?

79. (ம்முனாபிக்கான)வர்கள் எத்தகையோரென்றால்,முஃமின்களில் தாரளமாக தருமங்கள் செய்கிறவர்களையும்,இன்னும் தங்களுடைய உழைப்பைத் தவிர (வேறு எதனையும் தானம் செய்வதற்குக்) காணமாட்டார்களே (அதாவது இயலாது இருக்கின்றார்களே)அத்தகைய (எளிய)வர்களையும் குறைகூறி,அவர்களைப் பரிகாசம் செய்கின்றனர்.அல்லாஹ் அவர்களைப் பரிகசிக்கிறான் - மேலும் ,நோவினைத் தரும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.

பைபிள்:

லூக்கா 8.இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதல்
மத்9:18 - 26; மாற் 5: 21 - 43

40. இயேசு திரும்பி வந்தபோது (கெரசேனர் பகுதியில் இருந்து கலிலேயாவுக்கு) அங்கே  திரண்டு காத்திருந்த மக்கள் அவரை வரவேற்றனர்.41.அப்போது தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் இயேசுவிடம் வந்தார். அவர் பெயர் யாயிர். அவர் இயேசுவின் காலில் விழுந்து  தம்முடைய  வீட்டிற்கு வருமாறு வேண்டினார். 42.ஏனெனில் பன்னிரண்டு வயதுடைய அவருடைய ஒரே மகள் சாகும் தருவாயில் இருந்தாள் இயேசு அங்குச் செல்லும் வழியில் மக்கள் கூட்டம் அவரை நெருக்கிக்  கொண்டிருந்தது. 43. பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் தம் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும் எவராலும் அவரைக் குணமாக்க இயலவில்லை.

44. அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்உடனே அவரது இரத்தப்போக்கு நின்று போயிற்று...45.என்னைத் தொட்டவர் யார்? என்று இயேசு கேட்டார். அனைவரும் மறுத்தனர்., பேதுரு,ஆண்டவரே,மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறதே என்றார்...46. அதற்கு இயேசு "யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்;என்னிடம் இருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன்" என்றார்.47. அப்பெண் தாம் இனியும் மறைந்திருக்க முடியாதென்று கண்டு நடுங்கிக் கொண்டே வந்து  அவர்முன் விழுந்து,தாம் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தமது பிணி நீங்கியதையும் பற்றி மக்கள் அனவரின் முன்னிலையிலும் அறிவித்தார்..  48. இயேசு அவரிடம் "மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ" என்றார்.

கவிஞர் தணிகை

மறுபடியும் பூக்கும் வரை.


Tuesday, March 29, 2016

சொல்லத் தோணுது தங்கர் பச்சான்:கவிஞர் தணிகை

சொல்லத் தோணுது தங்கர் பச்சான்:கவிஞர் தணிகை
சொல்லத் தோணுது நூல் வெளியீட்டு விழாவின் 7 காணொளிகளையும் கண்டு வியந்தேன். முனைவர் வெங்கடாஜலம், முன்னால் நீதிபதி சந்துரு,பழனி பெரியசாமி,இந்து அசோகன்,சகாயம் ஐ.ஏ.எஸ் மற்றும் தங்கர் பச்சான் ஆகியோரின் உரை ஒரு அரிய விருந்து.

மேட்டூர் குறிஞ்சி வந்திருந்தபோது நாம் பார்க்க முடியவில்லையே என்ற குறையை இந்த கணினி இணைய வசதிகள் போக்கி விட்டன.இந்த புத்தகத்தின் இடம் பெற்ற பல கட்டுரைகளுக்கு இந்து நாளிதழில் வந்த போதே எனது கருத்துப் பின்னோட்டங்களை இட்டு வந்துள்ளேன்.

ஒத்த கருத்துடன் உங்கள் குழுவினர் அனைவருடனும் அடியேனும் ஒன்று படுவதை உணர முடிகிறது. அதன் சான்றாக நேற்று எமது பதிவில் இடம் பெற்ற தராதரமில்லாத மக்கள்,கட்சி, அரசியல் நாடு நிர்வாகம் என்ற பதிவையும் உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.அது உங்கள் நிகழ்வை பார்க்கும் முன் எழுதிய பதிவு.எனவே நாட்டு அக்கறை உள்ளோர் அனைவருமே ஒரே அலை நீளத்தில் சிந்திக்கிறோம் என்று புரிகிறது. எல்லாரிடமும் அந்த தாக்கம் இருக்கிறது. ஆனால் இணைதல் வேண்டும்.

பார்க்காதார் இருந்தால் இந்த காணொளிகளை காணுங்கள் அவசியம் இந்த நூலையும் வாங்கி படியுங்கள். அது தமிழ் மண்ணுக்கு நல்லது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை:- ஒரு உலகளாவிய பார்வை- கவிஞர் தணிகை

சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை:- ஒரு உலகளாவிய பார்வை- கவிஞர் தணிகை



காடும் மலையும் குறையக் குறைய நாடும் நகரும் பெருகப் பெருக
பனிப்படலம் உருக உருக கடல் சீற்றங்கள் உயர உயர
ஓசோன் மண்டலம் கிழியக் கிழிய இரசாயன மழை பொழியப் பொழிய
பூமிப்பந்து அதிர அதிர  உயிரினங்கள் உதிர உதிர காற்றும் நீரும் கலங்க
சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை தனி மனித வேட்கையால் கொண்டாடும் சேர்க்கை..

எல்லைக் கோடுகளின் வெறி ஏற ஏற கொள்கைக் கோடுகள் கேடுகள் மாற  மாற
வேளாண் நிலங்கள் தரிசாய்ப் போக மனிதக் கூடாக தனிமைப் பரிசாக
கூட்டுக் குடும்பம் என்ற பேச்சே போச்சு, மூச்சுக் காற்றும் விஷமாகி--
தற்கொலை எண்ணிக்கை கூடலாச்சு
ஏரி குளங்கள் நீர் நிலைகள் காயலாச்சு, காணாமல் போச்சு, சோற்றுக்கும் நீருக்கும் சிக்கலாச்சு
சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை தனி மனித வேட்கையால் கொண்டாடும் சேர்க்கை

மறுபடியும் சாலைகள் போடப் போட, இலஞ்ச ஊழல் கூடக் கூட
இலட்சக்கணக்கான கோடிகள் இலட்சியம் இல்லாத கேடிகளிடம் சேர
அரசியல் என்றாலே முதல் இல்லாத வியாபாரம் என்றாச்சு
காந்தி வழித் தியாகமும் பகத், சுபாஷ் மொழி வீரமும் போச்சு;- அவை
இந்த மண்ணிலா விளைந்தது? என்ற வியப்பு விரியலாச்சு
சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை தனி மனித வேட்கையால் கொண்டாடும் சேர்க்கை.

குற்றவாளிகளே நாட்டை ஆளுகிறார் சட்டமும் நீதியும் மீறுகிறார்
மற்ற மக்களோ கை ஏந்துகிறார் துன்பத் துயருடன் மாளுகிறார்
கையில் காசு, வாயில் கோஷம் கொடுத்தா மொத்தம் ஜெயிக்கிற வாக்கு
சுரண்டல் அடியிலிருந்தும் ஆரம்பம் ஆள்வோர் (மணி)முடியிலிருந்தும் ஆரம்பம் முடிவின்றி
மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி, மக்கள் எவ்வழி மன்னர் அவ்வழி
சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை, தனி மனித வேட்கையால் கொண்டாடும் சேர்க்கை

விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் பூமியில் குற்றுயிராச்சு
விளங்காமல் போன மனிதர்களின் மனமோ குரூரமாச்சு
எண்ணெய்க் கிணறும் ஆய்த வியாபாரமும் முதல் என்றாச்சு
மருந்துப் பொருளும் கலப்படமாக உயிர்விடும் மூச்சு;- எல்லாம்
சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை ,தனி மனித வேட்கையால் கொண்டாடும் சேர்க்கை.

உலகெலாம் குண்டுகள் வெடிக்கத் தயார் நிலையில்
கலகமெலாம் கட்சித் துண்டுகள் ஓர் கறை நிற வழியில் சாதி மதமென
சந்திர செவ்வாய்க்கும் சென்றடைந்தது மனித அறிவு!
பூமியின் கல்,மண்,புல்,பூண்டு, தாவரம், உயிர் யாவும் சுரண்டும் மனிதா
அரசியல் என்ற பேரில் அவற்றையும் சுட்டு விடாதே! விட்டு விடு!
சுரண்டாதே அரசியலால் திண்டாடவிடாதே இயற்கையை!
அளவான தனிமனித வேட்கையோடு வாழு! வாழ விடு!

 மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகையின் மகன்
த.க.ரா.சு.மணியம்
இரண்டு  ஆண்டுகளுக்கும் முன் எழுதிய கவிதை.



பி.கு: ஜெயலலிதா வீட்டுக்கு கன்டெய்னர் மற்றும் லாரிகள் மூலம் 500 ரூ 1000 ரூ கட்டுகள் கொண்டு சென்று சிறுதாவூர் பங்களாவில் நிலவறை செய்யப்பட்டு அமுக்கி வைத்து வருகிறார்கள் என்று வைகோ தேர்தல் ஆணையத்துக்கு சோதனை செய்யச் சொல்லி புகார் தந்த செய்தியை தினமணி வழியே கண்ட நிலையில், நேபாளத்தின்  நிலநடுக்கம் எவரெஸ்ட் சிகரத்தில் ஓட்டைகளையும், விரிசல்களையும் உண்டாக்கி விட்டதாக செய்தி கண்ட நிலையில் இந்த கவிதை எழுதிய தாள் வேறு ஒரு தகவலைத் தேடிக்கொண்டிருக்கும்போது கையில் கிடைத்தது அது உங்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Monday, March 28, 2016

தராதரமில்லா மக்கள்,கட்சிகள்,நிர்வாகம் அரசு,அரசியல்: கவிஞர் தணிகை.

தராதரமில்லா மக்கள்,கட்சிகள்,நிர்வாகம் அரசு,அரசியல்: கவிஞர் தணிகை.




வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்க்கு உள்ளத்தனையதாம் உயர்வு என்ற குறள் நெறிக்கேற்ப மக்களின் தரத்தைப் பொறுத்தே கட்சிகள், அரசியல், அரசுகள்,தேர்தல், வெற்றிகள் நிர்வாகம் எல்லாம் .ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட‌ கட்சிகளில்,நூற்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் இந்தியாவில் குறிப்பிடும்படியான‌ கட்சிகளாக‌(136),தமிழகத்தில் 76 கட்சிகள் இருந்தாலும் 8 பிரிவில் இவை அடங்க...

தி.மு.க, பா.ம.க,தே.மு.தி.க இவை குடும்பங்களை மையமாக வைத்தவை, அ.இ.அ.தி.மு.க சர்வாதிகார ஒரே சுப்ரீம் மையம், மத்திய மந்திரியால் கூட ஆண்டுக்கணக்காய் சந்திக்க முடியா கடவுள் நிலை என மத்திய மந்திரியே தமிழக முதல்வர் பற்றி பத்திரிகையிலேயே செய்தி தருகிறார்,சி.பி.ஐ,சி.பி.ஐ(எம்)சில மாநிலங்களில் இருந்தும் மறைய ஆரம்பித்து அவ்வப்போது வேர் வெளித் தெரியும் கட்சிகள் ஆனாலும் மிகவும் நலிந்த கட்சிகள் ஏன் வலுப்பெறவில்லை ஆய்வுக்கு அவசியம்




பாரதிய ஜனதா கட்சி மத, காவி வண்ணத்தில் சிக்கிக் கொண்டது, காங்கிரஸ்(கள்) பழம் பெருமை பேசி மக்களிடையே இருக்கும் கொஞ்சம் நஞ்சம் செல்வாக்கையும் இழந்து வருபவை.

இப்படிப் பார்த்தால் எந்தக் கட்சியுமே ஒரு நேர்மையான ஒழுக்கமான தொண்டரை, அல்லது செயல்வீரரை, அல்லது நாட்டுக்கு சேவையாற்ற கட்சி வேண்டும் என நினைக்கும் ஒரு இந்தியரை, தமிழரை ஒரு மனிதரை சாதி மத பேதமற்று வழிகாட்டி நல்ல மனிதரை கவர்பவையாக ஆர்வமூட்டும் நிலையில் இல்லை.



சகாயம், நல்லகண்ணு, போன்ற அரிய‌ மனிதர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் போல பரிமளிக்கவில்லை. இன்று உலகில் உள்ள 50 தலைவர்களில் ஒருவராக ஃபார்ச்சூன் என்னும் ஒரு அமெரிக்க ஆங்கில நாளேட்டால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அர்விந்த்.

தலைவர் என்றால் ஒரு நல்ல குணமாவது வேண்டும் அவரை நாம் பின் தொடர...காமராஜை எடுத்துக்கொண்டால் சுயநலமில்லா எளிமை,அப்பழுக்கற்ற ஊழலின்மை, மக்கள் நலம் ஒன்றே குறிக்கோள்,

அண்ணாவை எடுத்துக்கொண்டால் அறிவுடமை, ஆங்கிலப்பேச்சு வன்மை, இன்னும் முறியடிக்க முடியாத சாதனையான‌ இறுதி யாத்திரையில் கலந்து கொண்ட மனிதர்களின் எண்ணிக்கையில் அண்ணாவின் இறுதி ஊர்வலம் ,இப்படி சொல்லலாம்,




எம்.ஜி.ஆரை எடுத்துக் கொண்டால் அவரின் வள்ளல் தன்மை, சிறுவனாக இருக்கும்போது தன்னை அமர்ந்த சாப்பாட்டு இலையில் இருந்து சாப்பிடவிடாமல் எழ வைத்த மனிதர் பற்றி குரோதம் பாராட்டாமல் சாப்பாட்டுக்காக நேர்ந்த அவமானத்தை மனதில் கொண்டு எல்லாரும் சாப்பிட வேண்டும் என தன்னால் முடிந்த அளவு பசி போக்க நினைத்த மனம்,

இப்படி ஏதாவது ஒரு குணம் அவர்கள் சுயநல வாழ்வையும் மீறி மேல் ஏறி நிற்கும், ஆனால் முன் நாம் சொன்ன கட்சித்தலைவர்கள் யாவரும் ஏதாவது சில நல்ல குணம் இருந்தாலும் சுயநலம்,ஊழல், மது, ஒழுக்கமின்மை  விளம்பரம்.போன்ற குணங்களால் சூழப்பட்டவர்கள்.



எனவேதான் எம் போன்றோர் காந்தி, தெரஸா, அப்துல்கலாம் போன்றவரை மட்டுமே முன் மாதிரிகளாக கொள்ள முடிகிறது அவர்கள் வாழ்வும் திறந்த புத்தகமாகவே இருக்கிறது.
ஆனால் அவர்கள் ஏதும் கட்சி ஆரம்பிக்காமல் சேவையே பிரதானம் என்று வாழ்வை போக்கி விட்டார்கள்.



 ஏன் தீவிர வாதம் எனச் சொல்லப்பட்ட தலைவர்கள், போஸ்,பகத், சட்ட மேதை அம்பேத்கர் போன்றவர்களும் நல்ல தலைவர்களே. பொதுவாக இது போன்ற திருப்பூர் குமரன் போன்ற நாட்டுக்கு இன்னுயிரை ஈந்த தியாகசீலர்களை எல்லாம் சுதந்திரத்திற்கு முன் இந்த நாடு கண்டது. சுதந்திரத்துக்கும்  பின் சொல்லவே வேண்டாம்...

பா.ம.க வை எடுத்துக் கொண்டாலும் மக்கள் அவர்கள் முற்காலத்து மரம் வெட்டி கல் கொண்டு தாக்கிய போராட்டம், பொதுச் சொத்து கலவரம், போன்றவற்றை விழுப்புண்களாக பெற்றிருப்பதாலும்,மக்கள் அடையாளம் மறவாமல் இருக்கிறார்கள்.

 தமது குடும்பத்தில் இருந்து எவர் அரசியலுக்கு வந்து பதவிக்கு வந்தாலும் சாலை நடுவே மரத்தில் கட்டி சவுக்கால் எவரும் வெளுக்கலாம் தன்னை எனச் சொன்ன மருத்துவர் அய்யாவின் வாரிசு இன்று தனிப்பட்ட முறையில் நல்ல திட்டங்களை எல்லாம் குறிப்பிட்டு பேசியபோதும்,வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என்றபோதும், மதுவிலக்கு என்ற போதும் கூட நம்பிக்கையின்றி மக்கள் இருக்கிறார்கள்.அவர்களின் சாதிய நெடியை அவர்கள் விட்டு விட்டதாக சொன்னாலும் அது அவர்களை விடுவதாக இல்லை.

தி.மு.க மு.க, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ,செல்வி, தயாளு அம்மாள், தயாநிதி மாறன் இப்படியே போக... தே.மு.தி.க விஜய்காந்த், பிரேமலதா, சுதீப், இப்படி போக, பாமக மருத்துவர், அவர் மருத்துவர் மகன் இப்படியாக...ஆனால் இவை தான் மக்கள் அதிகம் சேர்ந்த கட்சிகள் ஆளும் கட்சிக்கு அடுத்து...

ஆளும் கட்சியின் வரலாறே தனி அது ஒரு தி.மு.கவின் கிளை வரலாறு ம.தி.மு.க போல...

தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க இவை எல்லாம் பிரதான கட்சிகள் இவை மூன்றுமே குடும்பத்தின் பிடியில். ஆளும் கட்சி பற்றி சொல்லவே வேண்டாம்...

ஆக கட்சிகள், அரசியல் இவற்றில் எல்லாம் இந்தியாவிலும், தமிழகத்திலும் தூய்மை நேர்மை நிலவ வில்லை. அதற்கான வழிகளும் இல்லை. கட்சி நடத்திட பெரும் செல்வம் தேவைப்படுகிறது. நல்லவேளை கலாம் பேரில் கட்சி என்ற பொன்ராஜ் 234 தொகுதிகளிலும் இலட்சிய கலாம் கட்சி வேட்பாளர் என்றெல்லாம் சொல்லியவர் அடங்கிவிட்டார்.

டெல்லியின் கணக்கு வேறாகவே ஒரு அர்விந்த் கெஜ்ரிவாலை பார்க்க முடிகிறது. ஆனால் அவராலும் சுயமாக ஆள இயலாத சிக்கல்கள். திட்டத்தின் கடைசிப் பயணப்புள்ளி மத்திய ஆளும் அரசையே சாரவேண்டியதாயிருக்கிறது.

ஆக இப்படி இருக்கும் கட்சிகள் அவரவர் கட்சிகளுக்குரிய ஒரு வாக்கு வங்கியை ஏதோ ஒரு காரணம்பற்றி வைத்திருக்கிறது . அதில் தனி மனிதர் ஒவ்வொருவரும் அந்த ஏதோ ஒரு காரணம் அடிப்படையாக‌ மதம், சாதி, ஒரு பிடிப்பு, ஒரு கவர்ச்சி, ஒரு சினிமா கற்பனை, ஒரு பயன்பாட்டால் விளைந்த நன்றியுணர்வு, அல்லது ஒரு விருப்பம் ஆகியவற்றால் வெளிவராமல் ஏன் மது , சிகரெட், விருப்பப் படி இயங்குதல், இப்படி ஏதோ ஒரு மீறல் அல்லது பாது காப்பு, அல்லது காரணம்பற்றி அந்த கட்சிகளில் தொண்டராக ஆர்வமுள்ளவராக இயங்குகிறார், இருக்கிறார்.

தேர்தல் எல்லா தில்லுமுல்லுகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. என்னதான் தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு நேர்மையாக இயங்கியபோதும் நடுநிலையோடு முயன்றபோதும் அரசின் எந்திரங்கள் ஆளும் கட்சி சார்பாகவே இருக்கின்றன.

30000ஆயிரம் கோடியை முதல்வர் மையம் தமது துணை மந்திரி மையங்களிலிருந்து பெறுவதை பெரும் செய்தியாக ஊடகம் மக்கள் கையில் எடுக்க விடாமல் 500 கோடி கூட்டணி பேரம், 1500 கோடி நிலவரம் என செய்திகள் பீப், இளையராஜா,ஈ.வி.கே.எஸ்,தியேட்டர் வரலாறு போன்றவை, நாஞ்சில் சம்பத் போன்ற தொடர் செய்தி ஆக்கங்கள் வெள்ளத்தால் ஏற்பட்ட கெட்ட பேரை மறைக்கும் மக்கள் மறக்கும் முயற்சியாக ஆளும் கட்சி ஊடகத்தை கையில் வைத்திருப்பதாக செய்திகள் வராமலுமில்லை.

இன்னும் குடியரசு ஆட்சி இருக்கிறது இந்தியாவில் ஜனநாயக ஆட்சி மலரவில்லை.இந்நிலையில் தேர்தல் ஒரு விழா.இதில் எல்லா விளையாட்டுமே உண்டு பிரித்தாள்தல், சூழ்ச்சி, சேர்ந்திருந்தே கெடுத்தல், வெளித்தெரியாமல் பணியாற்றல், வெளியே எதிரி உள்ளே நட்பு இப்படி எல்லாமே உண்டு. ஆனால் இதன் மூலம் கீழ் தட்டு மக்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள்.

வாக்குகளுக்கு ஒரு விலை. இல்லையெனில் வேலையை விட்டு ஒரு நாள் வந்து கியூ வரிசையில் நின்று வாக்களிக்க என்ன கிடைக்கிறது? மேல் தட்டு மக்களும், அரசு நிர்வாக அமைப்பில் உள்ளார்க்கும் அன்று சம்பளம், சம்பளத்துடன் வேலை, சம்பளத்துடன் விடுமுறை எல்லாம் கிடைக்கிறதா இல்லையா எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.அதற்கு கட்சிகள் பணம் சேர்க்க வேண்டிய நிலை. விட்ட பணத்தை தேர்தலுக்கும் பின் ஆட்சியில் பதவியில் அமர்ந்தவுடன் பல்லாயிரம் மடங்கு செலவு செய்ததை விட கொள்ளையடிக்கும் நிலை எல்லாம் உண்டு இந்த ஆட்சி அமைப்பில்.இப்போது தாம்புக்கயிறாக காசை வாங்கிக் கொண்டு ஆட்சி என்னும் மாட்டைப் பிடித்துக் கட்ட முடியாமல் இந்திய வாக்களன் தவிக்கிறான். காஞ்ச மாடு கம்பில் புகுந்து விளையாடி வருகிறது.பதவிக்கு அமர்ந்த பின் அப்போது தப்பித் தவறி ஏதாவது வாக்களன் கேட்டால் "நீ என்ன சும்மாவாடா? போட்ட? காசு அவுக்கல? காசு வாங்காமலா போட்ட , ஒன் ஓட்டு எல்லாம் ஒரு கேடா போடா போ " என நக்கலாகிற ஜனநாயகமும் வாக்காளனும்.




இன்னும் ஜனநாயக அமைப்பு, குடியுரிமை, சட்டம் நீதி நிர்வாகம், அரசு, கட்சிகள், அரசியல் மேல் எல்லாம் போதிய விழிப்புணர்வு அடையா நிலை. மறுபக்கம் தெரிந்து இருந்தாலும் மீறல் நிலை. காரணம் நாட்டின் நிலவும் அவலங்கள். மல்லையா, லலித் மோடிகள், நாட்டின் செல்வ நிலை, பொருளாதார நிலை, சமூக அமைப்பு, ஏழை படும்பாடு. கடன் சுமை ஏழைக்கும், நாட்டின் வங்கிகள் பணக்கார அரசியல் வாதிகள் கைகோர்ப்பிலுமாக செல்லுதல்

ஆக எல்லாவற்றுக்கும் அடிப்படை மக்கள் மன நிலை. இந்த மக்கள் பெருவாரியாக கட்சி என்ற பேரில் பிரிந்து கிடப்பது. ஒரு வாக்கு வெற்றியாளரையும் தோல்வியாளரையும் வேறு படுத்துவது,

வெற்றி பெற்றவர் பெற்ற வாக்குகளை விட அவருக்கு எதிராக விழுந்த மற்ற வேட்பாளர்களின் மொத்த வாக்குகள் பயனிழந்து போய் விடுவது... மக்கள் இந்த சுழியிலிருந்து வெளிவரவே வழி இல்லை.

 எல்லா மக்களுமே நியாயம், நீதி, நேர்மை , தூய்மை எனப் பார்த்து சிறந்த ஆட்சி முறைக்காக இது போன்ற கட்சிகளில் இருந்து வெளியேற ஆரம்பித்தால் கட்சிகள் வெறும் கூடாரமாகிவிட்டால் இவர்களுக்கு எல்லாம் வேலை இல்லை.அப்படி ஒரு கோடிக்கணக்கான மக்கள் திரண்டால் அப்படி திரள்வதை மாற்றம் எனவும். ......எனவும் சொல்லலாம்.ஆனால் அது எல்லாம் கனா. அப்துல் கலாம் கண்டது போன்ற கனா. ஆனால் இப்போதைக்கு...




1.பெருவாரியாக நோட்டாவுக்கு வாக்களிப்பது அல்லது எவரும் வாக்களிக்காமல் தேர்தல் முறைகளில் பெருமாற்றம் செய்ய அடிப்படையாக இருந்தால் ஒரு மாற்றம் வரலாம்.

2.பெறும் வாக்குகள் சதவீத அடிப்படையில் பதவியும் ஆட்சி பங்கீடும் இருக்கலாம்.எல்லாக் கட்சிகளுக்குமே.

3.வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்காக அவர்தம் வாழ்வின் முன்னேற்றத்துக்காக செயல்பட வில்லையெனில் அவர் திரும்ப அழைக்கும் முறை வரலாம்..

 இவை எல்லாம் நம் முன் வரவேண்டிய உடனடியான தேர்தல் சீர்திருத்தங்கள் அல்லது மாற்றங்கள். இவை அல்லாமல் நிரந்தர நல்லாட்சிக்கு நீண்ட கால முறைக்கான செயல்பாடுகள் எல்லாம் நிறைய உள்ளன. இப்போது சொன்ன இவை ஒரு சிறு கை அளாவிய கைப்பிடிக்கூழ் (பெற்றவர்க்கு அளித்தல்) போல.

இதற்கு மேல் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆட்சியாளர்கள் ஊழல் இலஞ்சம் விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் பொது வாழ்க்கைக்கே வராமல் எந்த தேர்தல் முறைகளிலும் நிற்க விடாத சட்ட சீர்திருத்தம் போன்றவை எல்லாம் வேண்டும்...அந்த சட்ட அடிப்படை ஒரு ஆண்டுக்குள் விசாரணை முடித்து தீர்ப்பு அளிக்கப் பட்டதாயும் மேல் முறையீடு இல்லாததாகவும் இருத்தல் வேண்டும்.20 ஆண்டுகள் எல்லாம் வழக்கு நடக்கவே கூடாது.

அதற்கான நீதிபதிகள் தவறு செய்யும் பட்சத்தில் அது கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் போன்ற சிறியதாக இருந்தாலும், பெரும் தொகை மாறுதல் ஆக இருந்தாலும் அந்த நீதிபதியும் அந்த நீதி அமைப்பும் எவருமே அந்த அமைப்பு அந்த நீதிபதி போல் ஒரு நாளும் ஆகி விடக்கூடாது என்ற தண்டனை முறைகள் வரவேண்டும்.

ஆக வாக்களர் ஆட்சியை நிர்வாகத்தை ஏற்படுத்துவார் பற்றி முழு விழிப்புணர்வும், அவர்களுக்கு அவர்கள் எந்த பிரதி உபகாரமும் வாக்களிக்க பெறாமல் இருக்க ஆட்சியும் நிர்வாகமும் பார்த்துக் கொண்டு தேர்தல்நடத்தி நிர்வாகம் சீர் செய்யப் பட்டால் கட்சி ,ஆட்சி, அரசியல், மக்கள் , தேர்தல் வாக்குக்கான விலைபெறுதல் இவை எல்லாமே தூய்மை நேர்மை வழி வரலாம்.

எனவே மக்கள் எவ்வழி கட்சிகள் அவ்வழி கட்சிகள் எவ்வழி ஆட்சி அவ்வழி ஆட்சி எவ்வழி அரசியல் அவ்வழி...

அப்படி ஒரு வேளை நல்ல நிரந்தர மாறுதல் வந்தால்

அப்படி நிரந்தர மாறுதல் வந்தால் ஒரு வேளை நதி நீர் இணைப்பு நடக்கலாம் இந்த நாட்டிலும் நல்ல தலைமையின் பேர் லெனின், பிடல், ஹோசிமின், காந்தி, மாவோ போல் இடம் பெறலாம்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.






Sunday, March 27, 2016

சன்னி லியோன் வைகோ ஒரு ஒப்பீடு: கவிஞர் தணிகை.

சன்னி லியோன் வைகோ ஒரு ஒப்பீடு: கவிஞர் தணிகை.




பட்டி மன்றப் பேச்சாளர் லியோனி அல்ல இவர் பாலியல் நடிகை பாலிவுட் நடிகை சன்னி லியோன். 35வயது சன்னி லியோனுக்கும் 70 வயது வைக்கோவுக்கும் சில ஒற்றுமை பாருங்கள்...இருவருக்குமே தொலைக்காட்சிப் பேட்டி நிருபர் கேள்விகள் பெரும் தொல்லையாகி விடுகின்றன.இருவருமே தாங்கள் செய்வதை செய்ததை நியாயம் என்றும் கேள்விதான் இப்படி எல்லாம் கேட்கக் கூடாது என்றும் நிருபர்களை மிரட்டுகிறார்கள். மல்லைய்யா செய்தி போய் வைக்கோ செய்தி வந்தது டும் டும் டும்....என்ன வைகோ எழுந்து ஓடி விட்டார் தமது தாயகம் கட்சி அலுவலகத்திலிருந்தே,சன்னி லியோனோ அறைந்து விட்டு இல்லை இல்லை அடிக்கவில்லை, அவர் பத்திரிகையாளரே இல்லை என்கிறார்.

தற்காலத்தில் டேனியல் வெப்பர் இந்த சன்னி லியோனிக்கு கணவர் .ஆனால் லியோன் 16 வயதிலேயே தன் பெண்மையை இழந்தவர், 18 வயதில் இருபால் உறவுமே தனக்குப் பிடிக்கிறது என்றவர் ஆனாலும் ஆண்களின் உறவும் அதிகம் பிடிக்கிறது என்ற கன‌டாவில் 1981ல் பிறந்த இந்திய வம்சாவளிக் குழந்தை.நீலப்படம், பாலியல் படங்களின் நாயகி உலகின்  இந்த விதமான பட நாயகிகளில் முதல் 12 பேரில் முன்னணியில் இருந்தவர். எண்ணிறந்த பணிகள் எண்ணிறந்த முறைகளில் எண்ணிறந்த படங்களில் எண்ணிறந்தவர்களுடன் செயல்புரிந்த வீராங்கனை... இப்போது அப்படி எல்லாம் இல்லையாம். பாலிவுட் பம்பாயின் நாயகியாம்.பழைய வாழ்க்கை பற்றி எவரும் பேசக் கூடாதாம், கேள்வி கேட்கக் கூடாதாம்.அவரும் அனைவருமே அதை மறக்க வேண்டுமாம்.

 இணைய தளங்களில் கூட அந்தப் படங்களை உலாவுவதை இவரும் இவரது கணவரும் தடை செய்து விடுவார்கள் என நம்புவோம். எனவே அது பற்றி ஒரு இரவுக்கு உங்களின் விலை எவ்வளவு என்று கேட்ட நிருபரை அடித்தார் என்றும் அடிக்க வில்லை என்றும், அவர் நிருபரோ பத்திரிகை சார்ந்தவரோ இல்லை என்றும் வடக்கே ஏக களேபரச் செய்திகள். இவரும் இவரது உதவியாளரும்   இது பற்றி செய்தி தருகிறார்கள் நிறைய முரண்பாடுகளுடன்.

பொதுவாகவே இது போன்ற மகளிர் தாம் குளித்து முடித்து வந்து விட்டால் இனி இது போன்ற தவற்றை செய்யக்கூடாது என சத்தியப் பிராமணம் எடுத்துக் கொள்வார்களாம் அடுத்து வாய்ப்பும் உடலும் சுகம் கேட்கும் போது அதில் என்ன தவறு இருக்கிறது? பிறர்க்கு எந்த தவறும் செய்யவில்லையே என தமக்குள் சொல்லிக் கொள்வார்களாம். அப்படிப்பட்ட இயல்புதான் உண்டாம்.செய்யும் போது அதில் என்ன தவறு என்றும் சமாதானப்படுத்திக் கொள்வாராம். எல்லாம் உள்ளேதானே மனசாட்சி எல்லாம்... இவர் தற்போதைய கணவர் டேனியல் வெப்பர் என்பாரும், அந்த நிருபருக்கு இவர் கொடுத்த பதில் சரியானதுதான் என்று கூறியிருக்கிறாராம்.நல்ல கணவர் நல்ல மனைவி.



இது போல விலை என்ன எவ்வளவு கட்டணம் என ரேட்,பேரம் பேசுவது கேட்பது எல்லாம் செய்து கொள்ள கொடுக்க ஒரு தனிச் சேனல் தனி வழி அனைவருக்கும் இருக்கிறது நமது அரசு அலுவலர்கள் இலஞ்சம் பெறுவது, மந்திரிகள் பெறுவது, கட்சித் தலைவர்கள் தேர்தல் கூட்டணி சேர்வது இதற்கெல்லாமே...எனவே இவர்கள் இதை எல்லாம் பகிரங்கமாக ஊடகத்தில் பேசவும் முடியுமா? அடுத்தவர்களைப் பற்றி வேண்டுமானால் பேசலாம் நமைப் பற்றி பேச விடலாமா என்பதுவே வைகோ லியோனின் கொள்கை.

திருந்துவதற்கு எல்லாருக்குமே வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் அதில் மாறுபட்ட கருத்து இல்லை. உண்மையாக திருந்தினால் வாழ்த்துகள்தான் ஆனால் செய்த கர்மம் தொடராமல் இருக்குமா?




வைக்கோ (வை கோ) கள்ளத் தோணியில் சென்று பிரபாகரனை சந்தித்து தி.மு.கவுக்கு தலைவலியாகி பின் அந்தக் கட்சியில் இருந்த பழம் நினைவோடு வெளி வந்தது முதல்...

தடா பொடா சட்டத்தில் அம்மா அரசு உள்ளே 2 ஆண்டு இருந்து வந்து பின் அவருடனே கூட்டு சேர்ந்து அதன் பின் தேர்தலில் நிற்காமல் இருந்து இப்போது மல்லைய்யா செய்தியை தமிழகத்தில் பின் தள்ளி முன்னணியில் வைகோ.

இவர் பீமராம், திருமா அர்ஜினராம், இவர்கள்  தர்மர் விஜய்காந்துக்கு ஒரு இடறும் வர விடமாட்டார்களாம், இவர்களை மீறி அவருக்கு ஒன்றும் நேர்ந்து விடாதாம். இவர்களுக்கு வேண்டும்போது வேண்டுமானால் புராணம் மஹாபாரதம் இதிகாசம் எல்லாம்..அப்படியானால் கிருஷ்ணர் யார் எங்கே மறைந்திருக்கிறார்? 



கேட்கிறார்கள் 1500 கோடி பற்றி கேட்கிறார்கள் எனில் அதற்கு உண்டான விளக்கம் அளித்து வாய்ப்பை பயன்படுத்தி
தனது நிலையை வெளிப்படுத்துவதை விட்டு விட்டு ஏன் ஓடவேண்டும்.. வைகோ, ஏன் லியோன் நிருபரை அடிக்க வேண்டும்....?

பிணத்தை வைத்துக் கூட அரசியல் செய்ததாக வைகோ மீது குற்றச்சாட்டு உண்டு...சசி பெருமாள் மரணத்தின் சான்று....அதன் இறுதி சடங்கு சான்று..எப்படி நீர் ஒரு புறம் மதுவுக்கு எதிராக போராடுகிறேன் என போராடிவிட்டு மறுபுறம் ஒரு மதுக்குடியரைத் தலைவராக அதுவும் முதல்வர் வேட்பாளராக ஆக்குகிறீர்?மநகூ என்றிருந்ததை கேநகூ என... கலிங்கத்துப்பட்டியில் தாயை வைத்து கூட மதுவுக்கு எதிராக போராடிவிட்டு, சசி பெருமாள் இலட்சியத்தை விடவே மாட்டோம் என சொல்லி விட்டு இப்போது எப்படி ஒரு மதுமக்கள் மான்மியத்தோடு?



தி.மு.க மட்டும் ஆட்சிக்கு வரவே வரக்கூடாது என குரோதம் காட்டுகிறார் இந்த வைகோ கனிமொழியின் மேல் பாரத்தை பழியை போட்டுவிட்டு கலைஞர் குடும்பம் தப்பித்துக்கொண்டது என 2ஜி அலைக்கற்றை விஷியத்தில் ஸ்டாலின் தான் பின் இருந்து இயக்கிய வர் என்கிறார் கனிமொழி கலைஞர் குடும்பம் இல்லையா?

எப்படியோ மது அருந்தூவோர் வாக்குகள் சுமார் 2 கோடியும் வாக்குப் பட்டியலில் புதிதாக சேர்ந்த இளைஞர்கள் சுமார் 1 கோடி பேரும் இந்த தேர்தலை நிர்ணயிக்கப் போகிறார்கள் .ஆனால் எவர் ஜெயித்தாலும் எவர் தோற்றாலும் வைகோவின் பேர் ரிப்பேர் இந்த தேர்தலில். ஏன் எனில் இந்த மனிதரின் சுய ரூபம் சன்னி லியோனின் சுய ரூபம் போல் வெளிப்பட்டு விட்டது.



ஒரு பக்கம் தனது மகன் சிகரெட் விற்பதில் தவறில்லை என அன்று கேள்வி கேட்ட நிருபரை எகத்தாளமாக சாடுகிறார், மறுபுறம் மதுவிலக்கு தமது கூட்டணியின் இலட்சியம் அதை இந்த தமிழக மக்களுக்காக வென்று தி.மு.க, அ.இ.அ.தி.மு.க கட்சிகளையும் ஓரம் கட்டுவது தமது இலக்கு என்கிறார்.மதுவிலக்கு அரசை நிர்மாணிப்போம் என்கிறார் ஒரு பக்கம் ஆனால் அதற்காக சினிமா நடிகர் மதுப் பிடியிலிருந்து தப்ப முடியாத தலைவர் விஜய்காந்தை முதல்வர் வேட்பாளர் என்கிறார். சட்டம் படித்த வைகோ சட்டப்படி பார்த்துக்கொள்ளலாம் என எதெற்கெடுத்தாலும் கோபப்படுகிறார். உணர்ச்சி அதிக உணர்ச்சி அறிவைக் கெடுத்து விட...




சாதாரணமாக பார்க்கும்போதே தெரிகிறது வைகோவிடம் உள் மறைவில் தவறு இருக்கிறது. ஏனைய கட்சிக்காரர்களிடம் இருப்பது போல எனவே இந்த மநகூ அல்லது கேநகூ அல்லது விஜய்காந்த் அணி அமைப்பாளர் வைகோவும் சன்னி லியோனியும் ஒன்று போலவே காட்சி தருகிறார்கள்.வேறுபட்ட துறைகளில் சினிமா, பாலியல் படங்கள், விளம்பரம், அரசியல் என பல்வேறுபட்ட‌ தளங்களில் இருவரும் வாழ்க்கைப் பயணம் நடத்திய போதும்...

 இவர் நடத்திய மதுவிலக்கு நடைப் பயணத்தின் போது அம்மா ஜெயலலிதாவும் இவரும் சிரித்து பேசிக் கொண்டதை நாடு கண்டது. அம்மா தவிர வேறு யாருமே அந்தக் கட்சியின் பிரமுகர்கள் அம்மாவின் ஆணையின்றி வேறு எந்தக் கட்சிக்காரர்களுடனும் சிரித்துப் பேசுவது அனுமதிக்கப்படுவதேயில்லை என்பதும் யாவரும் அறிவோம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, March 26, 2016

வைகோவின் சீற்றமும் சிங்கத்தின் ஏமாற்றமும்: கவிஞர் தணிகை.

வைகோவின் சீற்றமும் சிங்கத்தின் ஏமாற்றமும்: கவிஞர் தணிகை.
தமிழகத்தின் தேர்தல் களம் திக்கற்ற நிலையில் இருக்க விஜய்காந்த் கூட்டணி என்று பெயர் மாற்றம் பெற்ற மக்கள் நலக் கூட்டணி ஏதோ சாதித்து விட்டது போல் மிதப்பில் இருக்கிறது அவர்கள் கூட்டணியின் தலைவர் மிதப்பில் இருப்பது போலவே...

தி.மு.க , அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கு அடுத்து இந்தக் கூட்டணியில் உள்ளக் கட்சிகள்  3 ஆம் இடத்துக்கு வர வாய்ப்புள்ளது என்ற போதிலும் இந்தக் கூட்டணியில் உள்ளவர்கள் அவர்கள் கட்சியின் சின்னங்களில்தான் நிற்க விருக்கிறார்கள். மேலும் இது தொகுதி உடன்பாடுதான். 

இந்நிலையில் தமது  எம்.பி.ஏ படித்த மகன் துரை வையாபுரி சிகரெட் விற்பனை முகவராக இருப்பது நியாயமானதுதான் எனப் பேசும் வைகோ விஜய்காந்தை தமது அணிக்கு இழுத்தது ஏதோ கலைஞரை வெற்றி கொண்டது போல பேசப்பட்டுள்ளது முத்தரசன் போன்றவர்கள் குருவை மிஞ்சிய சிஷ்யன் என்றெல்லாம் புகழ்ந்துள்ளார் பொதுக் கூட்ட மேடையில்.

வைகோவும் விமான நிலையத்தில் தி.மு.க பேரம் பேசியதாவும் 80 தொகுதிகளும், 500 கோடி இந்தியப் பணத்தையும் கால் தூசாக மதித்து விஜய்காந்த் தமது அணிக்கு வந்திருப்பது மிகபெரும் மறுமலர்ச்சியாக வைகோ குறிப்பிட்டுள்ளார். எல்லாமே எல்லாக் கட்சியுமே பேரம் பேசிக் கொண்டுதான் இருக்கிறது. மக்களுக்கும், ஊடகங்களுக்கும் இவை யாவும் புரியும். தெரியுமென்ற போதிலும் இப்போது வெட்ட வெளிச்சமாக இது போன்ற சம்பவங்கள் கட்சித் தலைவர்களால் பேசப்படுவது தற்போதைய தமிழக அரசியல் இருக்கும் நிலையைத் தெளிவாக காண்பிக்கிறது.இது குறித்து வழக்கு மன்றம் வரை இந்த துண்டு சீட்டு விவகாரம்,அல்லது பத்திரிகையில் வந்த செய்தி விவகாரம், வைகோ பேசிய விவகாரம் சென்று கொண்டு இருக்கிறது. 

இந்த  மக்கள் நலக் கூட்ட‌ணியுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்திருப்பது  அதன் பரிதாப நிலையை உணர்த்துகிறது. உண்மையில் சொல்லப் போனால் இது போன்ற தி.மு.க, அ.இ.அ.தி.மு.க போன்ற அணிக்கு மாற்றாக வைகோ, விசிக, விஜய்காந்த் போன்றோர் இல்லாமல் இவர்கள்தான் 3 ஆம் அணியாக மாற்று அணியாக இருக்க வேண்டும். இருந்திருக்க வேண்டும்.எவ்வளவு வாக்கு குறைவாக பெற்று வருகிற போதிலும்.

இந்த விஷியத்தில் பா.ம.கவை அதன் முடிவை நாம் பாராட்டலாம். அதன் முடிவு தேர்தலுக்கும் பின் அதற்கு எத்தகைய முடிவை தந்த போதும் அது அவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.தனியான பலம் என்ன என்பதும் அவர்களுக்கு உணர்த்தப்படும்

ஆனால் வைகோ, விசிக, விஜய்காந்த் அணிகள் எந்த கொள்கையும் இல்லாமல் ஊழலற்ற, மதுவிலக்கு அரசைக் கொண்டு வரும் அணி
 என்று சொன்னாலும் அதன் முதல்வர் வேட்பாளரே பொதுக்கூட்டத்திற்கு வரும்போதும் கூட தள்ளாடுபவராக காணப்படுகிறார். சினிமா, மது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் அதே மாயை விசிக, வைகோ போன்றவரால் ஏற்கப் படலாம். ஆனால் இந்திய பொதுவுடமைக் கட்சிகளால் ஏற்கப் பட்டிருப்பது அதன் துர்லபம். அதன் சாபக் கேடு. அதன் வக்கின்மையைக் காட்டி விட்டது.

இந்நிலையில் வைகோவை பாலிமர் தொலைகாட்சியில் பேட்டியில் நீங்கள் அம்மாவிடம் 1500 கோடி வாங்கிக்கொண்டுதான் விஜய்காந்தை தி.மு.கவிடம் இருந்து பிரித்து மக்கள் நலக் கூட்டணியுடன் இணைத்திருப்பதாகவும் இது ஆளும் கட்சி மீண்டும் வர செய்த வேலைதானே என்ற கேள்வி எழுப்பப் பட்டதும், பேட்டியை இத்துடன் முடித்துக் கொண்டேன் என கர்ஜனை சிங்கம் வாய்மூடி மௌனியாக வெளியேறுகிறது. இது அரசியல் நாகரீகமாக எடுத்துக் கொள்வதா? அல்லது இதைப்பற்றி எல்லாம் வெளியே பேசக் கூடாது என குற்றத்தை மறைப்பதா?





யார் வேண்டுமானாலும் யார் மேல் வேண்டுமானாலும் எதைப் பேசினாலும் உண்மையா பொய்யா என பிரித்து பார்க்க முடியா அளவு அரசியல் மிக மோசமான நிலை. ட்ராபிக் இராமசாமி நான் தான் விஜய்காந்த் இந்நிலை எடுக்க காரணம் என்கிறார். வைகோ தாம் கலைஞரை இந்த விஷியத்தில் வெற்றி கொண்டதாக கருதுகிறார் இதெல்லாம் தேர்தல் முடிவு அறிவிப்பில் உண்மையான வெற்றி எது என்பதை காட்டத்தான் போகிறது...

கடந்த இரண்டு தேர்தலில் மீறினாலும் இந்தக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து 20%க்கும் குறைவான வாக்குகளையே பெற்றிருக்கிறது.தேர்தல் வாக்கு வங்கி அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. மக்கள் அலை எப்படி அடிக்கிறதோ அப்படித்தான் .அப்படியே வாக்கு வங்கி அடிப்படையில்  வாக்குகள் விழுந்தாலும் வெற்றி எல்லாம் பெற இந்த அணிக்கு வாய்ப்பே இல்லை. எவருக்கும் பெரும்பான்மை இல்லை என்றால் ஒரு வேளை இந்தக் குதிரைகளுக்கும் மதிப்பு வரலாம்.

2006:
 தேமுதிக‌ பெற்ற வாக்குகள்: 8.38%
சி.பி.ஐ பெற்ற வாக்குகள் 1.61%
சி.பி.ஐ எம். 2.65%
விசிக  1.29%
ம.தி.மு.க பெற்றவை: 5.98%

2011:
 தேமுதிக‌ பெற்ற வாக்குகள்: 7.88%
சிபிஐ: 1.97%
சிபிஐ எம்: 2.41%
விசிக : 1.51%
மதிமுக ...தேர்தலில் நிற்கவேயில்லை

இந்நிலையில் 2016ல் அதிக வாக்கு சதவீதத்துக்காக தேர்தல் ஆணையம் முயற்சிகள் செய்து வருகிறது. புது வாக்குகள் பல இலட்சங்களும் சேர்ந்திருக்கிறது. எனவே இந்தத் தேர்தலில் நிறைய மாற்றங்கள் புதிர்கள், வியப்புகள் காத்திருக்கின்றன. பார்ப்போம் பொறுத்திருந்து பார்ப்போமே!

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, March 25, 2016

மதக் கதைகள் அரசின் விதைகள் :‍ கவிஞர் தணிகை

மதக் கதைகள் அரசின் விதைகள் :‍ கவிஞர் தணிகை



தேவ லோகத்தில் கற்பகத் தரு, வசிஸ்ட மகரிஷியின் காமதேனு,மணிமேகலையின் அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரம்,கிருஷ்ணனின் ஒரு பருக்கை விருந்து பெருக்கு திரௌபதி வேண்டல், யேசுபிரானின் 7 கூடை மீன்களும் அப்பமும் பெருகி ஆயிரக்கணகானவர்களுக்கான விருந்து...அம்மா உணவகம்...




இன்று நல்ல வெள்ளி அல்லது பெரிய வெள்ளி. யேசுவை சிலுவையில் அறைந்து வரும் ஞாயிறு உயிர்த்தெழும் நாள். ஆவி வாழ்க்கை உண்டு என்று எல்லா மதங்களிலும் ஏற்றுக் கொள்ளப் பட்டு நம்பப் படுகிறது. யேசுவின் ஆவி அலைந்ததை நம்பினால் அவர் வாழ்ந்ததும் நம்பப் பட வேண்டியதே...

ஆனால் நம்ப முடியாத கதைகள். அப்படி நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனத் தோன்றும் கதைகள் எல்லா நாடுகளிலும் உண்டு. ‍ஹாரிபாட்டர் வெள‌க்கமாறில் ஏறி பயணம் செய்வதை நாம் இரசிக்கிற போது இதற்கெல்லாம் என்ன விமர்சனம் என சிலர் கேட்பது காதில் விழுகிறது.

கதை சினிமா என்றும் கற்பனை என்றும் சொல்லி விட்டால் எல்லாவற்றையும் யாருமே இரசிக்கலாம். ஆனால் கடவுள், மதம் என்ற நம்பிக்கை வெறியாக பற்றாக மனப்பிறழ்ச்சியாக மார்க்ஸ் சொல்லியபடி மதம் என்பது அபின் என்ற போதை வஸ்துவாக இல்லாமல் இருந்தால் நல்லதே. ஆனால் இந்தக் கதைகளை கவனியுங்கள்.கையில் குழந்தையை ஏந்தியபடி இன்னும் சில சாதியில் தீ மிதித்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள் சில சாதியர் வேடிக்கை பார்க்க, தூண்டிக்கொண்டிருக்க, இயக்கம் ஒரு புறம் இயக்குதல் ஒரு புறம் என....

நாம் ஒரு முறை கற்பனை செய்தோம்: ஒரே பருக்கை அரிசிச் சோறு மலையளவாய் இருந்து அதில் ஏழைகள் வேண்டுமளவு வெட்டித் தின்று கொள்ள‌ வேண்டும் பசியாற...

கடல் நீரை எழுது மையாக்கி காடுகளின் மரங்களில் எல்லாம் எழுது கோல் செய்து பிரபஞ்சத்தின் எல்லாக் கோள்களின் மேனியில் எல்லாம் தமிழால் எழுதிச் செல்ல வேண்டுமென்று...

கதை கதை கதைக்கு வருவோம்:
தேவ லோகத்தில் கற்பகத் தரு என்ற மரம் இருக்கிறதாம். அதனடியில் சென்று கேட்டால் கேட்டதெல்லாம் கொடுக்குமாம்.முதலில் மழை கேட்போம் தமிழகத்துக்கு குறைந்த பட்சம்.

வசிஷ்ட முனிவரிடம் காமதேனு பசு இருந்ததாம். அது சிவபெருமான் வரத்தால் இவர் பெற்றதாம்.அதனிடம் கேட்டால் உண்ண யாவும் கிடைக்குமாம். ஒரு முறை விசுவாமித்திரன் கௌசிக மகாராஜாவாக இருந்த போது வேட்டையாடிக் களைத்து தமக்கும் தமது படை பரிவாரங்களுக்கும் உணவு வேண்டுமே என வஷிஷ்ட முனிவரிடம் கேட்க அவரும், நீங்கள் குளித்து முடித்து வருவதற்குள் தயாராகிவிடும் என தயார் செய்து வைத்திருந்தாராம்.



ஒரு சக்கரவர்த்தியால் கூட முடியாத அமுதைப் போன்ற அன்ன பதார்த்தங்களை எப்படி இந்த முனிவனால் அதற்குள் செய்துப் பரிமாற முடிந்தது என வியந்து கேட்க, முனிவனும், எம்மிடம் ஒரு காமதேனு என்ற பசு உண்டு அது கேட்பதை எல்லாம் கொடுக்கும் என்றராம் அதைப் பார்க்க விரும்புகிறேன் எனப் பார்த்தாராம் மன்னன் முனிவன் காட்ட..

அப்போதே நினைத்தேன் இது மனித கைப்பாகத்தால் விளைந்த உணவாக இல்லையே, அமுதச் சுவையுடன் இருக்கிறதே என சொல்லி நாடு சென்று தமது வீரர்களை அனுப்பி அந்த முனிவனிடம் கேளுங்கள் , கொடுக்கவில்லையெனில் அவனைப் போரில் வென்று அந்த காமதேனுவைக் கவர்ந்து வாருங்கள் எனக் கட்டளை இட...போர் மூள, காமதேனுவின் தோல் வயிற்றுப் புறங்கள் எல்லாம் ஈட்டி வீச அரம்பித்து இடைவிடாது...மன்னனின் போர்வீரர்கள் தோற்றோடி நிகழ்ந்ததை சொல்ல,ஒரு முனிவனை வேல்ல முடியவில்லையே என முடி துறந்து தவம் இயற்ற சென்றதாக ஒரு கதை...

மணிமேகலை ஆபுத்திரனிடமிருந்து பெற்ற அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரத்தை எடுத்து சென்று ஏழைகள் பசியாற்றியதாக அதாவது அந்த பாத்திரம் எதைக்கேட்டாலும் எப்படிப்பட்ட உணவானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்குமென ஒரு கதை..




சூரியனின் சூல் கொண்ட குந்தி தேவி திருமணத்திற்கும் முன்பே கர்ணனை பெறுவதும், அர்ஜுனன் போட்டியில் விற்வித்தையில் வென்று வந்த திரௌபதியை வனவாசத்தின் போது வழக்கம்போன்ற பிச்சைதானே சரியாக என்ன சொன்னான் மகன் எனக் காதில் வாங்காமல் குடிசையில் இருந்து வெளி வந்து பாராமலே ஐவரும் சரி சமமாக பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்ற தாயின் வாக்கை மகன்களும், மருமகளும் அப்படியே தலைமேல் தாங்கியதாக பாஞ்சாலிக் காதை பாஞ்ச்: பஞ்சம் ஐந்து...பேரை ஆள்பவள்...



அந்த திரௌபதிக்கு அம்மன் என்றும் திரௌபதி அம்மன் பண்டிகையும் உண்டு. அவள் வனவாசத்தில் இருந்தபோது நிறைய எண்ணிக்கையில் முனிவர்களும், அவர்கள் சீடர்களும் பசிக்கு உணவு கேட்டு வர, குளித்து விட்டு வருவதற்குள் தமது கணவன்மார்களும் அருகே இல்லாதிருக்க கிருஷ்ணனை வணங்க அவன் வந்து நேற்று இரவு சமைத்து விட்டுகழுவி வைத்த பாத்திரத்திலிருந்து ஒரு பருக்கை ஒற்றிக்கிடக்க அதை அத்தனை முனிபுங்கர்களுக்கும் இலை விரித்து உணவு தந்து அவர்களை திருப்தி  செய்ததாகவும் அவர்கள் சாபம்,கோபம் ஆகியவை நேராமல் காத்துக் கொண்டதாகவும்...கதை எல்லாம் கதை...(given food to 10,000 sages)

அது போல: யேசு பிரான் மலைப் பிரசங்கம், கடல் பிரசங்கம் எல்லாம் கேட்க நீதியாய் மனித குலத்துக்கு வேண்டியதாய் இருக்கும் ஆனால் அவர்களும் பைத்தியம் பிடித்த மாதிரி யேசுவின் பேர் சொல்லி ஆடுகிற ஆட்டம் கேட்க பார்க்க இதெல்லாம் கேள்வி கேட்க மெய்யா பொய்யா எனத் தோன்றுவது இயல்புதானே?

வந்திருந்த மக்களுக்கு எல்லாம் கூடையில் இருந்த 7 மீன்கள், 7 அப்பத்தை தொட்டு அளிக்க அது மலை மலையாய் பெருகி அனைவர்க்கும் அளித்தது போக பல கூடைகள் மீதமிருந்ததாம். கதை கதை.....








இதெல்லாம் நல்லா நடந்திருந்தால் இப்போதும் இது போல ஏதாவதும் நடந்திருந்தால் குடிக்க தண்ணீர்  உண்ண உணவு எல்லாம் கிடைக்கும் அல்லவா?உலகு செழிக்குமல்லவா? இவ்வளவு வெப்பத்தையும் தணிக்க மழை பெருக்க தெய்வத்தை எல்லாம் வணங்கினால் உடனடியாக தெய்வம் செவி சாய்க்க வேண்டாமா? தெய்வம் நின்றுதான் கொடுக்குமாம் கொல்லுமாம்.

 அம்மா உணவகம் தேர்தல் முடியும் வரை அனைவர்க்கும் தமிழக மக்கள் அனைவர்க்கும் ஏன் தேர்தல்முடியும்வரை எப்போதுமே இலவச உணவளிக்கவேண்டுமல்லவா? அளிக்க முடியுமல்லவா?

மதமும் அரசியலும் எப்போதும் பிணைந்தே இருக்கின்றன. கடவுள் என்ற தத்துவம் தவறாக பொருள் கொள்ளப் படுகிறது பெரும்பாலும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, March 23, 2016

காவிரி எங்கள் தாய்க்கும் தாய்: மேட்டூர் அணையிலிருந்து கவிஞர் தணிகை





காவிரி எங்கள் தாய்க்கும் தாய்: மேட்டூர் அணையிலிருந்து கவிஞர் தணிகை

சூரியக் குடும்பத்தின் தந்தை சூரியன் என்னும் சராசரி அளவிலான‌ நட்சத்திரம் என்றால் பூமி உயிர் குலத்தின் தாய்.ஆனால் இயற்கை தந்த காவிரி எங்கள் மனித குலத்தின் தாய்க்கெல்லாம் தாய்.இன்று மேட்டூர் நீர்த்தேக்கத்தில் நீர் கொள்ளளவு 60 அடிக்கும் குறைவாக இருக்கிறது 120 அடி தேக்கும் முழு அளவில்.எனது ஆயுளில் 54 ஆண்டுகள் நேற்றுடன் முடித்து 55 ஆம்  ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்நாளில் இந்த அன்னை நதி பொன்னியைப் பற்றி ஒரு நினைவுப் பதிவு.அதற்கான ஒரு அஞ்சலி, வணக்கம். நன்றியறிதலுடன்.

இயற்கையின் கொடையான மழை பொய்த்து விட்டால் இந்த கோடையை நகர்த்துவது என்பது நீரில்லாது பெரிதும் துன்பமுற நேரிடும்.நாங்கள் எங்கள் குடும்பத்தில் மொத்தம் 10 பேர். இது வரை நதியின் கரையும் அதன் நீருமே எங்களது ஜீவரசம்.இதுவரை இருந்தது போல் இல்லாது இந்தக் கோடை ஆரம்பமே தாங்க முடியாத உருக்கத்தில் இருக்கிறது. காலை விடியும்போதே வியர்த்து வேர்வை வழிகிறது.காலை 10 மணிக்கே வீட்டில் இருக்க முடியவில்லை.

எங்கள் வீடு பழைய கால ஓட்டு வீடு. கேட்கவே வேண்டாம். கிராமத்தில் இருக்கும் தோட்ட வீட்டுக்கார வசதி படைத்தோர் எல்லாம் குளிர் சாதனப் பெட்டி ஏ.சி வாங்கி வைக்குமளவு கடுமையான சூடு. வெப்பத்தின் அளவு செல்ஷியஸ்களில் 37 முதல் 41(அ) 42 இருந்தாலும் அதை விட 3 முதல் 6 செல்சியஸ் வரை உணர்தலில் அதிக வெப்பம் இருக்கிறது என கணினியின் கணிப்பு சொல்கிறது. எனவே பாலைவனத் தட்ப வெப்ப நிலையும், இங்கே புகை, புழுதி, மாசு ஆகியவற்றை எல்லாக் கம்பெனிகளும் உருவாக்கி விட மின்சார உருவாக்கம், அனல் மின்சார மையங்கள் கருக்கொண்டிருப்பதாலும் மனிதர்கள் நடமாட முடியா வெப்பக் காடாய் தகிக்கிறது மேட்டூர்.அனைவரும் வாழ முடியா நிலை.

இந்நிலையில் வரும் சட்டசபை மாநிலத் தேர்தலை கருத்தில் கொண்டு நீர்,மின்சாரம் ஆகியவற்றை மக்களுக்கு சிரமம் இன்றி அரசு எந்திரங்கள் வழங்கி வருகின்றன. ஆனால் மே மாதம் தேர்தலுக்கும் பின் இதே நிலை நீடித்தால் மின்சாரமும்,குடிநீரும் இதே போல் கிடைப்பது என்பது குதிரைக்கொம்புதான்.

என்ன ஒரு சிறு நல்லது எனில் என் மகன் போன்றோர் +2 தேர்வு எழுதும் சமயம் மின்சாரம் இரவில் படிக்க கிடைப்பது ஒன்றுதான் இந்த தேர்தல் காலத்தால் நமக்கு கிடைத்த பலன். இதே அடுத்த ஆண்டு அல்லது தேர்தல் முடிந்த பிறகு தேர்வுக்காலம் என்று இருந்திருந்தால் அதோகதிதான். எம் போன்ற சாதாரணக் குடும்பங்களுக்கு இன்னும் யு.பி.எஸ் வசதி எல்லாம் இல்லை.

நிலை இப்படி இருக்கும் போது தாய்க்கெல்லாம் தாயான எமது காவிரியை எண்ணிப்பார்க்கிறேன். இன்று தமிழ்மண்ணுக்கெல்லாம் குடி நீரும், உணவும் உருவாக காரணமான இந்த அன்னையை வணங்குகிறேன்.உணவாக,குடிநீராக, மின்சாரமாக, எல்லா ஆலைகளுக்கும் இங்கு நதி மூலமாக..மேட்டூர் என்ற நகருக்கே ஆதராமாக‌ அனைவருக்கும் ஆதரவாக இருக்கும் இந்த நதியின் குறுக்கே 1934ல் இந்த அணைக்கட்டு கட்டு முடிக்கப்பட்டு இருக்கிறது.

நான் எல்லாம் 1962ல் மார்ச் 23ல் பிறந்த சிறுவன். எங்கள் வாழ்வில் ஒன்றாகிவிட்ட இந்த தாயின் தாயை இன்று வணங்கி மகிழ்கிறேன் இந்த மண்ணில் இருந்து கொண்டு இந்தியாவின் தலைசிறந்த மனிதர்க‌ளுடன் அப்துல் கலாம் , உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி போன்றோருடன் உறவாடக் கொடுத்து வைத்தமைக்கும், 11 நூல்கள் எழுதிய வாய்ப்புடன் வாழ்ந்தமைக்கும், முதல் நூல் உலகின் மாபெரும் நூலகக் கூட்டத்தில் இடம் பெற்றமைக்கும்,இந்தியாவின் நாடெங்கும் வலம் வந்தமைக்கும், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் என்னால் முடிந்த சேவை செய்தமைக்கும் உளபடியே பெருமிதம் கொள்கிறேன் அதனால் அடக்கமாக மௌனமாக இந்த அணை போல நதி போல இருக்க விரும்புகிறேன்.




இந்த நாளில் ஒரு செய்தி: முக நூல் என்னை முழு விடுதலையோடு எனது செயல்பாடுகளை செய்ய விட மறுப்பதால் இனி எவருக்கும் படிக்கச் சொல்லி எனது பதிவுகளின் இணைப்பை லிங்கை கொடுப்பதில் இருந்து என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன். அனைவர்க்கும் மொத்தமாக ஒரு இணைப்புக் கொடுப்பதோடு எனது பதிவு பற்றிய வலைப்பூ நிகழ்வை நிறுத்திக் கொள்ள விழைகிறேன்.வேண்டுவோர் விரும்பினால் படிக்கவும். பதில் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்வோம்.

இந்தியாவில் இருக்கும் அனைத்து முகநுல் நண்பர்கள், சமூக வலை தள நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நெட் ஒர்க் செய்தால் எப்படி இருக்கும்? அப்படி செய்து அரசியலை அரசை சீரமைக்க முடியாதா? என்ற ஆதங்கத்தை தகுதியுள்ள தொழில் நுட்பம், சேவை மனமுள்ள நமது நண்பர்கள் மொழி வேறுபாடு இல்லாமல் கருத்தை பகிர்ந்து ஆக்கத்துக்கு உதவ முற்படவேண்டும் என இந்த நாளில் கோருகிறேன். அதற்கன எனது உழைப்பை நல்க தயாராக இருக்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Monday, March 21, 2016

பகத்சிங் (அ) இன்னும் தேவை பகத் சிங்கின் சேவை ‍ கவிஞர் தணிகை

பகத்சிங் (அ) இன்னும் தேவை பகத் சிங்கின் சேவை ‍ கவிஞர் தணிகை






வெள்ளைக் கோடாரிகள்
பாரத விருட்சத்தின்
ஆணிவேரையே அசைத்து
இந்தியர்களின்
ஜீவிதத் துளிகளை
ஜீவிக்க நீரென எடுத்து
பார்த்தீனிய செடிகளாய்
வியாபித்த நேரத்தில்

இரும்பு துப்பாக்கிதனை
இரவல் வாங்கி
இந்தியாவின் இதயம் காக்க‌
மருந்து தோட்டாவின்
விருந்துக்குப் போனான்
ஓர் படித்த இளைஞன்
வெடித்து புலமை வடித்த கலைஞன்




காந்தி
அ‍ஹிம்சை ஏந்தி
வரும் முன்னே
களம் கண்டவர்கள்
சரித்திரப் பட்டியலில்
சிவப்புக் கோடிட்ட பெயர்
பகத்சிங்!

1857லிலேயே
பரிணமித்திருக்க வேண்டிய‌

வீர சுதந்திரம்
அன்று தடைப்பட்டது
தைரியமிழந்த
சுதேசி சிற்றரசர்களாலே.

அதன் பின்
எழுந்த ஆதவன்களில்
அரும்பும்போதே
அழிக்கப்பட்டவை அளவிலாதன‌
அவற்றையும் மீறி
சில வேணில் மலர்கள் மலர்ந்தன.

அவற்றில்
அடிமை எழுத்துக்களை
அகராதியிலிருந்தே
அழித்தொழிக்க
எழுந்ததுதான் பகத் குழு.

ஆதிமூலமாம் ‍ அந்த‌
செந்தழல் பந்தே
அஸ்தமனத்திற்கும்
ஆரவார எழுச்சிக்கும்
ஆங்கிலேயரின் கட்டளைக்காக‌
கட்டுண்டு கிடந்தது.

அன்று
அத்தனையும் அவர் பரப்பு
பூமிக்கே
அவர் புன்னகைதான்
நிழல் விரிப்பு

பேசுமுன்னே
நா அறுபடும் அன்று
பகத் குழு
நீதிமன்றத்திலே எறிந்த‌
வெடிகுண்டின் சத்தம்
வான்வெளிக்காற்றின்
வசதிதனைப் பெற்று
செய்தியென உலகமெலாம் எட்டியது.

அது
அகிலமெங்கும் வியாபித்த‌
ஆங்கிலேயர்க்கு
பயத்தையள்ளி அங்கமெல்லாம் கொட்டியது

அன்று பகத்குழு
சிறையிலே உண்ண நீரையும்
அனுமதிக்க விடாமல்
நீதி கேட்டு
உயிர் துறந்த போராட்டம்
உலகின் நீதி தேவனையே நிந்தித்தது.

அவன் குழு
திட்டமிட்டு சுட்ட‌
வெள்ளைத் துரையின் தலை
பறந்த போதே
வெற்றித்தாயின் சிலை
இந்தியர் விழிகளில் தெரிந்தது
சுதந்திரக் கனவு விரிந்தது
தெறித்து உறங்கிய செங்களரி
பரங்கியர்க்கு பீதியை அள்ளி சொரிந்தது.

அவனால்
தெறிக்கப் பட்ட இரத்தம்
அன்றைய‌
வெள்ளையர்களின்
கைக்கூலிகளாய்
சித்தம் கெட்டு
அசுத்தமான‌
இந்தியர்களை சுத்தப்படுத்தியது

அவன்
சிம்ம சொப்பனமாகத்தான்
தெரிந்தான்
சிறு நரிகளின் கண்களுக்கு

வெறி பிடித்த சொறி நாயை
ஆள் வலை விரித்து தேடுவதற்கு மாறாக‌
வெறி பிடித்த வேட்டை நாய்களே
ஓர் மனிதனை
தேடித் திரிந்த கதை
இங்கே நிகழ்ந்தது....

அப்போது
சொந்த வீட்டிலேயே
அவன்
அன்னியனாக்கப் பட்டான்
தன் சொந்தக் கூட்டிலேயே
அவன் சிறகுகள் சிதைக்கப் பட்டான்

தன்
சொந்த நாட்டிலேயே
வெந்து
வேடங்கள் புனைந்து திரிந்தான்

அவன்
தூக்கிலே தொங்கவில்லை
வெறும் உடல்தான் அதில் தங்கியது

அவனுக்குப் பின்
எழுந்த வீரர்களின்
பாதையெங்குமே
அவன் இருந்தான்,இருக்கிறான்...

இன்றைய பாஷையில் சொன்னால்
அவன் ஒரு நக்சலைட்....
இல்லை
உண்மையில் அவர் ஒரு ரியலிஸ்ட்.

அவனுக்குப் பின்
எத்தனையோ பகத்சிங்குகள்
காந்தியின் கைப்பாவைகளாக்கப்பட்டார்கள்.

அ‍ஹிம்ஸை
அப்போது
வெற்றித் தட்டேந்தியது
ஆனால் இன்றோ அவலமாக இருக்கிறது

மீண்டு வரும்
"காந்தியை"
அடையாளம்
கண்டு கொள்ளுமுன்

அணியணியாய் பகத் சிங்குகள்
எழுந்து வர வேண்டிய‌
அவசியங்கள்
இங்கு நேர்ந்திருக்கிறது

அன்றைய‌
வெள்ளை மதயானைகளுக்குப் பதிலாக
இன்றைய‌
அரசியல் கழுதைகள்
ஆடுகின்ற ஆட்டத்தால்......

அவன் நினைவோடு தூய சிந்தையுடன்
இளம் பகத்சிங்குகளே
நீங்கள் துளிர் விடுங்கள்

எதிர்காலத் துயர் துடையுங்கள்.




மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

இந்தக் கவிதை 1980 களில் அதாவது எனது இருபது வயதுவாக்கில் எழுதப்பட்டது. 1990 ‍ 91ல் மறுபடியும் பூக்கும் என்ற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றது. இது ஒரு கம்யூனிஸ்ட் மேடையில் பகத் சிங்க் பிறந்த நாளில் அரங்கேறிய கவிதை.இன்றும் பொருந்துகிறது. என்றும் பொருந்தும்.

பகத் சிங்க், ராஜ குரு, சுக்தேவ் மூன்று பேரையும் 1931ல் மார்ச்‍ 23ல் தூக்கிலிட்டனர். காந்தி மகாத்மா ஒரு சொல் சொல்லியிருந்தால் பகத்சிங்க் தூக்கு நிகழ்ந்திருக்காது என்றெல்லாம் விவாதிப்பார் உண்டு. காந்தி ஏன் அதை தடுத்து சொல்லவில்லை என்று எனக்குத் தெரியவில்லை என்ற போதிலும் அதை பகத் சிங் விரும்பியிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

சுமார் 23 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே இந்த மண்ணில் வாழ்ந்த இளைஞர் ஒருவருக்கு அவர் மறைந்து 85 ஆண்டுகள் ஆன பின்னும் நினைவோட்டம் இருக்கிறது. சரியாக 24 வயது கூட நிறையாத இந்த மண்ணின் மைந்தனுக்கும் அவன் தோழருக்கும் அஞ்சலி செலுத்த இந்தக் கவிதை இன்று எமது விழிப்பூவில் இடம் பெறுகிறது.

எனக்கும் அவருக்கும்/அவர்களுக்கும் ஒரு பந்தம் அவர்களின் நினைவு நாளில்  அடுத்த 31 ஆண்டு கழித்து 1962 மார்ச் 23ல் நான் பிறந்திருக்கிறேன்.எனவே எனது பிறப்பையும் அவர்களின் இறப்பையும் ஏனோ என் நெஞ்சம் முடிச்சிட்டுக் கொள்கிறது.

எனது ஒவ்வொரு பிறந்த நாள் வரும்போதும் அவர்கள் தியாகத்திருநாளை இறந்த நாளை நினைவு நாளை எண்ணி இறும்பூதுயெய்துகிறேன்.

இந்த மண்ணின் உண்மையான மைந்தர்களுக்கு எனது உயிர் தீபத்தின் ஆழ்ந்த சுடர் அஞ்சலிகள்...

மேல் சொன்ன கவிதையில் வெள்ளையர் என்று வரும் இடமெல்லாம் இன்றைய கொள்ளையர் அரசியல் நொள்ளையர் என மாற்றிக் கொண்டும் படிக்கலாம், எனவே அவன் போன்ற இளைஞர்களின் சேவை, தேவை இன்றும், என்றும், எதிர்காலத்திலுமே தேவை என்பது உண்மைதானே?

காப்பி/ அவர்களைப் போலவே செய்வதை காப்பி அடிப்பது அல்லது நகல் மாதிரி என்று சொல்லலாம். காந்தி, கலாம், அன்னை தெரஸா, பகத் சிங் போன்ற மனிதர்களி காப்பியடிக்கும்படியான மனிதர்கள் எல்லாம் இந்த மண்ணிற்கு இன்னும் வேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்.



   உங்களின் கவிஞர் தணிகை.

Sunday, March 20, 2016

முன்பு நினைத்திருந்ததைவிட மனித மூளையின் கொள்ளளவு பத்து மடங்கு பெரியது

thanks: e life
Thinakaran


முன்பு நினைத்திருந்ததைவிட மனித மூளையின் கொள்ளளவு பத்து மடங்கு பெரியது என ஆய்வில் தெரியவந்துள்ளது. நினைவுகள் சேமிப்பதற்கான பொறுப்பு மூளையின் இணைப்புகளுக்கே உள்ளது. இரண்டு நரம்பு செல்களுக்கும் இடையே உள்ள இணைப்பின் (சினாப்ஸிஸ்) சேமிப்பு திறனை அளவிட்டு ஆராய்ந்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.

சராசரியாக ஒரு சினாப்ஸிஸ், 4.7 பிட்கள் தகவல்களை வைத்திருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, மனிதனின் மூளை ஒரு பெடாபைட் (petabyte) அல்லது 1,000,000,000,000,000 பைட்டுகள் திறனுடையது என்று அர்த்தம்.

ஒரு பெடாபைட் என்பது சுமார் 20 மில்லியன் நான்கு டிராயரில் ஃபில்லிங் காபினெட்டுகள் முழுவதும் உரையால் நிரப்பப்படுவது போல அல்லது 13.3 ஆண்டுகள் எச்டி-டிவி பதிவுகளுக்கு சமம். இது நியூரோ சயின்ஸ் துறையில் ஒரு உண்மையான அதிர்ச்சி தகவல் ஆகும் என்று சல்க் நிறுவனத்தின் பேராசிரியர் மற்றும் eLife பேப்பரின் இணை மூத்த எழுத்தாளரான டெர்ரி செஜ்நோவ்ச்கி கூறியுள்ளார். 

மூளைப் பின்மேட்டில் உள்ள நரம்புகளின் செயல்பாடுகள் குறைந்த சக்தியை கொண்டு எப்படி உயர் கணக்கீட்டு ஆற்றலை வெளிப்படுத்துகிறது என்ற வடிவமைப்பு கோட்பாட்டை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். மின்சாரம் மற்றும் இரசாயன நடவடிக்கைகளின் வடிவங்களாக நம்முடைய மூளையில் நினைவுகள் மற்றும் எண்ணங்கள் வெளிப்படுகின்றன. 

மின் கம்பி போன்று காணப்படும் நரம்பு கிளைகள் சில சந்திப்புக்களுடன் தொடர்பு கொள்ளும் போது ஒரு முக்கிய செயல்பாடு நடப்பதை சினாப்ஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. ஒருநரம்பிலிருந்து  ஒரு வெளியீடு, 'கம்பி' (ஒரு நரம்பிழை (axon)) இரண்டாவது நரம்பிலிருந்து ஒரு உள்ளீடு 'கம்பி' -ஐ (ஒரு சிறு நரம்பு இழை (dendrite)) இணைக்கிறது.

சிக்னல்கள் சினாப்ஸிஸ் வழியாக பயணிக்கும்போது ரசாயனங்கள் என்று அழைக்கப்படும் நரம்பியக்கடத்திகள், மற்ற நியூரான்களுக்கு ஒரு எலக்ட்ரிக்கல் சிக்னலை தெரிவிக்க வேண்டும் என்பதை, சிக்னல்களை பெறும் நியூரான்கள் சொல்லும். ஒவ்வொரு நியூரானும் ஆயிரக்கணக்கான மற்ற நியூரான்களை கொண்ட ஆயிரக்கணக்கான சினாப்ஸிஸ்/ஐ கொண்டுள்ளது.  

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Saturday, March 19, 2016

தமிழக முதல்வரும் மே.வங்க முதல்வரும் சந்திக்கிறார்கள்(இது ஒரு நகைச்சுவைக் கற்பனை சந்திப்பு) கவிஞர் தணிகை

தமிழக முதல்வரும் மே.வங்க முதல்வரும் சந்திக்கிறார்கள்(இது ஒரு நகைச்சுவைக் கற்பனை சந்திப்பு) கவிஞர் தணிகை

அக்கா நல்லா இருக்கீங்களா? 
அக்கான்னு சொல்லாதே மமதா, மமதையில்,அம்மான்னு சொல்லு...CM of Tamil Nadu இல்லை தமிழ் நாட்டு சி.எம்னு சொல்லு அதென்ன அக்கா சொக்கானு அதெல்லாம் பிடிக்காது.

எனது தமிழ் வம்சத்தில் பிறந்த என் சம்பந்தி சிவாஜி வீரபாண்டிய கட்டபொம்மன் பேனர்ஜி துரையை எப்படி வீரமாக எதிர் கொண்டார் என்று உனக்குத் தெரியாது..

 என்ன விட 7 வயசு சின்னவ  நீ. இருந்தாலும் நீ கூட முதல்வராயிட்டியே? 2 ஆம் முறை முதல்வராயிடுவியா? நிலை எப்படி?மே.வங்கத்தில்..

மறுபடியும் முதல்வர் ஆயிடுவேன்னுதான் நினைக்கிறேன், எங்க அதுக்குள்ள இந்த கம்யூனிஸ்ட் தொந்தரவும், நாரதர் தொந்தரவும் அதிகமா இருக்க,



எப்படி நீ தேர்தல் அறிவிச்ச ஒரு மணி நேரத்திலேயே வேட்பாளர் போட்டுட்டே எல்லாத் தொகுதிக்கும்?

எல்லாம் எதிர் கால தொலை நோக்குத்தான் அம்மா...

அதெல்லாம் சமாளிச்சிடுவேன் சுலபமா, ஆனால் எங்க ஆளுங்க வாங்கற கொஞ்ச இலஞ்சமும் வெளியே காண்பிக்கிறான், நீங்க எப்படித் தான் பல்லாயிரம்கோடி  வாங்கி விஷியம் வெளி வராத சமாளிக்கிறீங்களோ?

என்னது என்னது? ...



பல்லாயிரம் இலட்சம், கோடி என வாக்கு வாங்கி சமாளிக்கிறங்களோன்னு கேட்டேன்.. 

எல்லாம் அடிமைங்க செய்வாங்க...எல்லாமே அம்மா வரட்டுன்னு காத்திருப்பாங்க...என் பேர் எல்லாவற்றிலும் இருக்கும் என் படம் எல்லாவற்றிலும் சிரிக்கும். ஆனால் நான் சம்பளம் கூட வாங்குவதில்லை ஏழைக்காகவே வாழ்கிறேன். ஏழைகளின் குழந்தைகளின் பிஸ்கட் வாங்கத்தான் இப்போது கூட சம்பளம் வாங்குகிறேன். என் பேர் இலஞ்சம் ஊழல் எதிலுமே இருக்காது. உச்ச நீதிமன்றம் கூட விட்டு விடும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது..

உங்களை பிரதமராக இருக்கலாம் என அப்போதே வரவேற்றேன், 2014ல் ஆனா இந்த மோடி விடலை. என்னதான் இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதானே?இப்போ நீங்க அடுத்த முதல்வராக வாய்ப்பிருக்கா?

அந்த டில்லி வழக்கும், அந்த உச்சிக் குடுமி நீதி(மன்ற) குமாரசாமிகளை எல்லாம் சும்மா கண்ணடிக்கும் நேரத்தில் விலைக்குவாங்கிடுவேன் ஆனா(ல்)  இந்த வீணாப்போற தமிழக குடிகார மக்களும் இந்த முறை என்ன செய்யுதுங்களோ?ஆனாலும் எல்லாக்கட்சிகளும்  தனித் தனியா நிக்கற நம்பிக்கை . ஸ்கோப் நிறைய இருக்கு பார்ப்போம் ...

நீ 
என்ன ஸ்லிப்பர் எல்லாம் போட்டுக்கிட்டு தினசரி மார்க்கெட்டுக்கு நீயே போறியாமே? எங்க‌ பேரையே கெடுத்து விடுவாய் போலிருக்கே?

நீங்க சென்னை வெள்ளம் வந்தப்பக் கூட கால் பதிக்கலையாமே?

எங்க போனாலும் எனக்கு ‍விமானம் வேண்டும், குறைந்தது ஒரு ‍ஹெலிகாப்டராவது வேணாமா?

எனக்கு அதெல்லாம் வேண்டாம், கம்யூனிஸ்ட் மட்டும் மறுபடியும் தலை எடுக்காமல் இருந்தால் போதும்...

உங்க பிரண்ட் விஜய் மல்லைய்யா பெரிய செய்தி ஆயிட்டாரே? 

உதிர்ந்த மறைந்த கிங்க் பிஷர், கிக் பிஷர் நியாயம் எல்லாம் வேண்டாம். மை பிபி வில் பீ ரெய்ஸ்ட்...(I am very concern about my health and BP)

உன் கட்சியில் இருந்த பிரணாப் குடியர‌சுத் தலைவராய் ஆயி பீரியட் முடியபோகுது, நீ வெறும் ரெயில்வே மந்திரி, முதன் மந்திரியோட சரியா? பெரிய ஆசையே இல்லையா?
நீ ஆதரித்த அப்துல் கலாம் "லோ எய்ம் இஸ் கிரைம்னு"(Low Aim is Crime) சொல்லலையா அதெல்லாம் உனக்கு சொல்லிக்கொடுக்கலையா?

இல்லம்மா அதெல்லாம் உங்களுக்குத்தான் சரிப்பட்டு வரும், எனக்கு இந்த மேற்கு வங்க முதல்வராகவே மறுபடியும் ஆனா போதும், நீங்க உங்க எம்.ஜி.ஆர் தலைவர் மாதிரி மறுபடியும் இந்த முறை தொடர்ந்து ஜெயிப்பீங்களா?

இந்த சென்னைக் கோட்டை இல்லைன்னா என்ன பெங்களூரு, டில்லின்னு இருக்கவே இருக்கு....

ஓகே பை டைம் ஓவர், வெயில் தாங்கலை
கொட நாடு எஸ்டேட் கிளம்பறேன்
இந்த முறை ஜெயிச்சவுடன் தமிழகத் தலைநகராக கொடநாடு எஸ்டேட் இருக்கற ஊட்டியை பண்ணிடறேன்...வெயில்காலத்துக்கும் எல்லாக்காலத்துக்கும் ஏற்றதா இருக்கும்

உங்களுக்கென்ன தமிழகத்துக்கே கடவுள் நீங்கதானே?எல்லாம் செய்யலாம். எங்கும் நிறைந்த ஏகாந்த சக்தி... எனக்கு நிறைய வேலை இருக்கு. நீங்க சுற்றுப்பயணம் போகமலே ஜெயிப்பீங்க,,, எனக்கு நிறைய தேர்தல் வேலை இருக்கு பம்பரமா 2 மாதம் சுற்றவேண்டும்... அதுவும் இந்தக் கோடையில...கொடையில இல்ல...

அக்கா சாரி அம்மா டில்லி வந்தா டார்ஜிலிங் வாங்க,பெங்களூர் வந்தா மைசூரு போற மாதிரி...
எல்லாம் வரலாம் தான் ஃபிரி(Free) ஆனா,இந்தமுறை தமிழக மக்கள் ஃபிரி(Free) பண்ணிடுவாங்கன்னுதான் நினைக்கிறேன்.

ஆனா இந்த சசி சரியா புரொகிராம்(program) பண்றதேயில்லை...பார்ப்போம்..பை..

பைம்மா..

அக்காவும் சாரி(Sorry) அம்மாவும் தங்கையும் சாரி (sorry)மகளும் ஆளுக்கொரு ஸ்டேட் கையிலிருக்கும் தெம்போடு பிரிந்து போகிறார்கள். மறுபடியும் மே..19க்கும் பின் எப்படி சந்திக்கிறார்கள்னு பார்ப்போம்.

Actually all conversation taken place in English only between them.. Both are well versed in English.We only translated all dialogues in our thaminglish for the sake of our post to read you.
thanks. vanakkam.

It is 100% imaginary.with no intention to indicate any leader with motive or  political credits. Author is non- political non-religious and secular.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

thanks: Narada news
facebook.com &
Sasikumar.